0

“புதிது புதிதாய் மாற்றங்கள் என்னுள் புரியாமலே புன்னகை செய்கின்றேன் காரணம் என்னவென்றால் நீ என்னுள் காதலாய் பூத்து விட்டாய்”

------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 2 ஊர் முழுக்க தேடுன பழம்"
 
ஊர் முழுசா சைக்கில்ல சுத்துனதுல செம பசி.. கதவைத் திறந்ததும் சிக்கன் குழம்பு மனம் என்னைச் சுண்டி இழுக்க இன்னிக்கு புல் கட்டு கட்டனும்னு நினைக்க எங்க அம்மா சுடச்சுடத் தட்டில் இட்டலியும் கறிக்குழம்பையும் எடுத்திட்டு ஹாலுக்கு வந்தாங்க. ம்ம் அம்மாவுக்கு கூட என் பசி தெருஞ்சுருச்சானு கையக் கூட கழுவாம வேகமா உள்ளே வந்தேன். 


ஹாலுக்கு வந்ததும் ஒரே அதிர்ச்சி கலந்த ஆச்சரியம், என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லை, என் சேர்ல இருந்தது ஹேமா. ஊர் முழுக்க தேடின பழம் நம்ம வீட்டு ஹால்ல இறுக்கே, அம்மா இட்டலியை ஹேமாவுக்கு ஊட்ட அவள் வேண்டாம் என் மறுத்துக் கொண்டிருந்தால்  பிறகு எனக்கும் ஒரு தட்டில் இட்லி சுடச்சுட வந்தது. வந்த பசிக்கு ஹேமா ப்ளேட்ல இருக்கிறதையும் காலி பண்ணிடுவேன் இருந்தாலும் நம்ம கெத்தை மெய்ன்டேன் பண்ணனுமே.

நான் : அம்மா... எனக்கு பசிக்கில இப்ப வேண்டாம்னு சொல்லிட்டு டிவி முன்னாடி அமர்ந்தேன்.

அம்மா : எண்டா.. எப்பவும் சாப்பாடு போடுறதுக்கு முனாடியே பசிக்குதுன்னு கத்துவ இன்னிக்கு என்ன ஆச்சு.

நான் : இன்னிக்கு பசிக்கில.. விடேமா. 

சமைகட்டுக்கு போன அம்மாவை மெதுவாகப் பின்தொடர்ந்தேன். அம்மாவிடம் மெதுவாக இந்த பெண் இங்க என்ன பண்ணுதுனு கேட்க. 

அம்மா : அவுங்க சொந்தக்காரர்கள் யாருக்கோ உடம்பு சரியிள்ளயாமா அதனால அவுங்க அம்மா இந்த பொண்ண இங்க விட்டுட்டு அவங்கள பாக்க போய்இருக்காங்க நாளைக்குத் தான் வருவாங்களாம். இவ என்னடான எத குடுத்தாலும் சாப்பிட மட்டேங்குரா. 

நான் : இது மாதிரி ஆளுகளுக்கு வயித்துல ஒரு ஜிப் வச்சு சாப்பாட்டு நேரம் ஆச்சுன ஜிப்ப ஓபன் பண்ணி உள்ள சாப்ட கொட்டனும். ம்ம் ... என்கிட்ட அவள விடுமா, எப்படி சபிடவைகிரதுன்னு நாள் அவளுக்கு சொல்லி தாரேன்.    

குசியுடன் ஹாலை நோக்கி நான் நடக்க என் மைன்ட்வாய்சில் “ஆஹா.. லட்டு தேடி கடைகடைய சுத்துனா, அந்த லட்டு நம்ம வீட்டிலேயே இருக்கு ம்ம்”.. சரி மெதுவா பேச்சு கொடுத்து பாக்களாம்..

நான் : ஹாய் ஹேமா, ஹாப்பி ரம்ஜான்.

ஹேமா : சிறிது புன்னகையுடன் தேங்க்ஸ்.. சேம்டுயு.

நான் : ஏன் நீ சப்புடுல.. எங்க அம்மா வைக்கிற கரி குழம்பு செம டெஸ்ட்டா இருக்கும் தெரியுமா.

ஹேமா : நான் கரி சாப்பிட மாட்டேன்.. கோழியும் ஒரு உயிர் தானே.. பாவம் அதை போய் எப்படி சாப்பிடுறது.. நீ சாபிடுவியா.


Image result for chicken memes tamil

நான் : சிறிது யோசித்தபடி “எனக்கும் பிடிக்காது, அம்மா தான் என்ன சாப்பிடுனு தொல்லை பண்ணுவாங்க. எனக்கும் வெஜ் தான் பிடிக்கும்”. மைன்ட் வாஸ் “உன்ன கரைக்ட் பண்ண என்னென்ன யோசிக்க வேண்டியதா இறுக்கு”. உனக்கு சாப்பிட என்ன புடிக்கும்ன்னு சொல்லு. 

