0

ஒரு புதிய வேலை தேடுவது என்பது எவ்வளவு கடினமான ஒன்று என்பது தேடி அலைந்தவர்களுக்கு நன்றாக தெரியும். பிறருடன் ஒப்பிடும் போது நீங்கள் எவ்வளவு திறமைசாலியாக இருப்பினும் நீங்கள் நேர்காணலில் உங்கள் திறன்களை நேரடியாக வெளிப்படுத்த முடியும், ஆனால் நேர்காணல் வரை நீங்கள் செல்ல வேண்டுமே.?? எது என்னை நேர்காணல் வரை அழைத்து செல்ல உதவும் என்று கேட்டால் - பிரதானமாக உங்கள் ரெஸ்யூம் தான் வேறொன்றுமில்லை.!

'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்பது போல நீங்கள் உங்கள் ரெஸ்யூமில் சொதப்பினால் ஒட்டுமொத்தமும் சொதப்பலுக்கு உள்ளாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். முதலில் உங்கள் ரெஸ்யூம் படிக்க எளிதாக. எழுத்துப்பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும் முக்கியமாக உங்களுக்கு என்னென்னெ திறன்கள் உள்ளது என்பதை குறிப்பிடும் போது பகுதியில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில், அங்குதான் உங்களின் வேலை கிட்டத்தட்ட உறுதி செய்யப்படும். அந்த 'திறன்கள்' பகுதியில் என்னென்னெ திறமைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டால் உங்களுக்கு 90% வேலை நிச்சயமாக வழங்கபப்டும் என்பதை பற்றிய தொகுப்பே இது.!

#01 அடோப் ஃபோட்டோஷாப்நீங்கள் புகைப்பட எடிட்டிங் அல்லது கிராஃபிக் வடிவமைப்பு போன்ற ஒரு படைப்பாளி வாழ்க்கையை தொடர்ந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி போட்டோஷாப் என்பது ஒரு அடிப்படையான அறிவும் தகுதியும் ஆகும். கூடவே ஒரு பொதுவான தேவையும் ஆகும். இது நீங்கள் படைப்பாற்றல் மிக்கவர் என்பதை எடுத்துக்கூறும் ஆக, உங்களின் ரெஸ்யூமில் போட்டோஷாப் இடம் பெற்றிருந்தால் நீங்கள் தானாகவே முன்னிலை அடைவீர்கள்.

#02 மைக்ரோசாப்ட் எக்செல்நிதி சார்ந்த வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமின்றி தங்கள் நாட்களை ஒரு மைக்ரோசாப்ட் எக்செல் தாளுக்குள் செலுத்தி தகவல் பகுப்பாய்விற்காக செலவிடுகின்ற ஒவ்வொருக்கும் இது அவசியமான தேவையாகும். எக்ஸெல் கற்றுக் கொள்வதின் மூலம் நீங்கள் இந்த வேலை மட்டும் தான் தெரியும் என்ற எல்லையை தாண்டி செயல்படலாம்.

#03 வேறு வெளிநாட்டு மொழிஒரு புதிய மொழியை கற்றல் என்பது ஒரு எளிதான பணி அல்ல; அது உங்கள் மூளையை ஒரு பிட் வற்புறுத்துவதற்கு சமம். ஆனால் இரண்டாவது மொழி கற்றல் என்பது பல நன்மைகளை உங்களுக்கு வழங்கும். ஏனெனில் இருமொழி உள்ளவரிடம் நல்ல நினைவுகள் இருக்கும் கூடவே பல்பணியில் சிறப்பாக செயல்படும் தன்மை இருக்கும். கூடவே, சில வேலைகளுக்கு அதிகம் வரவேற்கப்படுவர்.

#04 வெப் டெவலப்மென்ட்தொழில்நுட்பம் சார்ந்த வேலை செய்பவர்களுக்கு மட்டுமின்றி வெப் டெவலப்மெட் சார்ந்த ஒரு அடிப்படை புரிதல் ஆனது பல்வேறு வேலை வாய்ப்புகளில் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

#05 வேர்ட்பிரஸ்நீங்கள் அச்சு பதிப்பகத்தில் இருந்து டிஜிட்டல் பதிப்பகத்திற்கு மாறும் பத்திரிக்கை துறை ஆசிரியராக இருந்தாலும் சரி அல்லது கல்லூரிக்கு பிந்தைய முதல் வேலை தேடும் ஒரு புதிய பட்டதாரியாக இருந்தாலும்சரி வேர்ட்பிரஸ் அனைத்து அனைவருக்கும் ஒரு வலைத்தளத்தில் வேலை கிடைப்பதை உறுதி செய்யும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஒவ்வொரு உள்ளடக்க மேலாண்மை அமைப்பும் (CMS) மாறுபடும் இருபினும் வேர்ட்பிரஸ் ஆனது அனைத்திற்கும் ஒரு பெரிய தொடக்க புள்ளியாக உள்ளது.

