பல ஆண்டுகள் எப்படி எப்படியோ ஓடிய நாட்கள், அது எப்போது எப்படி குறைந்தது, அது எங்கு செல்கிறது என்பதை உணராமல் திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டார்கள் என் பெற்றோர்.
திடீரென்று நிகழ்வுகள் ஒரு அலையாய் மாறியது..
என் வெட்டி நேரமாக இருந்தது, இனி பல காய்கறிகளை வெட்டும் நேரமாகப்போகிறது ..
நான் பைக்கில் தனியாக நீண்ட நேரம் சுற்றியது, இனி உறவினர் விசேஷங்களுக்கும் மாளிகைசாமான் வாங்கவுமாக மாறப்போகிறது ..
அழுக்கு ஜீன்ஸ்சில் இருந்து, இனி பிராண்டு துணிகளுக்கு மாறப்போகிறது..
தாபா உணவகத்திலிருந்து, இனி மெழுகுவர்த்தி ஒளி உணவகத்திர்ற்கு மாறப்போகிறது ..
சனிக்கிழமை ஊருக்கு போவது, இனி வெள்ளிக்கிழமை மாலை கோவிலாகப்போகிறது ..
எப்படியும் என்னை நிர்வகிக்க ஒரு MIB பட்டம் தேவை என்று என் பெற்றோர்கள் என்னவளை பார்த்துவிட்டார்கள்.
"கடவுள் மனிதனுக்கு நெருப்பைக் கொடுத்தான் மனிதன் தீயணைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்தான். கடவுள் மனிதனுக்குக் காதலைக் கொடுத்தான் மனிதன் திருமணத்தைக் கண்டுபிடித்தான்"
எனவே என் அன்பான நண்பர்கள் அனைவரும் என் திருமண விழாவில் என்னை சுற்றி இருக்க விரும்புகிறேன் ...
புதிய துவக்கங்கள், புதிய கனவுகளுடன் தொடங்க இருக்கும் எங்கள் திருமணவிழாவை சிறப்பிக்க அன்போடு அழைக்கும் உங்கள் நண்பன் ஆனந்த் மற்றும் கங்கா.
சனிக்கிழமை, மார்ச் 03, 2018
மாலை 6 மணிக்கு மேல்.
(இடம்)
கந்தசாமி கவுண்டர் ராஜமால் கல்யாண மண்டபம்
பல்லடம் - மங்களம் சாலை
63, வேம்பம்பாளணம், திருப்பூர்
வழித்தடம் அறிய உங்களுக்கு கூகிள் மேப் உதவும் : கந்தசாமி கவுண்டர் ராஜமால் கல்யாண மண்டபம்
பேருந்து வழித்தடங்கள்:
திருப்பூரிலிருந்து வரும் பேருந்துகள் : KRG, ஸ்ரீ ராமஜெயம் , மீனாட்சி, ஸ்ரீ ராம் (5), 5, 5A,14.
பல்லடத்திலிருந்து வரும் பேருந்துகள் : P27
கருத்துரையிடுக Facebook Disqus