0
“தடையங்கள் உருவாகினாலும் மறைவதில்லை! 
ஆனால் மறைக்கப்படுகிறது!”


---------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பகுதி டிங்கு டைரி - 64 T.F.I.A.S அப்படினா என்ன?

கட்டில் பக்கத்தில் இருந்த டேபிள் மீது ஒரு கை கடிகாரம் அதில் மணி 10.50ஐ தாண்டியிருந்தது, அதற்குப் பக்கத்தில் இரண்டு கம்மல், அதை அடுத்து ஒரு கண்ணாடி டம்ளர் ... அதிலிருந்த பால் முழுவதும் காழியாக இருந்தது... என்ன இன்னுமா உங்களுக்கு புரியல.. அதுதான் பால் காலின்னு சொல்லிட்டேன்ல.....
    
கட்டிலில் உஷா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். ஜன்னலோரம் நான் நின்றுகொண்டு அவளை ஒரு குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். குளித்துவிட்டு படியில் கீழே வர காலிங் பெல் அடித்தது.

கதவைத் திறந்ததும் நின்றிருந்தான் குமார்

நான் : என்னடா காலைலியே. 

குமார்: நீ என்னடா.... கல்யாணம் ஆனா முதல் நாளே ஆபீஸ் கிளம்பீட்ட...சரி வா உள்ள போய் பேசலாம்.

நானும் குமாரரும் சோபாவில் அமர்ந்தோம்.

குமார் : மச்சா மச்சா... ஓ.. மிஸ்டர் மாப்பிள்ளை... கடுப்பில் நான் அவனைப் பார்க்க அவன் “அடடா அங்க பாரு முகத்துல தேஜஸ் அள்ளுது.. அதுக்கு தான் மச்சா சொல்லுறது அத அத அந்த அந்த வயசுல அனுபவிக்கனும்னு.. சரி சரி அத விடு. நேத்து என்ன ஆச்சு சொல்லு. சொல்லுடா.”

நான் : சலிப்புடன் “பரவால்லட.....”

குமார் : மச்ச வாழ்கையில சின்ன சின்ன விசயத்தையும் அனுபவிக்கனும்டா. இப்போ என்ன எடுத்துக்கவே.. உன் எக்ஸ்பிரியன்ஸ்ச கேக்க காலைல பல்லு கூட வந்திருக்குறேன் நீ என்னடான பரவால்லனு சொல்லுற 

நான் : அவ்வளவு ஆர்வமா இருந்தா இன்னைக்கு நைட்டு கட்டிக்கடில வந்து படுத்துட்டு லைவாவே பாத்து தெருஞ்சுக்கோ 

குமார் : அடப்பாவி!!! னு சொல்லவும் உஷா ஹாய் அண்ணானு சொல்லவும்.. கொஞ்சம் சத்தமாக ம்ம் மச்சா அந்த ஐபில் மேட்ச் தானே... சொசைடி கிரௌண்ட்ல தானே போடுறாங்க.. ஏசி எல்லாம் இருக்கும்ல..

உஷா : டிறேவில் இரண்டு டம்ளரில் ஜுசுடன் வந்தவள்...... கிரௌன்ட்ல ஏசி எல்லாம் இருக்காது அண்ணானு சொல்லவும் அசடு வழிந்தான் குமார்.

உஷாவை எதோ கண் தன்னை நோட்டம் இடுகிறதை உணர குமாரை பார்த்தல், அவன் மும்மரமாக ஜூசை குடிட்டுக்கொண்டிருக்க அவள் பார்வை என்மேல் திரும்பியது. நான் திடீரென என் பார்வையை ஜூஸ் டம்ளருக்கு மாற்றியதைப் பார்த்துவிட்டால் பின் தன் துப்பட்டாவைச் சரி செய்துவிட்டு தன் அறைக்குச் சென்றால்.

நான் : “நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விசையம் பேசணும் வா” என குமாரின் கையைப் பிடித்து இழுத்து மொட்டை மாடிக்குச் சென்றேன்.

மொட்டைமாடியில்...............

