0

லைசென்ஸ் காணாமல் போய்விட்டது என கவலையா..? இனி இணையத்திலே விண்ணப்பிக்கலாம்

ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டால், காவல்துறை இணையதளம் மூலம் விண்ணப்பித்து சான்றுபெறும் சேவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, eservices.tnpolice.gov.in என்ற காவல்துறை இணையதளத்தில் சென்று பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.‌



ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் காணாமல் போய்விட்டால், காவல்நிலையத்தில் காணாமல் போனதற்கான சான்றுபெற்று உரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதுதான் நடைமுறையாக இருந்து வந்தது. அதனால், ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் வகையில் இணையதளம் மூலம் விண்ணப்பித்து சான்று பெற தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.



ஓட்டுனர் உரிமம் தொலைந்து விட்டது என்றால் முதலில்  eservices.tnpolice.gov.in தமிழ்நாடு காவல்துறை இணையதளம்  சென்று அதில் LOST DOCUMENT REPORT என்பதை சொடுக்கி சென்றால் தோன்றும் பக்கத்தில் உங்கள் தகவல்களை கொடுக்க வேண்டும்இந்திய அரசால் வழங்கப்பட்ட ஆவணம் பதிவேற்றவும். உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசி என் கொடுத்து  send OTP கொடுக்கவும். 

 உங்கள் கைபேசிக்கு ஒரு OTP வரும், அதை கீழ்க்கண்ட பெட்டியில் பூர்தி செய்து உங்கள் புகார் விண்ணப்பத்தை பெறலாம். 

கருத்துரையிடுக Disqus

 
Top