ஜெட் விமானங்கள் பறக்கும்போது, அதன் பின்புறத்தில் வெள்ளை நிறக் கோடுகளைப் பார்த்து இருப்பீர்கள். அதைப் புகை என்று நினைத்தால், அது தவறு.
ஜெட் எஞ்ஜின் உள்ளே எரிபொருள் எரியும்போது, அதில் அடங்கி இருக்கும் ஹைட்ரஜனும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனும் சேர்ந்து, நீராவியாக மாறுகிறது. நீராவி வெளியேற்றப்படுவது தான் நமக்கு வெள்ளைப் பட்டையாகக் கோடு வடிவத்தில் தெரிகிறது. சில சமயம், இந்த நீராவி வெளியாகும் பகுதியில் காற்று ஈரப்பதத்துடன் இருந்தால், நீண்ட நேரத்திற்கு இந்தக் கோடு மறையாமலே இருக்கும்.
கருத்துரையிடுக Facebook Disqus