நான் : டேய், கல்யாணத்துக்கபுரம் எல்லாப் பிரச்சனையும் சரியாயிடும்னு நீ தானே சொன்ன.. எல்லாரும் சொன்னீங்க, அத நம்பித்தானே ஒரு புது வாழ்க்கைக்குத் தயாரானேன், மச்சா.. உன்னக்கே தெரியும் நான் கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி இப்படி எல்லாம் இருந்தது இல்ல. நேரயபெருக்கு first Night உண்மையாலுமே first Nightஆணு கேட்ட சந்தேகம் தான் டா. ஆனா எனக்கு இது தாண்ட முதலிரவு.

குமார் : டேய், ஏன் தேவையிள்ளததா எல்லாம் பேசி கவலபட்டுட்டு இருக்குற. என்ன ஆச்சு அத மொதல்ல சொல்லு..

நான் : நேத்து.. பெட்ல.. முதல் முறையா ஒருபொண்ண டிரஸ் இல்லாம பாத்தேன் அதுவும் என் மனைவிய, அவ கழுத்துக்கு கீழ ஒரு பையன் பெயர பச்ச குடுத்தியிருந்தாடா.

குமார் : இந்த திரிஷா, நயன்தாரா எல்லாம் குத்ததியிருப்பாங்களே அது மாதிரிதானே.

நான் : ம்ம்.. அது ஒரு பேர்தான்.. அத நேத்து பாத்ததிலிருந்தே தூக்கமே இல்லைட.

குமார் : மச்சா, ஒருவேள அவ அப்பா பேரு இல்ல அண்ணன் பேரா இருக்குமோ.

நான் : அவுங்க அப்பா அண்ணா பேரு எல்லாம் எனக்குத் தெரியாதா... இது வேற எதோ பேருடா. அதுவும் இல்லாம அப்பா அண்ணன் பெற அங்க யாரவுது பச்ச குத்துவாங்களா.

குமார் : ஆமாம்ல.. சரி இதபத்தி அவகிட்ட கேக்க போறியா

நான் : கேட்டு ஏதாவது தப்பா போய்டுச்சுனா 

குமார் : சரி, அப்போ கேக்காத விட்டுரு.

நான் : கேக்காம இருந்தாலும் உள்ளே உறுத்திக்கிட்டே இருக்கும்டா.

குமார் : என்னடா.. கேக்க கூடாதுங்குற.. கேக்காம இருக்க முடியிலேங்குரே.. இதுக்கு என்ன தாண்டா அர்த்தம்..

நான் : என்ன அர்த்தமா.. இதுதாண்டா எதார்த்தம். இத எல்லாம் அப்படியே மறந்துட்டு வாழ்றதுல நான் யோகியும் இல்ல உடனே போய் கேட்டு அவல கஷ்டப்பட்டுத்த நான் மிருகமும் இல்ல. ஒரு சாதாரண மனுஷன். ஒரே குழப்பமா தான் இருக்கு, இதுக்கு உன்கிட்டையும் பதில் இருக்காதுனு எனக்குத் தெரியும்.. உன்கிட்ட சொல்லனும்னு தோனுச்சு அதுதான் சொன்னேன்.

குமார் : சரி மச்சா.. விடு.. நான் என்னன்னு விசாரிக்கிறேன் .

நான் : ஏன்... நீ என்னனு விசாரிக்கப்போற.

குமார் : இல்லடா, கல்யாணத்துல நம்ம பசங்க பொண்ணு சைடுல வந்த யாரவது ஒரு பொண்ண உசார் பண்ணி நம்பர் வாங்கியிருப்பாங்க, அவங்கள புடுச்சா நம்ம விசாரிச்சுடலாம்.

நான் : அதெல்லாம் வேண்டாம் தப்பாயிடும். யாரு என்ன பேருன்னு சரியா தெரியாம இந்த விஷயம் வெளில போக வேண்டாம்.

குமார் : சரி மச்சா... இப்பதான் உன் வாழ்க்கை நல்லபடியா தொடங்குதுன்னு நெனச்சேன்.. அதுக்குள்ள..எதுவா இருந்தாலும் நல்ல யோசிச்சு முடிவெடு.. பாத்துக்கோ. பை....

" அடுத்த பகுதி தொடரும்.........    


முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56[57] [58] [59] [60] [61] [62] [63]

[64] முந்தைய பதிவு || அடுத்த பதிவு [66]

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துரையிடுக Disqus

 
Top