0


இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இப்போது பெரும்பாலும் அதிகமாக உள்ளது என கூறலாம். நீங்கள் இரத்தம் கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றால் இந்த பகுதி உங்களுக்கு உதவியாக இருக்கும். இப்போது இந்தியாவில் 12 மில்லியனுக்கும் அதிகமான இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் 9 மில்லியன் இரத்தம் மட்டுமே இருக்கிறது.
இரத்த தானம் செய்வதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


வருடத்திற்கு நான்கு முறை நீங்கள் இரத்த தானம் செய்யலாம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம். ஏனெனில் உங்கள் உடலில் இரத்தம் உற்பத்தியாக போதிய இடைவெளி தேவைப்படுகிறது.


இரத்த தானம் செய்வதற்கு முன்னர், இரத்த தானம் கொடுப்பவரின் உடல் ஆரோக்கியம் பரிசோதிக்கப்படும். இரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் அளவு மற்றும் எடை ஆகியவை முக்கியமாக பரிசோதனை செய்யப்படும்.

 
 
இரத்த தானம் செய்பவரின் வயது 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். 45 கிலோவிற்கு மேல் உடல் எடை இருக்க வேண்டும். 12.5 mg%க்கு மேல் ஹீமோகுளோபின் அளவு இருக்க வேண்டும். இதுவே இரத்த தானம் செய்ய அடிப்படையாக வேண்டியதாகும்.

 
 
இரத்த தானம் செய்வதால் எந்த விதமான பக்க விளைவுகளும் வருவதில்லை. மேலும் இரத்த தானம் செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகின்றது.

 
 
இரத்த தானம் செய்வதற்கு முன்னர் நீங்கள் ஃபிரஷ் ஜீஸ் அருந்தலாம். இது இரத்த தானம் செய்த பின்னர் உங்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் பானங்களை குடிப்பதை தவிர்க்கவும்.

 
 
இரத்த தானம் கொடுப்பதற்கு முன்னர் சாப்பிட வேண்டியது அவசியம். மேலும் இரத்த தானம் கொடுக்கும் முன்னர் மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் கூடாது.

 
 
சான்றிதல் பெற்ற இரத்த வங்கிகளில் மட்டுமே இரத்த தானம் செய்தல் வேண்டும். மருத்துவர்கள் அங்கே இருப்பது அவசியம். மேலும் இரத்த தான முகாம்களில் இரத்த தானம் செய்வதைக்காட்டிலும், மருத்துவமனைகளில் இரத்த தானம் செய்வது சிறந்தது.

 
 
இரத்த தானம் செய்த பின்னர் உடற்பயிற்சி அல்லது கடினமான வேலைகளை செய்ய வேண்டாம். ஓய்வு எடுப்பது சிறந்தது.

கருத்துரையிடுக Disqus

 
Top