0

புதுவரவு பட்டாசுகளை எதிர்பார்த்திருக்கும் சிண்டு, வாண்டுகளே....

தல தீபாவளி கொண்டாடும் புது தம்பதிகளே.....

மகள், பேரன், பேத்திகளை, எதிர்பார்த்திருக்கும் பெருசுகளே.....

புதுப்பட முதல் ஷோ டிக்கட்டுக்கு காத்திருக்கும் இளசுகளே....

ஜிமிக்கி கம்மல் அப்பாகளே...

விடுமுறை தினத்திலும் சலிக்காமல் வீட்டு வேலை செய்யும் அமாக்களே...

புது துணிகளில் வளம் வரும் மாமன்/அத்தை பொண்ணுகளே....

பட்டாசு போல கவலைகள் சிதறட்டும்,

மத்தாப்பாய் மகிழ்ச்சி பொங்கட்டும்,

இனிப்பாய் வாழ்க்கை தித்திக்கட்டும்.

அனைவருக்கும் என் இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள்...
 
  
5 am - ஒரு எண்ணை குளியல் மற்றும் அனுஷ்டானம்
6 am -  முதல் பில்டர் காப்பி
6.30 am- வாசல்ல போட்ட கோளத்த வேடிக்கை பார்ப்பது
7 am - A2Bயில் வாங்கிய இனிப்புகளை சுவைத்து
7.30 am - இரண்டாவது ஒரு காப்பி
8 am- இட்லி, தோசை மூணு வகை சட்னி
9 am - பக்கத்து வீட்டு முறுக்கு
10 am - 2 பீஸ் 7கப்  கேக்
10.30 am - ஒரு டம்ளர் போன்விட்டா
11 am - கொஞ்சம் பட்டாசுகள் வெடிக்கனும்
11.30 am - ஜில்னு ஒரு டம்ளர் எலுமிச்சை சர்பத்
12 noon- எதிர் வீட்டு ஜிலேபி
1 pm- வட, பாயாசம், பச்சிடி, கூட்டு, ஊறுகாய், அப்பளம், சாப்பாடு, சாம்பார், ரசம், தயிர்.
1.45 pm - கிர்னு ஒரு ஏப்பத்துடன் ஒரு ஸ்வீட் பீடா
2 pm- ஒரே ஒரு ரவ லட்டு
3 pm - சூடா கொஞ்சம் பகோடா
3.30 pm - ஒரு டம்ளர் ராகிமால்ட் சைடு டிஷ் கிபிட் பாக்ஸ் நட்ஸ்
5 pm- லைட்டா ஒரு பில்டர் காப்பி
6 pm- பகோட கடுசுட்டு டீவில ஒரு படம்
7 pm- ஒரு அதிரசம், ஒரு லட்டு, ஒரு பாதுஷா, ஒரு முறுக்கு.
8 pm- மத்தாப்பில் தொடங்கி ராக்கெட்டில் முடிக்கணும்
9 pm- தோச, தேங்காய் சட்னி, மதியம் செய்த சாம்பார்.
10 pm - சும்மா டைம் பாசுக்கு கொஞ்சம் முறுக்கு.
10.30 pm - ஜீரணம் ஆகா ஒரு டம்ளர் லெமன் டீ
11 pm  கொரட்ட விட்டுட்டு ஒரு ஜம்னு தூக்கம். 

கருத்துரையிடுக Disqus

 
Top