ஒருவர் வைத்திருக்கும் பைக்கில் எந்தெந்த பாகங்களுக்கு வாரன்ட்டி கிடைக்கும்? எந்த பாகங்களுக்கு வாரன்ட்டி கிடைக்காது? எதனால் வாரன்ட்டி ரத்தாகும்? இங்கே பாரி சாலனுக்குப் பிரச்னை தந்தது பஜாஜ் பைக் என்பதால், அந்நிறுவனத்தின் புகழ்பெற்ற மாடல்களில் ஒன்றான பல்ஸர் 150 (மாதத்துக்குச் சராசரியாக 50 ஆயிரம் பைக்குகள் விற்பனை) பைக்கையே இங்கே உதாரணத்துக்கு எடுத்துள்ளோம்.
பைக் நிறுவனத்தின் வாரன்ட்டி குறித்த விதிமுறைகள்:
1. ஒவ்வொரு புதிய பைக்குக்கும், 2 ஆண்டு அல்லது 30 ஆயிரம் கிமீ வரை வாரன்ட்டி கிடைக்கும். இதில் எது முதலில் வருகிறதோ, அதைப் பொருத்து வாரன்ட்டி கணக்கில் கொள்ளப்படும்.
2. டயர், ட்யூப், பேட்டரி, ஸ்பார்க் ப்ளக், ஷாக் அப்சார்பர், ஸ்பீடோமீட்டர் ஆகியவை, பல்வேறு உதிரிபாக உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கியே பைக்கில் பொருத்தப்படுகிறது. எனவே இதற்கு பைக்கைத் தயாரித்த நிறுவனம் நேரடியாகப் பொறுப்பேற்காது என்றாலும், அந்தந்த பாகங்களைத் தயாரித்தவர்கள் வழங்கும் ஒரு வருட வாரன்ட்டி காலத்தில் ஏதெனும் பிரச்னை ஏற்பட்டால், அதனை டீலர்/சர்வீஸ் சென்டர் உதவியுடன் க்ளெய்ம் பெற்றுக் கொள்ளலாம்.
3. வாரன்ட்டி க்ளெய்மிற்கு, ஒரு பாகம் அனுப்பப்படுகிறது என எடுத்துக் கொள்வோம். அந்த பாகத்தைத் தயாரித்தவரிடமிருந்து மாற்று பாகம் வரவில்லையெனில், அதே பாகத்தைத் தயாரிக்கும் மற்றொரு நிறுவனத்திடமிருந்து வாங்கும் உரிமை, பைக்கைத் தயாரித்த நிறுவனத்துக்கு இருக்கிறது.
வாடிக்கையாளருக்கு வாரன்ட்டி குறித்த விதிமுறைகள்:
1. தனது பைக்கில் ஏதெனும் பிரச்னையை உணர்ந்த உடனேயே, பைக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான டீலர் அல்லது சர்வீஸ் சென்டருக்கு விரைந்து சென்று, தனது பைக்கில் பிரச்னைக்குரிய பாகங்களைக் குறிப்பிட்டு வாரன்ட்டி க்ளெய்மிற்கு அனுப்பச்சொல்ல வேண்டும்.
2. தனது பைக்கின் தகவல்களைச் சரிபார்க்க, உண்மையான Owners Manual-யை கேட்கும்போது சமர்பிக்க வேண்டும்.
3. ஒருவர் தனது பைக்கில் வாரன்ட்டி க்ளைய்ம் பெறுவதற்கு, கீழ்கண்ட விஷயங்களைப் பின்பற்றியிருக்கவேண்டும்.
*முதல் 3 இலவச சர்வீஸை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செய்திருக்க வேண்டும்.
*அடுத்தபடியாக 4 Paid சர்வீஸை, 120 நாள்கள் அல்லது 5 ஆயிரம் கி.மீட்டர் காலக்கெடுவுக்குள் (எது முதலில் வருகிறதோ) சர்வீஸ் செய்திருக்க வேண்டும்.
* பைக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்/சர்வீஸ் சென்டர்களில்தான் பைக்கின் சர்வீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
*சர்வீஸ் குறித்த ஆவணங்களில், டீலர்/சர்வீஸ் சென்டரில் கையொப்பம் இருக்க வேண்டும்.
