இது மழைக்காலம். இந்தக் காலத்தில் தான் அதிகமாக குறைந்த காற்றழுத்த மண்டலம், அதன் காரணமாக புயல், சூறாவளி என்று நம்மை அச்சுறுத்தும். உலக முழுவதும் இம்மாதிரி இயற்கையின் சீற்றம் அவ்வப்போது நிகழ்வது உண்டு. இது சில வேளைகளில் பலமாகவும், சில வேளைகளில் சாதாரண பாதிப்பையும் ஏற்படுத்துவதுண்டு.
ஒரு சக்திவாய்ந்த சூறாவளி பூமத்திய ரேகை அருகே உள்ள மிதவெப்பமான கடல்பகுதி மேல் சுற்றும் புயலாக உருவாகும். Tropical Cyclone என்றும் அழைப்பர். இந்த சூறாவளி மணிக்கு குறைந்தது 119 கி.மீ. சுற்றும் சுழல் புயல்காற்று. இதனால் பெருமழையும், குறைந்த காற்றழுத்தமும், இடியும் மின்னலும் ஏற்படும். இந்த சூறாவளி புயல்காற்று கடிகாரமுள் சுழலும் எதிர்திசையில் சுற்றும். இதன் நடு மையத்தை புயலின் கண் என்றழைப்பர்.
ஒரு வருடத்தில் சுமாராக 100 புயல்கள் உலகம் முழுவதும் உருவாகின்றன. இதில் சுமார் 12 புயல் அட்லாண்டிக் கடலிலும், 15 புயல்கள் கிழக்கு பசிபிக் கடலிலும் மற்றவை உலகின் மற்ற பகுதிகளிலும் உருவாகின்றன.
பெரும்பாலும் இந்த சூறாவளிப் புயல்கள் ஒருவாரம் அல்லது அதற்கு மேலும் நீடிக்கும். அதற்குள் அடுத்த புயல் உருவாகிவிடும். இம்மாதிரி நிகழும்போது ஒரு குறிப்பிட்ட புயலின் தன்மை, வேகம், பலம் மற்றும் சேதம் இவைபற்றி ஆராய அல்லது பேச ஒரு பெயர் இல்லாவிட்டால் எந்தப் புயலைப் பற்றிப் பேசுகிறோம் என்பதில் குழப்பம் ஏற்படும்.
இவ்வாறு பெயர் வைக்க ஆரம்பித்த போது அந்தக் காலநிலை ஆராய்ச்சியாளர் இந்தப் புயல்களுக்கு அவர் தனது முன்னாள் மனைவியின் பெயரையும், தனக்கு ஆகாத அண்டை வீட்டுக்காரரின் பெயரையும் வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரே சமயத்தில் இரண்டு புயல்கள் உருவானால் எந்தப் புயல் என்பதை குறிப்பது மிகவும் கடினமாகிவிடும். அதனால் அந்த காலத்தில் காலநிலை ஆய்வாளர்கள் சாதாரணமாக ஒரு பெயரை வைத்து அழைத்துக் கொண்டார்கள். இந்தப் பெயர் பொதுமக்களுக்குத் தெரியாது. இதனாலும் சில குழப்பங்கள் ஏற்பட்டது. காரணம் புயல்களைப் பேசும்போது எந்த புயலைப்பற்றிப் பேசுகிறோம் என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தது. ஆகையால் புயல்களுக்குப் பெயர் வைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
1940ம் ஆண்டு வரைக்கும் புயல்களுக்கு அதிகாரபூர்வமாக பெயர் வைக்கவில்லை. மிகவும் மோசமான சேதத்தை உண்டாக்கிய புயல்களுக்கு அது எந்தப் பகுதியில் அதிக சேதம் விளைவித்ததோ அந்தப் பகுதியின் பெயரையோ அல்லது அது எந்த நாளில் நடந்தததோ அந்த நாளின் பெயரையோ வைத்தார்கள். அதாவது 1935இல் மிகவும் சேதப்படுத்திய புயலுக்கு Labor Day Hurricane என்று பெயரிட்டார்கள்.
கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது. ஆஸ்திரேலியா நாட்டவர்கள்தான் முதன்முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள். குறிப்பாக தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேரழிவு ஏற்படுத்தும் புயல்களுக்கு வைத்தனர். 1950-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கியது.
இதையடுத்து சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது பசிபிக் கடலில் வேலை செய்துகொண்டிருந்த காலநிலை ஆய்வாளர்கள் பெயர் வைக்க ஆரம்பித்தார்கள். காரணம் அவர்கள் ஒரே சமயத்தில் பல புயல்கள் உருவாவதைக் கண்டனர். அந்தன் புயல்களின் தன்மைகளை பற்றி ஆராய்வதற்குப் பெயர்கள் தேவைப்பட்டது.
