சஞ்சீவி வேர் என்று பரவலாக விற்கப்படுகிறது. உண்மையில் அது சஞ்சீவி வேர் தானா என்று யாருக்கும் தெரியாமலே வாங்குகிறார்கள். சஞ்சீவி வேர் இறந்தவரையே உயிர்பிக்கும் மருந்து என்று நாம் அனைவருக்கும் தெரியும். இந்த வேரை வாங்கியவர்கள் யாரும் உயிருடன் இருக்கிறார்களா என்றால் அந்த மாதிரி யாரும் இல்லை.
அப்படி இருக்க இப்பொழுது விற்க்கப்படும் வேர் உண்மையில் சஞ்சீவி வேர் இல்லை. வேறு ஏதோ வேரை விற்கிறார்கள். அனுமன் கூட அந்த வேரை மறந்துவிட்டு மலையையே எடுத்துக்கொண்டு போனவர் என்று படித்து இருக்கிறோம் அந்த வேரைப்பற்றி தெரிந்த ஆள் சுக்கிராசாரியார் தான். அந்த வேரை அப்பொழுதே மறைத்துவிட்டார்கள். இன்று தேடினால் கிடைக்காது.
சஞ்சீவி வேரை எடுப்பதற்க்கு ஒரு வழி இருக்கிறது அது என்ன வழி என்று உங்களுக்கு சொல்லுகிறேன். மரங்களில் பருந்து கூடு கட்டும் அந்த கூட்டில் குஞ்சுகளை வளர்க்கும்.
அந்த குஞ்சுகளின் காலை நீங்கள் இரும்பு கயிற்றால் கட்டிவிட வேண்டும். தாய் பருந்து வந்து குஞ்சுகளை பார்த்துவிட்டு அந்த இரும்பு கயிற்றை அவிழ்க்க பல முயற்சிகள் செய்யும் கடைசி வரை இரும்பு கயிறு அறுபடவில்லை என்றால் கடைசியில் அந்த பருந்து போய் ஒரு வேரை எடுத்து வரும் அந்த வேரை கொண்டு வந்து குஞ்சுகள் இருக்கும் கூட்டில் போட்டுவிடும் அந்த இரும்பு கயிறு அறுந்துவிடும். அந்த குஞ்சுகளை அவை அழைத்துக்கொண்டு சென்றவுடன் அந்த கூட்டை அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஒடுகின்ற தண்ணீரில் போட்டால் அதில் ஒரு குச்சி மட்டும் ஒடுகின்ற திசையில் எதிரே வரும் அந்த வேர் தான் சஞ்சீவி வேர்.
பொதுவாக பருந்து கூடு கட்டும் இடம் உயர்ந்த மரங்களின் உச்சியில் தான் கூடு கட்டும் அந்த மரத்தில் ஏறினால் அந்த கூடு கட்டும் இடத்திற்க்கு நம்மால் போகமுடியாது. பருந்து கூடு கட்டிவிட்டால் அது எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அந்த பருந்துவின் கண் அந்த கூட்டின் மேல் தான் இருக்கும். நீங்கள் மரத்தில் ஏற போகும் போதே உங்களை கொத்தி ஒரு வழி ஆக்கிவிடும். இதில் எப்படி போய் குஞ்சுவின் கால்களை கட்டுவது. சாத்தியமே இல்லாத ஒன்று.
ஒடுகின்ற தண்ணீரில் எதிர் திசையில் வரும் வேர் ஒன்று இருக்கிறது அந்த வேர் அனைத்து இடத்திலும் கிடைக்கும் ஏன் சென்னையில் கூட கிடைக்கிறது அந்த வேரை கொண்டு வந்து சஞ்சீவி வேர் என்று உங்களிடம் விற்கிறார்கள் அது போலியான வேர். உண்மையில் சஞ்சீவி வேர் யாரிடமும் இல்லை என்பதே உண்மை.
பருந்துவின் கூட்டை தேவையில்லாமல் ஏறி கலைத்துவிடாதீர்கள் அந்த பாவம் உங்களுக்கு வேண்டாம். மரத்தில் ஏறி கீழே விழுந்துவிடவும் வேண்டாம்.
கருத்துரையிடுக Facebook Disqus