0
Related image
“காதலித்தது என்னவோ நாம், சத்தமே இல்லாமல் திருமணம் முடித்துக் கொண்டன‌ நம் விரல்கள் மாலையாய் மோதிரங்களை மாற்றி!!!”


----------------------------------------------------------------------------------------------------------------------------------

இடம் கோயம்புத்தூர்....  மாலை எட்டு மணி கல்யாண மண்டபம்மே மகிழ்சி வெள்ளத்தில் இருந்தது. கூட்டத்தில் அழகாய் இருந்த அந்த பெண் அடிக்கடி குமாரின் கண்ணில்பட்டாள். இரண்டு மூணு தடவ அவனை பார்த்து மெலிந்தால் சிரிக்கக்கூட செய்தாள். ‘போறதுக்குள்ள அவளை எப்படியாவது தூக்கிற வேண்டியது தான்’ என்று முடிவு செய்தான் குமார் …

பந்தி முடிந்து வரும் வழியில் தனியே மாட்டினாள் அந்த பெண் குமாரிடம் .

குமார் : “ஹாய்.. ஐ ம் குமார்..” என்றபடி அவளிடம் கையை நீட்டினான் ..

அவள் : “ம்..” என்றாள் கேள்வித் தோரணையில்.

குமார் : “ ஓ.. இங்கிலீஷ் தெரியாதா.. உன் பேரு என்னன்னு கேட்டேன்”

அவள் : “ அதற்கும் “ம்..” என்றே பதில் தந்தாள்..

குமார் : “ச்.. தமிழுமா.. ஆப்கா… நாம்..க்யா ஹே..” என்றான் அவனது ப்ராத்மிக் ஹிந்தியை மனதில் கொண்டு வந்து… “ ஹிந்தியும் இல்லைனா என்ன… தெலுங்கா…” " எனக்கு தெலுங்கெல்லாம் தெரியாது.. டி.வி.டியில படம் பாக்குறதோட சரி…"

இதற்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. தலையை திருப்பி யாரையோ தேடினாள்..

கொஞ்ச நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் குமார் ..

குமார் : “ஆங்.. கண்டுபிடிச்சுட்டேன்.. கேரளா… மலையாளம்.. கலரா இருக்கும் போதே நினைச்சேன்… இப்போ சொல்லு.. நிண்ட பேரு எந்தா?”

இப்போது அவள் மெதுவாய் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்..

குமார் : “என் நிலைமை சிரிப்பா இருக்குதா.. இதப்பாரு எனக்கு வேற மொழியெல்லாம் தெரியாது அதனால நீயே சொல்லிடு.. அட்லீஸ்ட் ஏதாவது பேசு அத வச்சாது நீ எந்த மாநிலம்னு தெரிஞ்சுக்கறேன்” என்றான்.

அவள் : “…………..”
Image result for indian marriage small girl

அப்போது அங்கு வந்த சசி “ஐயோ.. ஏங்க அவளுக்கு இன்னும் ஒரு வயசு கூட ஆகலை. பேச்சு வராத குழந்தைய கேட்டா எப்படி பதில் சொல்லுவா? அவ பேரு சுபா” என்றபடி அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனாள் !



Image result for indian marriage early morning

அடுத்தநாள் அதிகாலை 5 மணி மணமேடையில் அமர்ந்திருந்தவனின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் நான் அவளுக்கு தாலி கட்டப்பட்டு கணவனாக போகின்றேன்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது. தொண்டை குழி வழியே எச்சில் முழுங்க கூட முடியாத அளவு பயம் பின்னி பிணைந்தது. இன்றோடு, "என் கனவுகளும், ஆசைகளும் முடிந்துவிட்டது" என்ற நினைத்து பார்த்தேன். அங்க இருந்த எல்லாம் மறைந்து எனக்குள்ள இருந்த ஒரு இருட்டு அறை திரந்தது அதில்......

