"உன்னிடம் இருக்கும் அனைத்தையும் பிறருக்காக பரிமாறு.
உனக்காகவும் சில கைகள் நீளும் உனது பசியாற்ற."
-----------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் முதல் முறை காதலை சொல்லும் போது முறைத்துப் பார்த்துவிட்டு பின்னர்
நம்மைக் காதல் கண்கள் கொண்டு தாக்கும் போது பெண்களின் காதல் அழகுதான்...
நம்மோடு
வெளியே வரும் போது யாரும் பார்க்காத போதும் நம்மை யாரோ பார்த்து
விடுவார்களோ என்று நம்மையும் சேர்த்து பயமுறுத்தும் போது பெண்களின் காதல்
அழகுதான்....
வெண்ணிலா ஐஸ் கிரீம் டைரி மில்க் சாக்லேட்
மாசா கூல்ட்ரிங்க்ஸ் இதுவே அதிகம் பிடிக்குமென நம் செலவை சிக்கனம் செய்யும்
போது பெண்களின் காதல் அழகுதான்....
எதுவும் வேணுமா என்று கேட்டாலும் நீ கேட்டதே சந்தோஷமா இருக்கு என்று நம்மளையே அசத்தவைக்கும் போது பெண்களில் காதல் அழகுதான் .....
நம்மோடு பகிர்ந்து கொள்ள முடியாத ஆசைகளைப் படுக்கை அறையில் தனியாக தலையணையோடு பகிர்ந்துகொள்ளும் போது பெண்களின் காதல் அழகுதான்....
ஆயிரம் உறவுகளைக் காதலுக்காய் தூக்கி எரியும் போதும் உறவுக்காய் காதலை தூக்கி எரியும் போதும் பெண்களின் காதல் அழகுதான் .....
இதில் எது நடந்தாலும் அதிகம் பாதிக்க படுவது ஆண்கள் தான் .....
நான் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...
உஷா : "வந்துட்டீங்களா...! உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்"!.
நான் : "ஏன்?... என்னாச்சு.. ஒருவேள நான் குடிச்சிருப்பெனு சந்தேகம் வந்திருச்சோ.. “நான் சத்தியமா குடிகில செல்லம்".
உஷா : "அது இல்ல.... இன்னிக்கு ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,...நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்"! ...
நான் : "சரி" திட்டுக்குத் திட்டுக்கு சரியாபோச்சு...!
உஷா : "இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது..! அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி"!.
நான் : "கலவரப் பீதியில்... நமக்கெதுக்கும்மா இந்த வம்பு? மன்னிச்சு விட்டுட வேண்டியதுதானே"!.
உஷா : "மன்னிக்கிறதா?..அந்த பேச்சுக்கே இடமில்ல.
எங்க அந்த உருட்டுக் கட்டை.....என்று தேடிக் கொண்டே செல்ல... வாசலிலிருந்து வந்த என் மகன்...
ரகு : "யப்பா...சீக்கிரம் ஓடிடுப்பா"!..
நான் : "ஏண்டா"..?
ரகு : "நான்தான் கோபத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா"!!
நான் : "அடப்பாவி மகனே! வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே., அய்யய்யோ ... இப்ப நான் என்ன செய்வேன்..! எங்க போவேன்..! செய்யாத குற்றத்துக்கு நாயா, பேயா அலைய வைக்கிறாங்களே..... இத கேட்க நாதியில்லையா" என உஷா என்னைத் துரத்த நான் கதவை திறக்க அவள் கையில் இருந்த உருட்டு கட்டை விழக என் தலை தப்பி வாசலுக்கு வெளியே வந்த ஒருவன் மீது விழுந்தது, நான் திரும்பி உஷாவை பார்த்து திரும்பியதும் எதிரில் நின்றவளைப் பார்த்ததும் அதிர்ந்தேன்.
நான் : ஹேமா !!!!!!!!!!
ஹேமா : என்னடா இப்படி ஷாக் ஆயிட்ட...... என்கூட யார்வந்திருக்கங்கனு தெரியுமா.....
நான் : திவ்யா !!!!!!
திவ்யா : கண்ணா கொஞ்சம் பின்னாடி பாரு...
இதுவே தாங்க முடியல இன்னும் இருக்கா என கொஞ்சம் என் தலையை சாய்த்து பார்க்க ரகு மாமாவின் பென்ஸ் காரில் இருந்து ரஞ்சித் இறங்கினான் அதற்கு அடுத்தது இறங்கிய ஆளை பார்த்ததும் என் மூச்சே நின்று மயங்கி விழுந்தேன். அந்த பெண்ணின் டாப்ஸில் எழுதியிருந்த வாசகம், "SAY SOMETHING!
ஆமாங்க அதே பிரியாதான்.
என் முகத்தில் தண்ணீர் தெளிக்க மயக்கத்திலிருந்து முதலில் நான் பார்த்தது உஷாவை. இவளுக்கு என் ஒரு டைரிய சொல்லி புரியவைக்கவே பலவருசம் ஆச்சு இப்போ எந்த டைரில இருந்து நான் தொடங்குறது!!!!!!!!!!!!!!!
பெண்ணின் அதீத ஞாபக சக்தி தான் ஆணுக்கு பிரச்னை
ஆணின் ஞாபக மறதியும் அவனுக்கே பிரச்னை
ஆக மொத்தம் பெண் எப்பவும் safe
என் பிறந்தநாள் விழாவிற்கு பப்பு எனக்கு கொடுத்த சிறப்பு பரிசு தான் இந்த அதிர்சி ஏற்பாடு.
ஆமாம் உஷா வீசின பூரிக்கட்டை பரந்துச்சே அது எங்க போனது.....
கடைசியா அந்த காரை ஓட்டிட்டு வந்த குமாருதான்..
நீதி : தலை கவசம் உயிர் கவசம்!!!!!!
"இன்று யாரிடமோ நான் சொல்லும் இந்த கதையில் இருக்கும்
ஒரு பெண் தான்
அந்த நேரத்தில் என் பல அதிசயங்களுக்கு சொந்தக்காரி.! "
[78] முந்தைய பதிவு
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------