0
Image result for cheque return memes tamil

"உங்களுக்கு ரத்தக்கொதிப்பு ஜாஸ்தியாகி ஆஸ்பத்திரிக்குப் போனீங்களாமே... அப்படி என்ன பிரச்னை...?" 

ஒருத்தன் எனக்கு 1000 ரூபாய்க்கு 'செக்' குடுத்தான். வாங்கி பேங்க்ல போட்டேன்.... 

சரி..... 

அது கையெழுத்து சரியில்லேன்னு ரிட்டர்ன் ஆகிப் போச்சு... 

சரி.... 

பேங்க்லேருந்து மெசேஜ் குடுத்தான். 354 ரூபாய் பிடிச்சிக்கிட்டோம்னு. அதென்ன 354 ரூபாய்னு பேங்க்ல போய் கேட்டேன்... 

என்ன சொன்னாங்க...? 

300 ரூபாய் ரிட்டர்ன் சார்ஜூ. 54 ரூபாய் GST ன்னான். 

அடப்பாவிகளா... 

நீ டென்ஷனாயிடாமக் கேளு...300 ரூபாயே பெரிய கொள்ளை. அதுக்கு GST வரி வேறயான்னு நான் டென்ஷனாகி, செக் குடுத்த பார்ட்டிக்குப் போன் பண்ணினேன்... 

என்னாச்சு... 

அவன் உடனே வந்து 1000 ரூபாயக் குடுத்துட்டான். குடுத்துட்டு அவன் சொன்னான்....

எனக்கு 472 ரூபாய பிடிச்சிட்டாங்க சார்னு... 

எப்படி...? அவன் பேங்க்ல 400 ரூபாய் ரிட்டர்ன் சார்ஜாம். அதுக்கு 18% GST 72 ரூபாய். ஆக...472 ரூபாயாம்... 

அட அநியாயமே... 

1000 ரூபாய் வரவு செலவுல ஒரு சிறு தவறுக்கு ரெண்டு பேருக்கும் அபராதம் 926 ரூபாய். ஒரே 'செக்குக்கு' ரெண்டு இடத்தில ஃபைன் வித் ரெண்டு GST. இதுக்குப் பேரு நாடு முழுதும் ஒரே வரியாம். நம்மள எவ்வளவு கூமுட்டையாக்குறாங்கன்னு நினைச்சு நினைச்சு பிரஷ்ஷர் 190 க்குப் போயிருச்சு. அதான் ஆஸ்பத்திரிக்குப் போயி செக் பண்ணிட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு வர்றேன்... 

சரி..சரி...டென்ஷனாகாதீங்க...ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க...நான் போயி பெட்ரோல் போட்டுக்கிட்டு வந்துடறேன்....லேட்டானா ரேட்டை ஏத்திப்புடுவானுங்க பாவிப் பசங்க.....!

கருத்துரையிடுக Disqus

 
Top