0
Image result for love
"அன்பை வெளிப்படுத்த 
தெரியாத ஆணிடம் தான்,
ஒரு பெண் அன்பை எப்படியெல்லாம் 
வெளிப்படுத்த வேண்டும் என 
கற்றுக்கொண்டு இருப்பாள்...!!" 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 21 திவ்யாவுடன் கைகோர்த்த நிமிடம்"

எப்படியோ குமார் மூலமாக திவ்யா வீட்டு போன் நம்பர் எனக்கு கிடைத்தது. அதற்கு அவனுக்கு டீக்கடையில் ஒரு சின்ன டீரீட் தந்துவிட்டு பேப்பரில் விளம்பரங்களை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு முழு பக்க விளம்பரம் கண்ணில் பட்டது "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி.

குமார் : டேய்.. அது தான் நம்பர் கேடச்சிருச்சுல உன் ஆளுக்கு ஒரு கால் பண்ணுனு என்னை உசுபெத்தினான்.

நான் : டேய் மச்சி.. இப்பவே கால் பண்ணலானு சொல்லுறையா..

குமார் : அப்பறம் பூஜை பன்னுரதுக்கா நான் இவ்வளவு கஷ்டப்பட்டு நெம்பர கண்டுபிருச்சேன்.

நான் : அவங்க அப்பா எடுத்தா என்ன டா பண்ணுறது.

குமார் : அது எல்லாம் தெரியாமையா சொல்லுவோம். அவுங்க அப்பா வீட்டுக்கு வர மணி எட்டாகும் நீ தைரியமா பண்ணுடா..

என் மனதுக்குள் ஒரு படபடப்புடன் பக்கத்தில் இருக்கும் பீ.சி.ஓவில் இருந்து கூப்பிட முதல் காலே திவ்யா அப்பா எடுத்துவிட்டார். என் மனதுக்குள் இருந்த படபடப்பு இன்னும் அதிகமானது.

திவ்யா அப்பா : ஹலோ... 

சில வினாடிகள் என் மூளை அதிகமாக வேலை செய்தது. கண்கள் பக்கத்தில் இருக்கும் அனைத்தையும் ஒரு ஸ்கேன் எடுத்தது. காற்றில் அசைந்து கொண்டிருண்ட நியூஸ் பேப்பரை பார்த்ததும் ஒரு ஐடியா...

நான் : கொஞ்சம் குரலை மாற்றி “ஹலோ திவ்யா வீடா” என் கேட்க. 

திவ்யா அப்பா : இல்ல இது என் வீடு.

நான் : மனதுக்கும் “பெருசுக்கு நக்கலபாறு”. நான் கோடிஸ்வரன் நிகழ்ச்சியில இருந்து பிரகாஸ் ராஜ் பேசுறேன். உங்க பொண்ணு திவ்யா ப்ரெண்டு இப்போது என்கூட ஹாட் சீட்டில் இருக்காங்க, அவங்கள் போன் எ ப்ரென்ட் ஆப்சன் சூஸ் பண்ணிடாங்க. திவ்யா கிட்ட போன குடுக்குறீங்களா.

திவ்யா அப்பா : ஏய் திவ்யா... கோடிஸ்வரன் நிகழ்ச்சியிலிருந்து பிரகாஸ் ராஜ் பேசுறாரு . சீக்கிரம் ஓடி வா..

திவ்யா : ஹலோ.

நான் : இது தான் கேள்வி. நாளைக்கு எப்போது மீட் பண்ணலாம்.

ஆப்ஷன் எ. ஸ்கூலுக்கு போகும் வழியில்... 
ஆப்ஷன் பீ. பஸ் ஸ்டாப்ல்....  
ஆப்ஷன் சி. ஸ்கூலு விட்டு வரும் வழியில்....

திவ்யா : ஆப்ஷன் சி.

நான் : அப்ஷன லாக் பணிடலாமா.

திவ்யா : லாக் பண்ணிடலாம். 

என சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டு புன்முறுவலுடன் திரும்பும் பொழுது திவ்யாவின் அப்பா கொஞ்சம் நில்லு எனச் சொல்ல திவ்யா திரு திருவென முழித்தவாறே திரும்ப. என்ன பா..

திவ்யா அப்பா : நீ சரியான அப்சான தானே சொன்ன.

திவ்யா : ஆமாம் பா. என சொல்லிவிட்டு மீண்டும் புன்முறுவலுடன் சென்றால்.   

அன்றிலிருந்து, பள்ளி முடியும் வரை நாங்கள் இந்த உலகிலேயே இருப்பது இல்லை. வகுப்பு முழுவதும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், மற்ற நேரங்களில் பேசிக்கொண்டும், வீட்டில் இருக்கும்போது அவளை நினைத்துக்கொண்டும் நாட்கள் கடந்தன.

அந்த நாட்களில் எல்லாம், அப்பாவின் கனவு, என் எதிர்காலம் எதுவும் ஞாபகம் இல்லை, எல்லாம் என் அம்மு தான் திவ்யாவை செல்லமா அம்முன்னு கூப்பிடத் தொடங்கினேன். அவளுடைய புத்தங்களிலும் பல இடங்களில் மறைவாகப் பிரபு எனும் என் பெயரை பார்க்கும் போது மனம் துள்ளி குதிக்கும்.
எப்போது +1 முடித்தேன் என்றே ஞாபகம் இல்லை, அதற்குள் +2 பொதுத் தேர்வு வந்து விட்டிருந்தது. வகுப்பில் முதல் மாணவனாக இருந்த நான் சராசரி மாணவனாகி பல நாட்கள் ஆகியிருந்தன. ஸ்டடி ஹாலிடேஸ் எல்லாம் அவள் ஞாபமாகவே கழிந்தது. 

பொதுத் தேர்வு முடிந்து, கொடுமையான விடுமுறைக்காலமும் கடந்து, என் தேர்வு முடிவு நாள் வந்தது. 700 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன் நான்.   வீட்டில் அனைவரும் வருத்தப்பட்டாலும் யாரும் என்னைத் திட்டவில்லை, எப்போதும்போல. பள்ளி சென்ற போதுதான் தெரிந்தது அவளும் 700 மதிப்பெண்கள் என்று. ஏன் என்று தெரியாமல் மனதில் ஒரு மகிழ்ச்சி.

அதற்கு பிறகு நடந்தது தான் நான் எதிர்பாராத ஒன்று. என் அப்பா பலரைப் பிடித்து, கடன் எல்லாம் வாங்கி என்னைச் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் BE சேர்த்துவிட்டார். திவ்யாவின் தந்தையோ சிரமபடாமல் அவளை ஈரோட்டில் ஒரு கல்லூரியில் BSc சேர்த்து விட, எங்கள் பிரிவு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டிருந்தது.

நல்லவேளையாக, அப்போது இருவரும் மொபைல் போன்கள் வைத்திருந்ததால் Airtel CUG தயவில், எங்கள் காதல் தினமும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.  

மூன்று வருடங்களில் அவள் படிப்பு முடிய, நானோ 10 அரியருடன், மூன்றாம் ஆண்டில் இருந்தேன், நான்கு ஆண்டுகளில் படிப்பை முடிப்பேனா என்பது கூட தெரியாமல்.  இருந்தும் என் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. அவள் இருக்கும் வரை என்ன கவலை எனக்கு?.

திடீரென்று ஒரு நாள் அவளிடம் இருந்து அழைப்பு அதுவும் பகலில். (அவள் படிப்பு முடிந்தவுடன் எங்கள் உரையாடல்கள் இரவில் அவள் வீட்டில் அனைவரும் உறங்கியவுடன் தான் நடந்துகொண்டிருந்தது).

அடுத்த பகுதி  " டிங்கு டைரி - 23 மதில்மேல் நின்றவள்".........  

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Image result for love meme tamil


எத்தனை இதழ்கள் இருந்தாலும் 

உன் இதழ்க்குஈடாகுமா என்றுகேட்டது 

-ரோஜா...

கருத்துரையிடுக Disqus

 
Top