*பைக் நிறுவனம் பரிந்துரைக்கும் இன்ஜின் ஆயிலை (DTS-i 10,000), குறிப்பிட்ட காலக்கெடுவில் டாப்-அப் (5,000 கிமீ) மற்றும் 10 ஆயிரம் கி.மீட்டருக்குள் மாற்றியிருக்க வேண்டும்.
எந்தந்த பாகங்களுக்கு வாரன்ட்டி கிடைக்காது?
1. சர்வீஸ் சென்டரில் செய்யப்படும் பிரேக் மற்றும் க்ளட்ச் அட்ஜஸ்ட்மென்ட், கார்புரேட்டர் கிளீனிங், இன்ஜின் ட்யூனிங் ஆகியவற்றுக்கு வாரன்ட்டி கிடையாது.
2. பைக்கின் இயக்கத்தால் தனது ஆயுளை இழக்கும் க்ளட்ச் பிளேட், பிரேக் பேடு, செயின் ஸ்ப்ராக்கெட், ஃபோர்க் ஆயில் சீல், ஸ்பார்க் ப்ளக், பிரேக் - க்ளட்ச் - ஆக்ஸிலரேட்டர் - மீட்டர் கேபிள்களுக்கு வாரன்ட்டி கிடையாது.
3. எலெக்ட்ரிக் ஸ்டார்ட், பல்ப் போன்ற எலெக்ட்ரிக்கல் பாகங்கள், ரப்பர் பாகங்கள், ஃபில்டர்கள், Gaskets ஆகியவற்றுக்கு வாரன்ட்டி கிடையாது.
4. பைக்கில் பெயின்ட் செய்யப்பட்ட பகுதிகளுக்கு வாரன்ட்டி உண்டு. ஆனால் பைக்கின் உரிமையாளர் அதில் கவர் அல்லது கோட்டிங் செய்திருந்தால் வாரன்ட்டி கிடையாது.
5. இன்ஜின் ஆயில், ஃபோர்க் ஆயில், பிரேக் ஆயில், க்ரீஸ் ஆகியவற்றுக்கு வாரன்ட்டி கிடையாது. மேலும் முன்னே சொன்ன பொருள்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவில் மாற்றாவிட்டாலோ, பரிந்துரைக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தாவிட்டாலோ வாரன்ட்டி கிடையாது.
6. பைக்கில் க்ரோம் ப்ளேட்டிங் செய்யப்பட்ட பகுதியில் கோளாறு ஏற்பட்டால், அது வாரன்ட்டியில் சரிசெய்யப்படும். ஆனால் நிறம் மாறியிருக்கும் எக்ஸாஸ்ட் பகுதி, சரிவர பராமரிக்கப்படாத க்ரோம் பாகங்களுக்கு Warranty கிடையாது.
7. கடலோர பகுதிகளில் இருக்கும் பைக்கின் க்ராங்க் கேஸ், சிலிண்டர் ப்ளாக், சிலிண்டர் ஹெட் போன்ற பாகங்களுக்கு Warranty கிடையாது. துருப்பிடித்திருந்தாலும் Warranty கிடையாது.
8. பைக்கில் அகலமான டயர், வித்தியாசமான ஹேண்டில்பார், அதிக வெளிச்சத்தை உமிழும் லைட், அதிக சத்தத்தை வெளிப்படுத்தும் எக்ஸாஸ்ட், பவர்ஃபுல் ஹாரன், பர்ஃபாமென்ஸ் ஏர் ஃபில்டர் மற்றும் ஸ்பார்க் ப்ளக், ரிமோட் லாக், LED பட்டை, அலாரம் ஆகியவை பொருத்தப்பட்டிருந்தால் Warranty கிடையாது.
9. ரேஸ், கண்காட்சிப் போட்டி, தனிநபர் சாதனைக்காக நிகழ்த்தப்பட்ட ரைடு போன்றவற்றில் பங்கேற்ற பைக்குக்கு Warranty கிடையாது.
கருத்துரையிடுக Facebook Disqus