"நாம் கடந்து சொல்லும்
ஒவ்வொரு மனிதனுக்கும்
நம்மை போலவே
ஒராயிரம் பிரச்சினைகள்
இருக்கும் முடிந்தவரை
புன்னகையாவது
பரிமாறி கொள்வோம்:
------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு இதற்கு முந்தைய பதிவு டிங்கு டைரி - 53 காதல்மாளிகையின் முதல் வாசல்
நைட் படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு நெளிந்தேன். திடீரென எனக்கு திவ்யா சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தன. “உனக்கு நியாபகம் இருக்கா பிரபு… கல்ச்சுரல்ஸ்டே அன்னிக்கு….” தலைக்குள் நெறைய்யா கொசுவர்த்திகள் சுழல ஆரம்பித்தது. கல்ச்சுரல்ஸ்டே அன்னைக்கு நடந்தை யோசிக்க ஆரம்பித்தேன்.பன்னிரண்டாம் வகுப்பு கல்ச்சுரல்ஸ் டேக்கு முதல் நாள் இரவு ஹாஸ்டல் ரூமில், ’எதையோ பறிகொடுத்தவன்’ போல் சோகமாக படுத்திருந்தேன். என் நண்பன், ரூம்மேட் குமார், என் தோளை தட்டி எழுப்பி, “டேய், நாங்க சுங்கம் பீட்டர் இங்கிலாந்து ஷோரூம் போறோம். நாளைக்கு கல்ச்சுரல்டேக்கு போடுறதுக்கு. நீ வரல?”
நான் : “ம்ம்ஹூம். இல்லடா.. நான் கல்ச்சுரல்டே ஃபங்ஷனுக்கே வரல.. மூட் அவுட்டா இருக்கேன்?”
குமார் : “ஏண்டா? நாளைக்கு உன் ஆளுகூட கூட ஏதோ டான்ஸ் ஆடப்போறதா பேசிக்கிட்டாங்க? அவள்கிட்ட சண்டையா?”
நான் : “இனிமே அவளை என் ஆளுன்னு சொன்ன கொன்னே போட்ருவேன்? அவளே என்னை நாய் மாதிரி ட்ரீட் பண்றா.. இதுல அவ டான்ஸ் ஆடுனா என்ன? ஆடலைன்னா எனக்கென்ன?”
குமார் : “ஓகே கூல்.. பை..”
கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்தேன். ”அவகிட்ட எத்தனைத் தடவ தான் ப்ரோப்பஸ் பண்றது. பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லணும் அப்புறம் பேசக்கூடாது? ஆனா இவ ப்ரெண்ட்ன்னு சொல்லி குழப்புறா? சிலசமயம் கேவலமா திட்டுறா. இனிமே அவளைப் பார்க்கக்கூடாது, பேசக்கூடாது” எனத் தீர்மானம் பண்ணினேன். ட்ரெஸ் எடுக்கப் போன குமார் பட்டு சட்டை பட்டு வேட்டி என ஒரு ரேஞ்சா எடுத்துட்டு வந்தான். அப்போது எனக்கு ஹாஸ்டல் தொலைப்பேசியில் கால் வந்தது.
திவ்யா : “ஹேய் பிரபு. நான் திவ்யா. நாளைக்கு என்ன ஸ்பெஷல்? எந்த ட்ரெஸ்ல வரப்போற?”
நான் : ”இன்னும் டிசைட் பண்ணல” இன்னும் அதே கடுப்பில் பேசினேன்
திவ்யா : “ஓகே. நாளைக்கு நான் “அழகுமலர் ஆட..அபிநயங்கள் கூட” பாட்டுக்குப் பரதநாட்டியம் ஆடப் போறேன்? நீ பட்டு வேஷ்டி, ஷர்ட்ல வாயேன்? ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் பிரபு. நல்லா இருக்கும்”
நான் : குமார் வாங்கிவந்த பட்டு வேஷ்டி சட்டையை தடவிக்கொண்டே “ஷ்யூர் கண்டிப்பாக” என்று அவள் சொன்ன ப்ளீஸ்ஸில் கரைந்தேன்.
இந்த பசங்களே இப்படித் தான். வீராப்பு பெண்களிடம் செல்லாது. அதுவும் அவள் அழகாக இருந்தால், கேட்கவே வேண்டாம்.
குமார் காலில் விழுந்து அவன் வாங்கினதை போட்டுக் கொண்டு கல்ச்சுரல்ஸ்டே பங்ஷனுக்கு முதல் ஆளாகப் போனேன். அங்கே இங்கே எனச் சுற்றியதில் டான்ஸ் ஆடும் பெண்கள் மேக்கப் அறைக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். ஏதோ ஒரு வீணாப் போன கமிட்டியில் இருந்ததால், அந்த சைட் சுற்றும் ஜூனியர் பசங்களை விரட்டிக் கொண்டிருந்தேன்.
ஒரு ரூமில் இருந்து இன்னொரு ரூமிற்கு மேக்கப் நகைகள் போடுவதற்காக திவ்யா போய்க் கொண்டிருந்த போது, நான் அவளை கவனித்தேன். இத்தனை நாள் சுரிதாரில் பார்த்துக் கொண்டிருந்தவளை முதன்முறையாக அம்சமான பட்டுசேலையில் அழகாகப் பார்த்த போது ”வாவ்வ்வ்வ்” என வாயைப் பிளந்து ரசிக்க ஆரம்பித்தேன். ஆனால் திவ்யா என் காதலை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தபோது “அய்யோ” எனவும் இருந்தது. கொஞ்ச நேரம் பேசினாள். அப்போது எல்லாரும் என்னைப் பொறாமையாக பார்ப்பதுபோல் இருந்தது எனக்கோ பெருமையாக இருந்தது. திவ்யா நன்றாக ஆடினாள். அவள் ஆடியதற்கு என் நண்பர்கள் அவளுக்கு வாழ்த்து சொன்னார்கள்.
இதற்கு மேல் நான் எவ்வளவு யோசித்தும் ஃப்ளாஷ்பேக்கில் நடந்த விஷயங்கள் நினைவில் இல்லை. ”பின் அவ என்ன கல்ச்சுரல்ஸ்டே அன்னிக்கு நடந்ததைப் பத்தி சொல்ல வந்தா?” இந்த குழப்பத்தில் நான் தூங்கிப் போனேன்.
அதிகாலை.. வியாழக்கிழமை. ஒரே ஒரு நாள். இதைத் தாண்டி விட்டால் வெள்ளிக்கிழமை காலை 11.30க்கு சென்னை ஃப்ளைட்.
"க்ளைமேக்ஸ்?? இல்ல க்ளைமேக்ஸ் மாதிரி " அடுத்த பகுதி தொடரும்.........
முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52]
முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52]
------------------------------------------------------------------------------------------------------------
"மற்றவர்களிடம் வெற்றியுடன் தன் உழைப்பை ஒப்பிடாது
தன் முயற்சிக்கு கிடைக்கும் வெற்றியை கொண்டாடுபவனே
அதிசிறந்த வெற்றியாளன் ஆவான்
#வெற்றி "
கருத்துரையிடுக Facebook Disqus