0
நம் கைகளுக்குள் தவழும் ஸ்மார்ட்போன்களானது, அலாரம் - கைக்கடிகாரம் தொடங்கி டிஎஸ்எல்ஆர் கேமரா வரையிலாக அனைத்து இதர கேஜெட்களையும் விழுங்கி தன்னுள் கொண்டுள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

நீங்கள் என்னதான் பெரிய 'கேடி ரங்கா கில்லாடி பில்லா'வாக இருந்தாலும் கூட சில இரகசியமான மற்றும் தந்திரமான ஸ்மார்ட்போன் சீக்ரெட்ஸ்களை அறிந்திருக்க அதிகம் வாய்ப்பில்லை. அப்படியாக, இதெல்லாம் கூட ஒரு ஸ்மார்ட்போன் கொண்டு செய்ய முடியுமா.? என்று உங்களை ஆச்சரியப்படுத்தும் சுவாரசியமான டிப்ஸ்களை உள்ளடக்கியதே இந்த தொகுப்பு.



ஒருவேளை நீங்கள் இருட்டான இடத்தில், விளக்குகள் அல்லாத சாலையில் வாகனத்தை ஓட்டிய அனுபவத்தை கொண்டிருந்தால் உங்கள் கண்களை எப்போதும் சாலையில் வைத்திருப்பது எவ்வளவு கடினமானதொரு பணி என்பதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். இனிமே அந்த கடினத்தன்மையை நீங்கள் உணரவே மாட்டர்கள். அதை HUDWAY என்கிற பயன்பாடு உறுதி செய்யும்.


பிரைட்னஸ் அமைப்புகளை சரி செய்து, இந்த ஆப்பை திறந்து, உங்கள் தொலைபேசியை வாகனத்தின் டாஷ்போர்டில்வைத்தால் போதும் உங்களுக்குத் தேவைப்படும் எல்லா தகவல்களையும் நீங்கள் பெறுவீர்கள்: வாகனத்தின் வேகம் மற்றும் நீங்கள் செல்ல வேண்டிய பாதைகளை காட்சிப்படுத்தும் ஒரு ஜிபிஎஸ்-மேட் வரைபடம் ஆகியவைகளை இந்த ஆப் உங்கள் கண்ணாடியில் ப்ரொஜெக்ஷன் போல காட்சிப்படுத்தும்.


உங்கள் ஸ்மார்ட்போனில் கெஸ்டர் பயன்முறை (அதாவது சைகைகளால் நிகழ்த்தப்படும் கட்டுப்பாடுகள்) இருந்தாலும் கூட அதை எல்லா இடத்திலும், எல்லா நேரங்களிலும் பயன்படுத்த முடியாது என்பதை பயன்படுத்தியர்களுக்கு நன்றாக தெரியும். பல சூழ்நிலைகளில் இந்த சைகை கட்டுப்பாடு பயன்முறையை சிறப்பானதொரு அம்சமாக இருக்காது.


ஒருவேளை நீங்கள் சமையல் மற்றும் சுத்திகரிப்பு போன்ற பணிக்கு இடையே உங்களின் ஸ்மார்ட்போனின் திரையை தொடாமல் மற்றும் அதை ஈரப்படுத்தி விடாமல் அல்லது அழுக்குப்படுத்தி விடாமல் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் Wave Control (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்) என்கிற ஆப் உங்களுக்கு உதவும். இந்த ஆப்பின் பயன்பாடு கொண்டு உங்களால் தொடுதல்களை நிகிலத்தாமலேயே இசை மற்றும் வீடியோக்களை பிளே செய்ய முடியும், அழைப்புகளை நிகழ்த்த முடியும்.

பார்ப்பதற்கு, இதெல்லாம் ஒரு மேட்டரா என்று தோன்றலாம். ஆனால் ஒருமுறை நீங்கள் இதை பயன்படுத்தினால் தான் உங்களுக்கு புரியும். அளவுகள் எடுப்பதென்பது அனுதினமும் நாம் செய்யுமொரு வேலை என்பது. இந்த தந்திரத்தை அறிந்தபின்னர் ஒரு நூலை அல்லது ஒரு நாடாவை தேடி நீங்கள் ஓதவேண்டிய அவசியம் இருக்காது.


நீங்கள் ஒரு பொருளை அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தை துல்லியமான முறையின்கீழ் அளவிட விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் தொலைபேசியின் கேமரா அதற்கு உதவும் என்று கூறினால் நம்புவீர்களா.? Sizeup என்கிற ஆப்பின் உதவியின் மூலம் இது சாத்தியமாகிறது. இந்த ஆப்பை ரன் செய்து அளவிட விரும்பும் பொருளின் முன் கேமராவை ஆன் செய்து காட்ட அளவீடுகள் காட்சிப்படும்.


மிகவும் தேவையான சமயத்தில் உங்களின் ஸ்மார்ட்போன் பேட்டரி இறந்துவிட்டதா.? உங்கள் நண்பர் அல்லது அலுவலக பணியாளரிடம் நீங்கள் அவசரமாக தொடர்பு கொள்ள வேண்டுமா.? கவலையை விடுங்கள். Mightytext என்கிற பயன்பாடு உங்களுக்கு உதவும்.


இது உங்கள் தொலைபேசியை, கணினி அல்லது டாப்ளெட் உடன் ஒத்திசைக்கும், அதன் வழியாக உங்கள் மின்னஞ்சலில் இருந்து எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ்-களை நிர்வகிக்கும் வாய்ப்பை உங்களுக்கு வழங்கும். இந்த ஆப் வழியாக உங்கள் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட அனைத்து செய்திகளும் உங்கள் கணினி திரையில் தோன்றும், மேலும் உங்கள் டெக்ஸ்ட் இன்பாக்ஸிலும் அவற்றைக் கண்டறியலாம்.


அனுதினமும் அவ்வளவு ஏன் அணு ஷணமும் நாம் எல்லோருமே எதோ ஒரு முடிவுகளை எடுத்துக்கொண்டே இருக்கிறோம். எடுத்துக்காட்டிற்கு உங்களின் பிரியமான நபருடன், ஒரு சரியான உணவகத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

கருத்துரையிடுக Disqus

 
Top