0
பெரும்பாலானோர் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் என இரண்டையும் பயன்படுத்துகின்றனர். ஆனால், பலரின் யூகத்தின்படி கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தினால், கடனாளி ஆகிவிடுவோம் என்ற சிந்தனை உள்ளது.

இவ்விரண்டில் எது சிற்ந்த தேர்வு? வங்கியில் நம்முடைய கணக்கில் இருக்கும் பணத்தை நாம் செலவு செய்வதற்கு டெபிட் கார்டு பயன்படுகிறது. அதேசமயம், கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தின் நிதியை செலவு செய்து அதை திருப்பிக்கொடுக்க கிரெடிட் கார்டு பயன்படுகிறது. 

டெபிட் கார்டினை காட்டிலும் கிரெடிட் கார்டுகளுக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணம் சற்று அதிகம். இருப்பினும் பெரும்பாலான நிறுவனங்கள், சில குறிப்பிட்ட சூழல்களில் கிரெடிட் கார்டுகளின் மீதான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பதில்லை. கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தன் வாடிக்கையாளாகளுக்கு 15 முதல் 45 நாட்கள் வரையிலான வட்டியில்லா கடனை வழங்குகின்றன. மேலும், சில தள்ளுபடிகளையும், கேஷ்பேக் ஆஃபர்களையும் வழங்குகிறது. டெபிட் கார்ட் மூலம் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட தொகையை மட்டுமே பரிவாத்தனை செய்ய முடியும். ஆனால், கிரெடிட் கார்டை பயன்படுத்தி முழு கிரெடிட் லிமிட் வரை பணத்தை பயன்படுத்தலாம்.

அவசர தேவைகள், கையில் பணம் இல்லாத போது கிரெடிட் கார்டு மிகவும் உறுதுணையாக இருக்கும். ஆனால், பணம் இல்லாமல் கையிலிருக்கும் டெபிட் கார்ட்டால் எவ்விதப் பயனுமில்லை. கிரெடிட் கார்டை சரியான முறையில் பயன்படுத்தினால், அதிக கடன் லிமிட் கிடைக்கும், வட்டி விகிதங்களும் குறையும். எனவே கூட்டு கழைத்துப்பார்த்தால் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட்டை விட சிறந்ததாக உள்ளது.

ஆனால், அது சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

கருத்துரையிடுக Disqus

 
Top