#06 பப்ளிக் ஸ்பீச்நீங்கள் என்ன வேலை, என்ன தொழில் செய்கிறீர்கள் என்பது விடயமே இல்லை, ஒன்று மட்டும் நிச்சயம் - நீங்கள் பெரும்பாலும் உங்கள் பணி வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் பெரிய கூட்டத்தின் முன்னிலையில் பேச வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு முதலில் தயாராகிக் கொள்ளுங்கள். இந்த தயாரிப்பு ஆனது உங்களின் நேர்காணலுக்கும் உதவும். உங்களிடம் அதிக திறன் இல்லாத பட்சத்திலும் உங்களிடம் பப்ளிக் ஸ்பீச் திறன் இருப்பின் உங்கள் குறைகள் மறைக்கடிக்கப்படும்.

#07 எஸ்இஓகிளிக்ஸ், லைக்ஸ் மற்றும் ஷேர்ஸ் என்பதில் தான் உங்களின் வேலையே அடங்கி இருக்கிறதுக்கே என்றால் நீங்கள் தேடல் பொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) என்பதை கற்றிருந்தே தீர வேண்டும். ரெஸ்யூமில் உங்கள் திறமை சார்ந்த தொகுப்பில் எஸ்சிஓ சேர்ப்பதன் மூலம் நீங்கள் ஒரு உயர் டிராபிக் கட்டுரைகள் அல்லது வெற்றிகரமான சமூக ஊடக பிரச்சாரம் செயல்படுத்தும் திறன் மிக்கவர் என்பதை எடுத்துக்கூறும். பெரும்பாலான முதலாளிகள் மேலும் மேலும் எஸ்சிஓ சார்ந்த விடயங்களை கற்றுக் கொண்டே இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#08 கூகுள் அனலிட்டிக்ஸ்ஒருவேளை எஸ்சிஓ பயிற்சியானது உங்களின் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் இருப்பின் நீங்கள் கூகுள் அனலிட்டிக்ஸ் பாட வகுப்பில் சேர்வது ஒரு ஸ்மார்ட் ஆன நடவடிக்கை ஆகும். ஆக இப்போது நீங்கள் உங்கள் கட்டுரைகளை விளம்பரப்படுத்தவும் முடியும், மேலும் எந்த அளவிலான வெற்றியை நீங்கள் அடைகிறீர்கள் எம்மாதிரியான வாசிப்பாளர்களை கொண்டுளீர்கள் என்ற முடிவுகளை ஆய்வு செய்யவும் கற்றுக் கொண்டிருப்பீர்கள்.

#09 தயாரிப்பு மேலாண்மைநீங்கள் இருக்கும் களத்தை மீறிய புதிய யோசனைகளையும், சாத்தியமான முதலீட்டாளர்கள் முன் ஒரு புதிய யோசனையை பெறுவதும் மிகவும் கடினமான ஒரு பணியாகும். ஆக எதை எப்போது எப்படி வெளிப்படுத்த வேண்டும்.? எது உங்களுக்கான சரியான நேரம் என்பதை அறிய உங்களுக்கு தயாரிப்பு மேலாண்மை மிகவும் உதவும், சிலருக்கு இது இயல்பாகவே இருக்கும், அவர்கள் மிகவும் கில்லாடியாக இருப்பர்.

முயற்சிமேற்குறிப்பிட்ட இந்த திறன்கள் மூலம் குறிப்பிட்ட ஒரு வேலை மட்டும் தான் எனக்கு தெரியும், இது மட்டும் தான் எனக்கு வரும் என்ற எல்லையை மீற உங்களுக்கு நிச்சயமாக உதவும் மற்றும் எந்தவொரு வேலையையும் திறம்பட செய்யும் திறனையும் உங்களுக்கு வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். நமக்குள் நிஜமாகேவ என்ன திறமை இருக்கிறது என்பதை அறிய முதலில் நாம் எதையும் விட்டு வைக்ககாமல் முயற்சி செய்து பார்க்க வேண்டும், வாழ்த்துக்கள்.!

கருத்துரையிடுக Disqus

 
Top