முதலில் எல்லாம் ஏதாவது ஒரு தகவல் வேண்டும் என்று கூகிளில் தேடினால் ஆங்கிலத்தில் மட்டுமே வரும், பின்பு படிப்படியாக தமிழ் உள்ளே புகுத்தப்பட்டு இப்போது சங்க இலக்கியம் வரை கூகுளில் தேடினால் தமிழிலேயே கிடைக்கிறது.
ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிகையில் மென் பொருள் உருவாக்கப்பட்ட மொழியாக தமிழ் இருக்கிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மொழி இனி குரல் வளத்தால், வார்த்தை வடிவங்கள் ஆகப்போகிறது. அட ஆமாங்க.
சும்மா நீங்க ” அடடே” என்று ஆச்சரியப்பட்டால் கூட அதையும் அழகு தமிழில் வார்த்தைகளாக மாற்றி விடும் கூகிள்.
இதற்கு முன்பு தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும் என்றால் செல்லினம் போன்ற செயலிகளை உபயோகப்படுத்த வேண்டும்.
தற்போது அதற்க்கெல்லாம் வேலையே இல்லை, கண நொடிப்பொழுதில் ஒரு வார்த்தையை தமிழில் பேசினால் அது அப்படியே வார்த்தைகளாக மாறி விடக்கூடிய புதிய தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள்.
என்ன இருந்தாலும் உலகில் அத்தனை மொழிக்கு பார்த்து பார்த்து செய்யும் போது, தொன்மை மிக்க தமிழை விட்டு விடுவார்களா என்ன..?
கூகுள் இணைய தளத்தின் மூலம் தேடுதல் நடத்த குரலை உபயோகப்படுத்தலாம் என்பது தெரிந்ததே.
தற்போது இதில் தமிழும் இணைக்கப்படுள்ளது. இதன்படி வாய்ஸ் செட்டிங் மெனு மூலம் மொழிகளில் ஒன்றை தேர்வு செய்து உபயோகப்படுத்த முடியும்.
இந்த மொழிகளைக் கொண்டு குரல் மூலம் ஜி போர்டு மூலம் அந்தந்த மொழிகளில் தட்டச்சு செய்யவும் முடியும்.
ஏற்கனவே தமிழில் தட்டச்சு செய்வோர் செல்லினம் போன்ற ஆப்களை நிறுவுவதன் மூலமே செய்கிறார்கள்.
இனி ப்ளே ஸ்டோரில் ஜிபோர்ட் டவுன் லோட் செய்து அதில் மொழியில் தமிழை தேர்ந்தெடுத்தால், நாம் பேசுவதை அந்த செயலி டைப் செய்து விடும்.
இந்த மொழி தேடலை விரைவில் கூகுள் மொழிமாற்ற செயலியிலும் சேர்க்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவிக்கின்றது. இத்துடன் கூகுள் குரல் தேடலுக்கான மொழிகள் 119 ஆகி விட்டது.
கருத்துரையிடுக Facebook Disqus