வருமான வரியைச் சேமித்து வளமான லாபம் பெற
முடியுமா? முடியும்! ஆனால் அதற்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும். அதற்கு
முன்னால் உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்... வருமான வரி எவ்வளவு
கட்ட வேண்டும். இதற்காக சலுகை என்ன என்று தெரியுங்களா? இதைதான் தெளிவாக
விளக்குகிறார் பொருளாதார நிபுணர் தீபஜோதி சரவணன்.
நிதி ஆண்டு என்பது ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்துவிடும். நம்மில் பலர் வருமான வரியை மிச்சப்படுத்துவதற்கான முதலீட்டை ஆரம்பித்திருப்போமா என்றால் சந்தேகம்தான். கடைசி நேரத்தில் முதலீடு செய்வது மூலம் நிதிச் சிக்கலை சந்திக்கும் நிலையை ஏற்படுத்தும்.
மேலும் சரியான முதலீட்டைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாறும் நிலையும் ஏற்படும். இதற்கு தான் தீர்வு சொல்கிறார் பொருளாதார நிபுணர் தீபஜோதி சரவணன் .
உங்களின் வயது 60-க்குள் இருந்து, இந்த நிதி ஆண்டில் உங்கள் வருமானம் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்போது வருமான வரி கட்ட வேண்டி வரும். இந்த வருமான வரியைக் கட்டாமல் மிச்சப்படுத்த சில பல வழிமுறைகள் உள்ளது. அதில் சில செலவுகளும் பல முதலீடுகளும் அடங்கும் என்பது தெரியுங்களா? தெரிந்து கொள்ளுங்க. அப்போதுதான் உங்களின் உழைப்பில் உருவான சேமிப்பு உங்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பாக இருக்கும்.
ஒருவரின் மாதச் சம்பளம் ரூ.35 ஆயிரம் எனில், அவரது ஆண்டு சம்பளம் ரூ.4.20 லட்சம். இதில் சம்பளத்தில் பிராவிடெண்ட் பண்டுக்காக அந்த நிதி ஆண்டில் ரூ.36 ஆயிரம் பிடிக்கப்பட்டு, வீட்டுக் கடன் வட்டி மற்றும் அசல் சேர்த்து 1.40 லட்சமும் கட்டியிடிருந்தால், வருமான வரி கட்ட தேவை இல்லை.
இது போன்ற பல முதலீடுகளை சம்பளத்திலிருந்து கழித்துக் கிடைக்கும் தொகை ரூ. 2.5 லட்சத்தை தாண்டும்போது அதற்கு வரி கட்ட வேண்டி வரும். வருமானவரியையே உங்கள் சேமிப்பாக மாற்றிக் கொண்டால்... அதற்குதான் சரியான வழிப்பாதையை காட்டுகிறார் பொருளாதார நிபுணர் தீபஜோதி சரவணன் .
மருத்துவக் காப்பீடு அனைவரும் அவசியம் எடுத்து வைத்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் இந்த காப்பீடு என்பது முக்கியமான, அவசியமானதாகும். ஆயுள் காப்பீட்டுக்கு கட்டும் பிரீமியத்துக்கு நிபந்தனைக்கு உட்பட்டு 80சி பிரிவின் கீழ் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும்.
மருத்துவக்காப்பீட்டில் வரிதாரர் தனக்கும் தனது குடும்பத்தினருக்கு எடுக்கும் பாலிசிக்கான பிரீமியத்தில் ரூ.25 ஆயிரம் வரைக்கும் 80டி பிரிவின் கீழ் வரிச் சலுகை பெற முடியும். வரிதாரர் தன் பெற்றோருக்கு இந்த பாலிசியை எடுத்துக் கொடுத்தால், அவர்களுக்கு கட்டும் பிரீமியத்துக்கு ரூ.25 ஆயிம் வரிச் சலுகை பெற முடியும்.
வீட்டுக் கடன் வாங்கி இருந்தால், திரும்ப செலுத்தும் அசலுக்கும் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை உள்ளது. இதில் திரும்பக் கட்டும் வட்டிக்கு தனியே வரிச் சலுகை உண்டு (பிரிவு 24). வீட்டில் குடியிருந்தால் வட்டியில் நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை உண்டு. இதுவே வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், முழு வட்டிக்கும் வரிச் சலுகை உள்ளது.
வேலை பார்க்கும் கணவன் - மனைவி என்கிறபோது, வீட்டுக் கடன் வாங்கினால் சேர்ந்து வாங்குங்கள். அப்போது தனித் தனியாக வரிச் சலுகை பெறுவது மூலம் கூடுதல் வரிச் சலுகை கிடைக்கும். இப்படி உங்கள் வருமான வரியையே உங்கள் சேமிப்பாக மாற்றலாம்.
தொடர்புக்கு: +91 9994176666.

கருத்துரையிடுக Facebook Disqus