Image result for dreams

"எதிர் பாராத சமயதில நம்ம சேந்தவங்க இரந்துடாங்கனா ஒரு வலி இருந்தாலும் அது அவங்க விருப்பம் இல்ல அவங்க வேணுன்னு இரகல. ஒருத்தர நாம பிரியணும்னா அது சாதாரண நிகழ்வு இல்ல. ஆயிரம் தடவைக்கு மேல நம்ம மனசு ஒடையனும் அப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா அவங்கள மறப்போம்.

இப்படிப்பட்ட நினைவுகள் மட்டும் இல்ல நீ என்கூட வாழ்ந்த நினைவுகளையும் உன் கால் தடங்களையும் விட்டுட்டு போயிட்ட...

இந்த நினைவுகள் எல்லாம் எப்போ எனக்குள்ள வரும்னா, அது நீ நடந்து அங்க அங்க அழுக்கானத பாக்கும் பொது என் மனசுல இருக்குரததான் அழிக்க முடியல இதவாவது அழிக்கலாங்குற ஆதங்கத்துல என் ரூம சுத்தமா தொடைக்கும்போதும்.

உன்னுடைய குட் மாரினிங் குருந்தகவலை பாத்தே கண்முளுச்சு பழகுன எனக்கு இப்ப அது இல்லாம பொழுதே விடியாத மாதிரி நான் உணரும் போதும்.
நான் சமயலறையில சமைக்கும்போது நீ என்ன பாக்க வந்தா மெதுவா வந்து என்ன பின்னாடியிருந்து கட்டிபயுடிக்கும்போது உன் நிழல் எப்போதுமே எனக்கு முன்கூட்டியே காட்டிகொடுக்கும் அதே நிழல நான் இப்ப தேடும்போதும்.

இன்னிக்கு எதோ நாளாச்சேனு யோசிக்கும்போது அது நீ இந்த ரூம்ல நம்ம திருமண அழைப்பு மாதிரிய எனக்கு கொடுத்தா நாளா இருக்கம்.

கூலிங் பீர் வாங்கிட்டு உன் ஞாபகம் வந்து உன்கிட்ட இத சொல்லனும்னு உனக்குக் கால் பண்ணும்போது உண்மை உணர்ந்து அந்த கால கட் பண்ணும்போதும்.

உன்ன ஈசியா கடந்துடோனு நினைக்கும் ஒரு நாள்ல என் ரூமுக்கு வந்து நீ ஆசையோடு போட்டுக் கழட்டிய என்னோட சட்டை துணியோடு கலந்த என் கண்ணில் படும் அப்போ உன்னுடைய மொத்த ஞாபகமும் ஒரு படம் மாதிரி அந்தச் சட்டை என்னவோ அந்த படத்தை காடுற ஸ்க்ரீன் மாதிரி அதுல ஓடும் அப்போதைக்கு அது போதும் என் மனசு கடந்து ஆர்ப்பரிக்கும்.

நீ ஆறு மாசம் முன்னாடி வாங்கனும்னு நினச்ச ஒரு டாப்ஸ், இன்னிக்கு ஆடி சேல்ல அறுபது சதவீதம் தள்ளுபடினு பாக்கும்போது அத வாங்க முடியாதுன்னு திரும்பும்போதும்..

பேச்சு வாக்குல யாரவது பிரியான்னு உன் பெற சொன்ன உன்னப் பத்தி ஏதாவது சொன்ன, அதுக்கு எந்தச் சலனமும் இல்லாம நான் சிரிப்பேன் பழகியிருக்கும்போதும்.

பிளாக் காப்பி குடிக்கும்போது அதுல இருக்குற கசப்பு உன்ன ஞாபகப்படுத்தும் நீ பேசின சில கசப்பான வார்த்தைகளை ஞாபகப்படுத்தும், அதுக்காக அத ஓரம் வைக்காம அந்த கசப்ப முழுசா எனக்குள்ள எடுத்துக்கும்போதும்.

