Last Updated: திங்கள், 4 டிசம்பர் 2017 (20:42 IST) உலகின் முதல்
எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு இன்றோடு 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. ஆம்,
டெக்ஸட் மெசேஜ்களுக்கு இன்றோடு 25 ஆண்டுகள் ஆகி விட்டதாம். உலகின் முதல்
மெசேஜ் கணினியில் இருந்து வோடபோனுக்கு தான் அனுப்பப்பட்டதாம்.
1992 ஆம்
ஆண்டு, நெயில் பாப்வொர்த் என்ற பொறியாளர் தன்னுடைய நண்பருக்கு கிறிஸ்துமஸ்
வாழ்த்தை மெசேஜ் மூலம் அனுப்பியுள்ளார். இதுதான் முதல் டெக்ஸ்ட் மெசேஜ்.
இதற்கு பின்னர், நோக்கியா மொபைல் 1993 ஆம் ஆண்டு, தன்னுடைய மொபைலில்,
மெசேஜ் வசதியை கொண்டு வந்தது. வோடபோன் நிறுவனம் 1980-களில் வந்துள்ளது.
முதல் மெசேஜ் அனுப்பிய பாப்வொர்த் இது குறித்து கூறியதாவது, உலகில் முதன்
முதலாக நான் தான் மெசேஜ் அனுப்பியதாக கருதி மகிழ்ச்சியடைவேன்.
மேலும், இன்று மெசேஜ், எமோஜி என்பது இவ்வளவு பிரபலமாக மாறும் என்பது
அப்போது எனக்கு தெரியாது. இதற்கு இவ்வளவு சக்திகள் இருப்பது ஆச்சரியம் என
தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக Facebook Disqus