0

"காதல் ஏன் வருகிறது, எப்படி வருகிறது என யாருக்கும் தெரியாது, அதேபோல வந்த காதல் எதனால் சொதப்பியது, எந்த வழியில் விட்டு ஓடிப் போகிறது என்றும் புரியாது."
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 17 சண்டையும், சமாதானமும்"

எங்க அப்பாவுக்கு என்ன எப்படியாவது ஒரு இஞ்ஜினியராக்கனும்னு கனவு, ஒருவழியா பத்தாம் வகுப்பு முடிந்தது. என்னதான் பப்புவ மறக்க விடுதியில சேர்ந்தும் அடிக்கடி அவளது நினைவுகள் வந்தது. இருந்தும் அவளை எங்கு தேடுவது என்றும் தெரியவில்லை. முலாண்டு விடுமுறையில் மீண்டும் ரஞ்சித் நட்பால் விடுதி படிப்பே வேண்டாம் என முடிவு செய்தேன். பதினொன்னாம் வகுப்பு கோயம்பத்தூர்ல இருக்கிற ஒரு பெரிய மேட்ரிக்குலேசன் பள்ளியில் என்னை சேர்த்தார். எங்க அப்பா என்னவச்சு கண்ட கனவெல்லாம் அவர் கால் தூசாகமாத்திவைத்த என் ஒரு காதல் பிறந்த காலம் இது. 

"அன்டார்டிகாவில் ஒரு மரம் கூட இல்லை.**
ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.**
பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை. **
என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை." 


ஒன்பதாம் வகுப்பு வரை எங்க ஊர்ல சின்ன ஸ்கூல்ல எல்லாருக்கு சேட்டை செஞ்ச பையனா தெரிந்த முகமாய், வாத்தியார்களுக்கு ரொம்ப செல்ல பிள்ளையாக இருந்து வந்த நான், சின்ன சின்ன காதலைக் கடந்து, ஒரு வருட விடுதிப் படிப்பை முடித்து திடீர்னு இவ்லோ பெரிய ஸ்கூல் பசங்க பொண்ணுங்க கடலுக்குள்ள ஒரு சின்ன மீனா இருந்த நேரம். 

ஸ்கூல் சேர்ந்த ஒரு வாரத்துல என்ன சுத்தி ஒரு நண்பர் கூட்டம் சேந்திருச்சு, அதுல ஒருத்தன் தான் குமார். குமாரபத்தி சொல்லனும்னா அது பலகிலோமீட்ட போர கதையாக இருக்கும் அதனால இப்போதைக்கு என் காதல் கதைக்குள் வருவோம். என்னைச் சேர்ந்த கொஞ்ச நண்பர்களை கூப்பிட்டுக் கொண்டு காலையில் வெளியில் மைதானத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். 

“என்னடா மாப்பு, உங்கள் ஸ்கூல்ல சேர்ந்ததே சில பல பிகருங்கள பாத்துதான். ஆனா ஒன்னு கூட நம்ம கிளாஸ்ல இல்லையேடா” இந்த ஸ்கூல்லியே பல வருசமாய் படித்துக் கொண்டிருந்த குமாரிடம் கேட்டேன். 

“அதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும் மச்சான். மேக்ஸ் குரூப் எல்லாம், படிக்கிற புள்ளைக தான் எடுக்கும். என்ன பண்றது, அழகா இருக்கிற எவ படிக்கிறா? எல்லாம் தேர்ட் க்ரூப்ல ஒக்காந்து இருக்காளுங்க பாரு” என  குமாரின் வயித்தெரிச்சல சொன்னான். 

அப்பத்தான் ஜில்லுனு மெல்லிய காற்று என் மேல் மோத அவள் எங்களைக் கடந்து போனாள், அவள் அப்பாவுடன். 

சினிமா படம்மாதிரி ஹீரோயின் இன்றோக்கு பின்னணியில் ஒரு பாட்டு வேண்டாமா.... 

“காற்றே சரி சரி கம சரி கம
பூவே கம கம கம கம
நதியே கள கள கள கள
மழையே சல சல சல சல
இசையே தக்க தக்க திமி தக்க திமி
கவியே சந்தங்கள் கொஞ்சி
முகிலே சிறு சிறு சிறு சிறு
அணிலே துரு துரு துரு துரு

என் ஜன்னல் வந்த காற்றே
ஒரே தேநீர் போட்டு தரவா
உன் வீட்டில் வந்து தங்க
பெண் தோழியை நானும் தரவா” ..........................

நீல நிற சுடிதாரில், அந்த வானில் இருந்து இறங்கி வந்த தேவதை போல என்னைக் கடந்து சென்றால். 

குமாரிடம், “மாப்பு இவ மட்டும் நம்ம கிளாஸ் வந்தான்னா, சத்தியமா ஒரு நாள் கூட கிளாஸ் கட் அடிக்க மாட்டேண்டா”. 

“டேய்! இப்பத்தானே சொன்னேன், அழகான பொண்ணுங்க எவளும் உருப்பிடியா படிக்க மாட்டாளுங்கன்னு. எங்க ரிசர்ச் மேலேயே சந்தேகமா உனக்கு?” 

கண்ணை உருட்டி முறைத்தான் குமார்.



அடுத்த பகுதி  " டிங்கு டைரி - 19 நிழலாடிய சடுகுடு திவ்யா ".........  


முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?

லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது…

எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது. ஆனா நிறைய எழுதுவோம்…

கருத்துரையிடுக Disqus

 
Top