1947 இல் பெரும் சேதத்தை விளைவித்த அந்தப் புயலுக்கு அமெரிக்கா, ஜார்ஜ் என்ற பெயர் சூட்டப்பட்டது. அப்போது அடுத்த 1949 ஆம் ஆண்டில் புயலுக்கு அமெரிக்காவின் முதல் பெண் மணி என பெயரிடப்பட்ட பெஸ் ட்ரூமன் பெயர் வைக்கப்பட்டது. அதன் பின்னர் பெயர் வைப்பதற்கு எத்தனையோ வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. இந்த முறை 1953 ஆம் ஆண்டு பெண்களின் பெயரை வைத்து ஆரம்பிக்கும்வரை தொடர்ந்தது.
1953 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை வெப்பமண்டலப் புயல்களுக்குப் பெண்கள் பெயர் பயன்படுத்தப்பட்டது. 1979 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெண்கள், ஆண்கள் பெயர் மாறி மாறி உபயோகப்படுத்தப்பட்டு வந்தது.
காலநிலை ஆய்வாளர்கள் அட்லான் டிக் பகுதியில் ஏற்பட்ட புயல்களுக்கு 1950 ஆம் ஆண்டு முதல் தேர்வு செய்யப்பட்ட பெயர்களை வைக்க ஆரம்பித்தனர். இந்த பெயர்கள் சர்வதேசிய மொழியின் அகர வரிசையில் இடம்பெற்றன. உதாரணமாக Able, Baker, சார்லி போன்றவை. அதுபிறகுகு ஆங்கிலப் பெண்களின் பெயர்கள் 1953 முதல் வைக்க தொடங்கியது. 1979 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆண்கள், பெண்கள் பெயர்கள் மாறி மாறி வைக்க ஆரம்பித்தார்கள். அதன் பிறகு பிரஞ்சு மற்றும் ஸ்பானிஷ் ஆண், பெண் பெயர்கள் வைக்க தொடர்தல்.
தற்போது உலக வளி மண்டல அமைப்பு (உலக வானிலை அமைப்பு) மண்டல அமைப்புகள் பெயர்கள் அட்லாண்டிக் பகுதி, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர்களைத் தேர்வு செய்தனர்.
அட்லாண்டிக் கடல் பகுதி மற்றும் கிழக்கு பசிபிக்கில் உருவாகும் புயல்களுக்கு ஆறு பெயர்ப் பட்டியல்கள் உருவாக்கப்பட்டன. இந்த பெயர்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் உபயோகப்படுத்தப்படும். இந்த பெயர்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள புயல்களின் பெயர்கள் மட்டும் நீக்கப்படும். அதாவது அந்தப் பெயர்கள் ஓய்வு பெறும்.
ஹவாய் பெயர்கள் மத்திய பசிபிக்கில் உருவாகும் புயல்களுக்கு வைக்கப்படுகிறது. உலக காலநிலை அமைப்பு போன்றவற்றை உருவாக்கிய பிற கால நிலை கமிட்டிகள் இதுபோன்ற பெயர்களைத் தேர்வுசெய்து உபயோகப்படுத்துகிறது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த கமிட்டிகள் பல மொழிகளின் பெயர்களை பயன்படுத்துகின்றன.
இவ்வாறாக வட இந்தியாவின் கடல்களில் ஏற்படும் புயல்களுக்கு புதுடில்லியில் காலநிலை மையம் 8 பெயர்ப்பட்டலை உருவாக்கியுள்ளது. இந்தியா, மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த பட்டியலில் இருந்து பெயர்கள் வைக்கப்படும்.
இதேபோன்று தென்மேற்கு இந்தியக்கடல்களில் ஏற்படும் புயல்களுக்கும் பெயர்ப் பட்டியல் உண்டு. அதிலிருந்து உருவாகும் புயல்களுக்குப் பெயர் சூட்டப்படும்.
வட இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த எட்டு நாடுகளும் பட்டியலாக தயாரித்து கொடுத்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள்தான் ஒவ்வொன்றாக புயல்களுக்கு சூட்டப் படுகின்றன. கடந்த 2004-ம் ஆண்டு முதல் வங்கக்கடல் புயல்களுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டு வருகின்றன.
கடந்த 2010-ம் ஆண்டு ஐந்து தடவை புயல் ஏற்பட்டது. அந்த புயல்களுக்கு பட்டியலில் உள்ள வரிசைப்படி லைலா, பந்து, பெட், கிரி, ஜல் என்று பெயரிடப்பட்டன. இதில் லைலா பெயரை பாகிஸ்தான், பந்து பெயரை இலங்கை, பெட் பெயரை தாய்லாந்து, கிரி பெயரை வங்கதேசம், பெயரை இந்தியா தேர்வு செய்து கொடுத்திருந்தன. இதில், லைலா, ஜல் இரு புயல்களும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.
2011-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல்முறையாக புயல் தோன்றியது. அந்த புயலுக்கு மாலத்தீவு நாடு தேர்வு செய்து கொடுத்திருந்த கெய்லா என்ற பெயர் சூட்டப்பட்டது. அதே ஆண்டு இரண்டாவதாக தோன்றிய புயலுக்கு தானே என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயரை வழங்கிய நாடு மியான்மர் நாடாகும். மியான்மர் நாட்டின் ஜோதிடவியல் நிபுணர் மின் தானே கா பெயரை குறிப்பிடும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டதாக தெரிகிறது.
கருத்துரையிடுக Facebook Disqus