ஹேமா : எனக்கு தயிர் சோறு ரொம்ப பிடிக்கும், இப்ப எனக்கு ரொம்ப பசிக்குது உங்க அம்மாகிட்ட கரி பிடிக்காதுன்னு சொல்ல எனக்கு தயக்கமாவும் இருக்குது.

நான் : என் மைன்ட் வாஸ் “அடியேய் தயிர்சோறடி நீ.. இன்னிக்கு எனக்கு சிக்கனும் இல்ல கறிகொழம்பும் இல்லையா.. டேய் டிங்கு இன்னிலலிருந்து நீயும் தயிர்சோருதாண்டா” ஓகே, அதுக்கு முன்னாடி விபீ பிரண்ட்ஸ் என என் கையை அவளை நோக்கி நீட்டினேன்.

ஹேமா : ம்ம் ஓகே. என அவள் தன் பஞ்சுமிட்டாய் கைகளால் என் கையை குலுக்கினால்.

நான் : அவள் கைகளை விலக்கியதை சுதாரித்துக்கொண்டு,""  வெயிட் பண்ணு உன்னக்காக ஒரு ஸ்பெசல் டிஸ் ரெடிபண்ணி கொண்டுவரேன் என் வேகமாக கிச்சனுக்கு ஓடிப்போய், அம்மா அம்மா இருண்டு பிளேட் கேர்ட் ரைகொஞ்சம் பிளீஸ். என் குலைந்தேன்.

அம்மா : நீ கேட்டேன்னு தானே சிக்கன் சமச்சேன் இப்ப என்ன நோக்காடு வந்துச்சு.

நான் : அம்மா... உனக்கு விசியம் தெரியாதா கறி சாப்டா காச்சல் வருமாம் அப்புறம் கோழியும் ஒரு உயிர்தானே அத சாப்பிடறது பாவம்,  தயிர் சாப்பாட்டில் தான் நெறையா சத்து இருக்குனு எங்க மிஸ் சொன்னாங்க.

அம்மா : கோழிமேல ஏன்டா இவ்வளவு கரிசனம், இதே போனவாரம் பக்கத்துத் தெரு லக்ஷ்மி  கோழியை ரெண்ட அடிச்சி கொன்னப்ப தெரியலையோ.

நான் : அது போன வாரம்... இது இந்த வாரம்.  

போலம்பிக்கிடே அம்மா தயிர் சாதம் பிலேடில் போடா அதில் நான் திராச்சை, முந்திரி, மாதுளை, வெள்ளரி, கேரட் துருவல் என ஒரு ஸ்பெசல் டிஷ்சாக மாற்றிவிட்டேன்.


நான் : “யுவர் பிரேக்பாஸ்ட் ரெடி” என் ஹேமா கையில் கொடுக்க அதைப் பார்த்த அவளோ வாவ் டெக்ரெசனே சூபரா இருக்குனு சொல்லிமுடிக்க  இருவரும் சாப்பிட ஆரம்பித்தோம்.

ஹேமா : இன்னிக்கு உனக்கு என்ன ப்ரோக்ராம் எனத் தொடர.நான் : ப்ரோக்ராமா.. இன்னும் கொஞ்ச நேரத்துல டீவீல "கேப்டன் வேயோம் போடுவாங்க" அப்புறம் "ஜங்கிள் புக்" மத்தியானம் "சக்திமான்" அப்பரம் பெருசா ஒண்ணும் இருக்காது. 

என் மனதிற்குள் இருக்குற ஒரே ப்ரோக்ராம் நீதான் எப்படியாவது உன்ன படத்துக்கு கூட்டிட்டு போகணும் நான் நினைக்க.

ஹேமா : "இங்க தியேட்டர் இருந்தா ஏதாவது படத்துக்கு போலாம்."

நான் :  😍😍!!😍😍!!😍😍!!😍😍!!!!

அனித்தா இதுக்கு சமதிப்பலா? போர்வைக்குள் நடந்தது என்ன? அனித்தா அத பாத்தாளா? யார் கண்ணம் சிவக்க போகுது ?

"சிவந்த கன்னங்கள் " அடுத்த பகுதி .........

முந்தைய டைரிகள் [1]

------------------------------------------------------------------------------------------------------------"தினம் பேசுவோம் பலர் கிட்ட. எல்லாமே பேசமாட்டோம்எப்பவாவது பேசினாலும் மனசுல இருக்கறது எல்லாமே கொட்டுவோம் சிலர்கிட்டஉண்மை அன்பான உறவுக்கழகு"

மொட்ட கடிதம் அனுப்ப : AnandBusubee.Sarahah.com  

 

கருத்துரையிடுக Disqus

 
Top