"எனக்காக விட்டுக் கொடுத்தே பழகியவள்
என்னை விட்டுக் கொடுக்க பழகாதவள்"
#அம்மா
------------------------------------------------------------------------------------------------------------
என்னை விட்டுக் கொடுக்க பழகாதவள்"
#அம்மா
------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 9 “# X” மொழி"
அப்பறம் என்ன நடக்கும் வீட்டுக்கு வந்ததும் நான் வைத்திருந்த எல்லா wwe கார்டையும் என் அம்மா கத்திரியால் வெட்ட தொடங்கினாங்க. என் அப்பா என்னைப் பார்த்து முறைக்க நான் என் பாக்கெட்டில் வைத்திருந்த கடைசி அண்டர்டேக்கர் கார்டையும் எடுத்து டேபிளில் வைத்தேன்.
அப்பா : அவ்வளவுதானா ?
நான் : மெளனமாக "ம்"
அப்பா : உண்மைய சொல்லு.... இல்ல இங்க நடக்குறதே வேற ?
கடைசியாக அம்மா அண்டர்டேக்கர் கார்டை வெட்ட எடுத்தாங்க .
நான் : அம்மாமாமா....
அம்மா அப்பாவை பார்க்க
அப்பா : இந்த தடவ உங்க அம்மா உனக்கு சப்போட் பண்ண மாட்டா.
அம்மா : விடுங்க இவன் சின்ன பையன் தானே. இத பெருசு பன்னவேண்டாமே.
அப்பா : கொஞ்சம் அதட்டலாக “அத வெட்றையா இல்லையா” இப்ப இருந்து இது மாதிரி ஏதாவது இருந்துச்சுனு நான் பாத்தேன்னா உன்ன கொன்னே போடுவேன்.
அம்மா : கொஞ்சம் பாத்து மெதுவா பேசுங்க. இவன் நம்ம பையன், எதோ திருடன விசாரிக்கிற மாதிரி இருக்கு.
அப்பா : எல்லாத்துக்கும் காரணம் நீ தாண்டி . நீ குடுக்குற செள்ளத்துல தான் இவன் இப்படி கெட்டு போறான். இவனுக்கு செலவுக்கு கூட காசு கொடுக்காத.
அம்மா வெருக்கென அந்த கார்டையும் வெட்டிடாங்க.
அப்பா : "இன்னும் ஏன்டா இங்க நிக்குற. போ.. போய் ஒழுங்கா படிகிற வேலைய பாரு" என என்னை அதட்டினார்.
வாடிய முகத்துடன் நான் என் ரூமுக்கு போய் ஸ்டடி டேபிளில் உக்காந்தேன் பின் என் பேக்கை திறந்ததும் ஒரு #X கடிதம் இருந்தது. இப்ப இருக்குற நெலைமைக்கு இது ஒரு கேடா. இந்த சாமிநாதனுக்கு வேற வேலையே இல்லையா என்ன மொக்க போட்டிருக்கானோ, என விருப்பமில்லாமல் அதை விரித்து பார்க்க “SORRY” என் இருந்தது அது செல்வா எழுதியது. அதை பார்த்ததும் எனக்கு கோபம் தான் அதிகம் வந்தது. அதை கசக்கி வீசினேன். சேரில் உட்காந்து பொறுமையா யோசித்தேன். முல்லை முல்லாலதான் எடுக்கணும்.
ஒரு பேப்பரில் #X மொழியில் ஒரு மொட்டை கடிதம் எழுதினேன். “ஹாய் செல்வா, ரொம்ப நாளா நான் உன்னை உனக்கே தெரியாமல் உன்னை பின்தொடர்கிற ஒரு பொண்ணு. உன் நேர்மையும், பண்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உன் தோழியாக இருக்க ஆசை படுறேன் நான் உன்ன தனியா பாக்கணும். நாளைக்கு புது கட்டிடத்தின் மாடிக்கு 5.30 வா.. இப்படிக்கு உன்னை உண்மையாக விரும்பும் தோழி. நீ இதுக்கு சம்மதம் என்றால் இன்னிக்கு மதியம் சாப்பிடும்போது மப்ளர் கட்டியிருக்கணும்”
இன்ட்றவள் டைமில் யாருக்கும் தெரியாமல் செல்வாவின் ஒரு புத்தகத்தில் அந்த கடிதத்தை நான் வைத்துவிட்டேன்.
அந்தவழியாக வந்த சைன்ஸ் மிஸ் என் வகுப்புக்குள் வர நான் மட்டும் தனியாக இருந்தேன். ஒருநிமிட பயத்தில் வேர்த்து விருவிருத்திட மெதுவாக எழுந்து நின்றேன். ஆஹா இப்பவும் இந்த மிஸ் கிட்ட மாட்டிகிட்டமா!!!!!!!!!!
அடுத்த பகுதி "கிருத்தியின் பார்வையில் நான்".........
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"உன்னிடம் மட்டுமே
என் செல்ல கோவத்தையும்
என் குழந்தைதனத்தையும்
வெளிபடுத்துகின்றேன்
உன்னை விட எனை புரிந்து
கொள்ள இவ்வுலகில் வேறு
யாரும் இல்லை😔😔"
என் செல்ல கோவத்தையும்
என் குழந்தைதனத்தையும்
வெளிபடுத்துகின்றேன்
உன்னை விட எனை புரிந்து
கொள்ள இவ்வுலகில் வேறு
யாரும் இல்லை😔😔"
கருத்துரையிடுக Facebook Disqus