உன் ப்ரோபைல்ல “பிப்பிள் யு மே நோனு” முகபுத்தகம் எனக்கு எடுத்துக் காட்டும்போது, ஏய் முட்டாள் மார்க்கே இவளாவ எனக்கு தெருஞ்சிருக்கலாம்னு சொல்லுறனு என் மனசுல மைன்ட் வாஸ்ல ஓடும்போதும்.

என் ரசனையும் உன் ரசனையும் ஒண்ணா கலந்திருக்கிற என் பிளே லிஸ்ட் அத்தனையும் அழிச்சுட்டு, நாம சேந்து கேக்காத சேந்து பாடாத புதுப் பாட்டையா தேடி நான் கேக்கும்போதும்.

உன் புகைப்படம் எல்லாம் நிரந்தரமா அழிகிறதுக்கு முப்பது நாள் கெடுள இன்னும் மூனே நாள் தான் இருக்குனு என் ஐபோன் தற்சமயம் அழித்த கோப்பு என்ன எச்சரிக்கும் போது, புகைப்படத்தை மீட்டுடலாம இல்ல அப்படியே விட்டுடலாமானு குழம்பும்போதும்.

கண்ணாடி முன்னாடி நாம ரெண்டுபேரும் நிக்கும்போது நீ என்னைவிட குட்டையா தெரிவானு கண்ணாடியை கொஞ்சம் கீல தள்ளி மாட்டி நான் கொஞ்சம் குனிந்து கண்ணாடியை பார்த்து அத நினைக்கும்போதும்.

அந்த ஆபிஸ் வேலையை விட்டுவிட்டு இன்னொரு நிறுவனத்தில் சேந்த சந்தோசத்தை உன்கிட்ட சொல்லமுடியாமல் தவித்த போதும்.

பார்த்து சிறிச்ச மீம் உனக்கு அனுப்பமுடியலையேனு ஆதங்கப் பட்டபோதும்.

உன் ஞாபக மூட்டையெல்லாம் பிரித்து ஒரு நாள் முழுக்க அத பாத்து அழுது இனி போதுன்னு ஓரங்கட்டினதுக்கு அப்புறம் அடுத்த நாள் என் ரூம வேக்கம் கிலீனர்ல சுத்தம் பண்ணும்போது நம்ம சேந்து பயணித்த முதல் பேருந்து பயணச்சீட்டு வேக்கம் கிலீனராள தெரியாம இழுக்கப்பட்டுக் கசங்கி காணாமல் போயிருக்கும் அப்படி அந்த ஞாபகத்தை அழித்த அந்த அரக்கன் வேக்கம் கிலீனர எட்டி ஒதச்சு தரையில் உருண்டு புரண்டு நான் அழுதபோதும்.
உன் வாசம் போல காத்துல எதோ ஒன்னு என்ன கடந்து போக, ஒருமுறை ஒரேமுறை உன் வாசனையை முழுசா நொகர காத்துகிட்டையும் என் உணர்திரன்கிட்டையும் நான் மன்றாடி கொண்டபோதும்.

நம்ம கண் இமை முடி எப்போது உதிர்ந்து போகுதுன்னு நமக்கே தெரியாது, அது மாதிரி நானே உணராத தருனத்துல நீ வெகுதூரம் போயிருப்ப..

நீ எனக்கு “குட்மார்னிங்” சொல்லாட்டியும் எனக்கு, “குட்” “மார்னிங்” தான்.

இந்த உறவு எனக்கு எப்ப பட்டுபோசுனு தெரியல, பொய்த்துப் போன நம் உறவுல உண்மையான நம் நாட்கள தேடினேன்...

என் வாழ்கையில் இது எல்லாம் இனிமையான பொழுதென்று எனக்குள்ள பச்சை குத்தி வச்சது விஷயம் எல்லாம் இப்போ ஆறாத காயமா மாறியிருக்கு. ஆனா இன்னிக்கு இருக்குற காயம் நாளைக்கு மறையும், புதுத் தோல் பிறக்கும், அது இந்தக் காயம் சரிபண்ணும், அந்த புது தோல் வந்ததுக்கு அப்பறமாவது நான் புது மனுசனா ஆவேனா.

