0
"வரபோகும் எல்லா க்ரகனங்களையும் கணக்குபோட்டு துல்லியமாக தேதி நேரம் சொல்லமுடியும் நம்மால். ஆனால் பிறையை பார்க்காமல் ரம்ஜான் தேதி சொல்ல முடியாது" 

---------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 1 அறிமுகம்"



யாருன்னு திரும்பி பாத்தா என்ன கமன்ட் பண்ணுன அந்த பொண்ணு தான் அனித்தா !!!!!!!!!!!!

நான் : அட பக்கி நீ தானா, கிளாஸ்ல என்ன கமண்ட் பன்றலவுக்கு உனக்கு தைரியம் வந்திருச்சா.. ம்ம்ம் உன்ன மைன்ட்ல நோட் பண்ணிக்குறேன். 

மறுநான் காலை எழு மணி..  சில தெருக்கள் தாண்டியிருக்கும் ரகுமாமா வீட்டுக்கு என் சைக்கிளில் சென்றேன் காலிங் பெல்ல அழுத்திபிடித்து நிற்க, மல்லிகைப் பூ மணக்க, சில்வர் தண்ணி குடம் விழும்பு முத்து சத்தம் போல கொளுசுசத்தத்துடன் பட்டு பாவாடையில் கதவைத் திறந்தால் அனித்தா.

நான் : "ரம்ஜான் வாழ்த்துக்கள் அனில், இந்த ட்ரெஸ் சூபர இருக்கு."

அனித்தா : "தேங்க்ஸ், எங்க அண்ணா எப்பவும் எனக்கு புடுச்ச மாதிரிதான் செய்வாரு. இந்த டிரஸ்ல நான் நல்ல இருக்குறேனா"

நான் : அனித்தாவை ஒருமுறை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு, டிரஸ் தான் சூப்பர். ஆனா உனக்கு நல்லா இல்ல. இதே டிரஸ் அவ போட்டிருந்த செம்மையா இருந்திருக்கும்."

அனித்தா : முகம் சுளித்து தன் இடுப்பில் கை வைத்தவாறு கேட்டால். "யாருடா அந்த அவ."

நான் : "நா சொன்னா நீ என்ன செய்வனு எனக்குத் தெரியாதா. அல்ரெடி என் பேரு அவகிட்ட கொஞ்சம் டேமேஜ்ஜா தான் இருக்கு. நீ ஓவர் டேமேஜ் பண்ணிடுவ."

அனித்தா : "ஓ, அந்த அவ நேத்து வந்த ஹேமாவா."

நான் : என் மனதிற்குள் “அதுக்குள்ள இந்த உளவுத்துறை சொல்லிடுச்சே!!!” 

அனித்தா : "நீ வந்திருக்கிற ரேஞ்சே சரியில்லையே."

நான் : "நான் மத்தியானம் சினிமாவுக்கு போகிறேன், உன்னையும் கூட்டிட்டு போலாம்னு பாத்தா நீ ரொம்பதான் பண்ற." 

அனித்தா : ஆச்சரியத்துடன்!!! "படத்துக்கா.. ஐ..  எந்தப் படம் டா,. யார் படம்." 


நான் : ஒரு வெக்கத்துடன் “ரெட்டை ரோஜா”. என் மனதிற்குள் ஒன்னு நீ, இன்றொன்று அவ.

அனித்தா : "ரஜினி படமா."

நான் : "ரஜினி படம்னா தான் பாப்பியா.. இது வேற படம்.. நீ வருவியா இல்லையா."

அனித்தா : "சரி வர்றேன்.. கொஞ்சம் இரு நான் அண்ணாகிட்ட கேட்டுட்டு வரேன்." என வீட்டுக்குள் ஓடினால். சிறிதுநேரத்தில் வந்தவள் என்னிடம்.. ம்ம் போழாம். எத்தன மணிக்குப் படம் போடுவாங்க. 

நான் : "இப்போ இல்ல மதியம் தான். இரண்டு மணி பஸ்க்கு போழாம். என்கிட்ட மூணு டிக்கட் இறுக்கு அந்தத் தடியன் அவங்கள் அத்தை ஊருக்கு போய்டான். இன்னொருதர யார கூட்டிட்டு போரது?...  உங்க அண்ணன் கூட்டிட்டு போன ஒரே மொக்கையா இருக்கும் வேற யார கூட்டிட்டு போறது என வார்த்தையை இழுக்கச் சுதாரித்துவிட்டால் அனித்தா. 

அனித்தா : "ஆஹா.. இது தான் ரெட்டை ரோசாவா. நீ சுத்தி வளச்சு எங்க வர்ரீனு தெரியுது. அது மட்டும் நான் செய்ய மாட்டேன்."

நான் : "ஹேய் ப்ளீஸ்பா அவளையும் கூட்டிட்டு போழாம் பா."

அனித்தா : "முடியாது போடா."

நான் : "சரி, நீ கூப்பிடவேண்டாம் அவ வீடு எங்கேன்னு மட்டும் சொல்லு அது போதும்."

அனித்தா : "அசுக்கு புசுக்கு, உனக்கு வேணுனா நீதா கண்டுபிடிக்கணும்."

நான் : ம்ம்.. "நானே கண்டு பிடுச்சுக்குறேன், நீ மதியான பஸ்ல போக ரெடியா இரு. நம்ம மூணு பெரும் போறோம்."

அனித்தா : "அளவா ஆசப்படுடா... அவ வரமாட்டா."

எதாவது திட்டம் போட்டு ஹெமாவ ப்ரெண்டாக்குலாம்னா எல்லாம் சொதப்புதே. ஹேமா வீட்டைத் தேடி சைக்கிளில் ஒவ்வொரு தெருவாக சுற்றினேன். இறுதியில் எங்க வீடே வந்தது. ம்ம் படத்துக்கு அம்மாவை தான் கூட்டிட்டு போகணுமா. 


கதவை திறந்ததும் சிக்கன் குழம்பு மனம் என்னை சுண்டி இழுக்க இன்னிக்கு புல் கட்டு கட்டனும் ஹாலுக்குள் சென்றதும் எனக்கு இரண்டு ஆச்சரியங்கள்.

அம்மா கைல எனக்கு பிடிச்ச இட்டலியுடன் சிக்கன் குழம்பு....

அனா அந்த இட்டலி தட்டு என்ன நோக்கி வரல....

யார் அந்த விருந்தாளி? சிக்கன் கிடைக்குமா.. இல்ல ?? டிங்கு ஹேமா கண்டுபிடிப்பானா ? டிங்கு பகல் கணவு பலிக்குமா ?

"கறிக்குழம்பும் தயிர்சாதமும்" அடுத்த பகுதி .........


------------------------------------------------------------------------------------------------------------


"உன் தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருக்கையில் சைக்கிள் மணி கூடச் சாகடித்து விடுகிறது எளிதாக என்னை!"

மொட்ட கடிதம் அனுப்ப : AnandBusubee.Sarahah.com  



கருத்துரையிடுக Disqus

 
Top