ஒரு நாளில் நம்மைச் சுற்றி எவ்வளவோ விபத்துக்கள். அந்த விபத்துக்கள் நடந்த பின்
நம் மக்களின் மனநிலையை கவனித்து இருக்கிறீர்களா? தூரத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பது,
அல்லது பக்கத்தில் இருந்து ஒரு ‘அச்சச்சோ’வை உதிர்ப்பது, பக்கத்தில் இருப்பவர்களிடம் ஒருவித ஆர்வத்தோடு “என்னங்க நடந்துச்சு” என்று விசாரிப்பது. பின் 'நாம என்ன டாக்டரா? நம்மால் என்ன செய்ய முடியும்?’ என்ற இயலாமை மனப்பான்மை அப்புறம் 'வேற யாராவது உதவுவாங்க! என்று (குற்ற உணர்ச்சியை) சமாதானம் செய்து கொண்டு தங்கள் தங்கள் வேலையைப் பார்க்க கிளம்பிவிடுவது.
அதோடு போலீஸ், நீதிமன்ற வழக்கு, சாட்சி விசாரணை நடைமுறைகள் மண்டைக்குள் உதிக்க எதுக்கு வம்பு என்றும் தோன்றும். இதுதானே நம் மனநிலை?
இதே மனநிலையில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை இருந்த கலா “நம்மாலும் ஏதாவது செய்ய முடியும் என்கிற” நம்பிக்கையோடு இருபத்தி நாலு மணிநேரமும் விபத்தில் காயமுற்றவர்களுக்கு உதவ சென்னையில் தொடங்கியிருக்கும் அமைப்பு ‘அலெர்ட் (Alert)’.
ஒத்த மனநிலையில் உள்ளவர்களை சேர்த்துக் கொண்டு இந்த அமைப்பை தொடங்கியிருக்கிறார் கலா. இந்த அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான ராஜேஷ் “ விபத்து நடந்த இடத்தில் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியிருந்தால், விபத்து தொடர்பான வழக்கில் போலீஸார் உங்களைச் சாட்சியாக அழைக்க முடியாதுன்னு ஒரு சட்டம் இருக்கு. அப்புறம், ஒரு உயிரைக் காப்பாத்த நீங்க டாக்டராகத்தான் இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. இந்த இரண்டையும் புரிஞ்சுக்கிட்டா, உங்களால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்!'' என்று சொல்கிறார்.
அலெர்ட் அமைப்பைத் தொடர்புகொள்ள : 99440 66002. இந்த எண்ணை மொபைலில் சேமித்து வையுங்கள். இது சென்னையில் இருக்கும் பலருக்கு தெரியுமா என்று தெரியவில்லை எனவே இதைப் பலருக்கும் தெரிவியுங்கள் நண்பர்களே. இந்த அமைப்பை திறம்பட நடத்தும் அனைவருக்கும் நம் வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக Facebook Disqus