பழையபடி முகக்கணடிய எனக்கு நேரா மாட்டுவேனா..

கூலிங் பீர் வாங்கி அவ நினைவு இல்லாமல் குடிப்பேனா.....

இயற்கை சொல்லுற குட்மார்னிங்க காது கொடுத்து கேப்பேனா....

நம்ம படுச்சு புத்தகமும், பார்த்து ரசுச்ச திரைப்படமும் கடசீல முடுஞ்சுதான் போகும் அதுமாதிரி எல்லத்துக்கும் முடிவு இருக்குங்குற நிதர்சனத்தை புருஞ்சுக்குவேனா....

அவ வருவா, வர்ணம் தீட்டுவானு என் உடலையும் மனசையும் அவளுக்காகத் திறந்து வைத்து காத்திருந்தது போதும், இனி என் வாழ்க்கையை என் விருப்பம்போல நானே வரஞ்சுக்குவேங்குற நாள் வருமா...

இன்னிக்கு கேட்டா என்கிட்ட பதில் இல்ல... எனக்குத் தெரியாது.. இதுமாதிரி பல ஆயிரம் முறை நான் ஒடஞ்சு அழுது எனக்குள்ள இருக்குற அவ முழுசா போனதும் நான் சொல்லுறேன்........................................" 
                                                  
கெட்டிமேளம் கெட்டிமேளமென்று ஐயர் சொன்னதும் தான் என் சுயநினைவுக்கு திரும்பினேன் ..  என் கையில் மஞ்சள் கயிறு...

Image result for என் கையில் தாலி

அந்த மஞ்சள் கயிறு அவள் கழுத்தருகே வரும்பொழுது அவளுக்கு தூக்கு கயிறாய் தெரிந்தது. முதல் முறையாக  அவள் என்னை பார்க்கும் பொழுது இருந்த சந்தோசம் கொஞ்சமும் இல்லை. அவள் முகம் பார்த்தேன் பக்கத்தில், என் பெயர் தவிர ஏதும் அறியாதவள்.

ஒரே மாதத்தில் பெரியோர்கள் நிச்சயித்த திருமணம். என் கண்களிலும் உயிர் இல்லை,  இவளை போலவே என் நிலையம் இருந்தது  பிரியாவை பிரிந்த சோகத்தில் அங்கு என்ன நடக்கிறது என்று கூட உணராத நிலையில் இருந்தேன். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மணமேடைக்கு வரும்பொழுது மட்டும் போலியான புன்னகை இருவர் முகத்திலும் இருந்தது. அணைத்து சம்பிரதாயமும் முடிவு பெற, சுற்றமும் நட்பும் விடைபெற்று சென்றனர். 

புது வீடு, இருவரும் பேசிக்கொள்ள விருப்பம் இல்லை. எங்களை வாழ்த்திவிட்டு பெற்றோரும் விடை பெற்றனர். ஆளுக்கொரு மூலையில், நான் ஒரு புறம் லேப்டாப்பை லொட் லொட் என தட்டிக்கொண்டிருந்தேன்,  எதோ இவள் வாங்க வேண்டிய அடி எல்லாம் இந்த லேப்டாப்  வாங்கிகொண்டிருந்தது போல தெரிந்தது. திடிரென்று என் கைபேசியை எடுத்து, "மச்சி, அதுலாம் ஒன்னும் இல்ல, எதோ பெரிய பிரச்னை மாறி இருக்கு, என பேசிகொன்டே வெளியே கிளம்பினேன்.

"முதலிரவு ... இன்று முதல் இரவு  " அடுத்த பகுதி தொடரும்.........  

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56[57] [58] [59]



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நேரில் சண்டை பிடித்து கொண்டு மனதிற்குள் சமாதானம் செய்வது

கருத்துரையிடுக Disqus

 
Top