0


இப்பொழுது அதிகமான கைபேசிகளின் இயங்குதளமாக முன்னிலையில் இருந்து கொண்டிருப்பது android இயங்குதளம் இது கணனிவரை இயங்குதளமாக செயற்படுகின்றது விண்டோஸ் இயங்குதளங்கள் பல இருந்த போதும் பலரால் android    தெரிவு செய்யப்பட்டு வருகின்றது வேகமான செயற்பாடு அதிக applicatons களைக் கொண்டிருத்தல் என்பன இதன் அதிக வரவேற்புக்கு முக்கிய காரணங்களாகும் ஒவ்வொருநாளும் 190 நாடுகளில் இருந்து android applicatons  கள் தரவிறக்கம் செய்யப்படுகின்றன அதிகமாக தரவிறக்கம் செய்யும் நாடுகள் 
இதில் அதிகமான applicaton கள் கேம்ஸ்களுக்காகவே தரவிறக்கம் செய்யபடுகின்றன இன்று android டின் வளர்ச்சி 493 % சந்தையில் 250 மில்லியன் device கள் உள்ளன அதில் 190 மில்லியன் device களில் android உள்ளது அமெரிக்காவின் கைத்தொலைபேசி சந்தையில் 
android இல் பயன்படுத்தப்படும் top 10  applicaton கள்
இந்த இயங்குதளம் android in  என்ற நிறுவனத்தினுடையது இதை கூகிள் 2005 இல் அந்த நிறுவனத்திடமிருந்து வாங்கிவிட்டது 
 
2012 பெப்ரவரியில் ஒட்டுமொத்தமாக 300 மில்லியன் android device கள் பயன்படுத்தப்பட்டன 2011 டிசம்பரில் இது 0 .7 மில்லியனாக இருந்தது 
சந்தையில் android டின் அசுரவளர்ச்சி 
 
முதல் முதல் android கையடக்க தொலைபேசியான h.t.c dream   2008 செப்டம்பர் 23 இல் அறிமுகப்படுத்தப்பட்டது இதன் பின்னர் பல நிறுவனங்களில்  android புகுந்து விளையாடியது


ஆப்பிள்ஐக் கடுப்பக்கிய android 

android  இன் தயாரிப்பான 4.0 ice cream sandwhich google nexus 
என்ற இக்கையடக்க தொலைபேசி samsung ,google இன் இணைத்தயாரிப்பு  இதன் வெளியீட்டால் ஆட்டம் கண்ட நிறுவனம் ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் விற்பனை பெரும்பாலும் படுத்துவிட்டது எனலாம் ..
இதனால் மிகவும் கடுப்பாகியவர் ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த steve jobs . இவர் google ஐ கடுமையாக சாடியுள்ளார். apple இன் 
இயங்கு தளமான I.O.S இன் பல மென்பொருட்கள் google ஆல் திருடப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தினார். அந்ட்ரொஇட் ஒரு திருட்டு தயாரிப்பு. நான் எனது சொத்துக்களை இழந்தாவது கூகுள் உடன் போராடுவேன் எனக்கூறியுள்ளார். இதை அவர் அவரின் வரலாறு அடங்கிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இவரது புத்தகத்தை வெளியிட்டவர்  steve jobs  இன் நண்பரான வால்ட்டர்.  steve எதற்கு பயந்தாரோ அது அவர் இறந்த பின்னர் நடந்தது. ஆப்பிள் இன் iphone 4s விற்பனையை  android  இன் சும்சங் galaxy  S2 முந்தியது. வெளியாகி 55 நாட்களில் 3 மில்லியன் கையடக்க தொலை பேசிகள் விற்று தீர்ந்தன. அந்த வருடத்திற்கான மிகச்சிறந்த கைபெசியாகவும் அது தெரிவாகியது. நல்ல  வேளை இதை பார்க்க  steve jobs  உயிருடன் இல்லை. 


google இத்துடன் நிற்கவில்லை. எவ்வளவு காலம் தான் சும்சங் உடன் இணைந்து செயற்படுவது என்று எண்ணி தனக்கு ஒரு தனியான நிறுவனம் வேண்டும் என்று motorola நிறுவனத்தை கொள்வனவு செய்தது. இதற்கு அது செலவழித்த தொகை 12.5 பில்லியன் அமெரிக்க டாலர்ஸ். இச்செய்தியால் சும்சங் நிறுவனம் சற்று நிலை குலைந்து விட்டது. இந்த நிலை h.t.cபோன்ற நிறுவனங்களுக்கும் ஏற்படவே தாம் android ஐ எமக்கு மட்டும் தான் என கட்டுபடுத்த மாட்டோம் என google  தெரிவித்து மற்றைய நிறுவனங்களை சமாளித்தது. தற்போது உலகெங்கும் 10 பில்லியன் . அதாவது 1000 கோடி applications தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இது android உக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி.android  இன் வருகைக்கு பின்னர் தான் மொபைல் போன் application  துறை பல மில்லியன் உழைக்கும் துறையாக
உருவேடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  android  இவ்வாறு அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு பல சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வந்தாலும் பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது வைரஸ். அதிகமான வைரஸ் தாக்குதல்கள் android  ஐ இலக்கு வைத்தே நடத்தபடுகின்றன.
 
வியாபார ரீதியில் android  முகம் கொடுக்கும் பெரிய சவால் மற்றைய முன்னி கைபேசி நிறுவனங்கள் தான். microsoft , apple , oracle போன்ற நிறுவனங்கள்  பல்வேறு வழியில் தம்மை முடக்க முயற்சித்து வருவதாக google நேரடியாக கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தம்முடன் சந்தையில் போட்டியிட முடியாத நிலையில் இவை தம் மீது போலி குற்றச்சாட்டுக்களை விடுப்பதாக Google  கவலை தெரிவித்துள்ளது. எது எப்படி இருப்பினும் 
இன்றைய நிலையில் மொபைல் உலகில் கொடி கட்டிப்பறக்கும் நிறுவனமாக முன்னணியில் நிற்பது android நிறுவனம்தான் கூகுளே இன் பல தயாரிப்புக்கள் வெற்றியடைந்துள்ளன கூகிள்+, g mail ,கூகிள் மப் ,குரோம்..போன்றவை இதைவிட அண்மைக்காலத்தில் கூகிள் கிளாஸ் ,ஓட்டுனர் இன்றி இயங்கக்கூடிய கார் போன்றவற்றையும் கூகிள் அறிமுகப்படுத்தி உள்ளது இவ்வாறு மக்களிடம் சகல துறைகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது கூகிள் நிறுவனம் இணையம் என்றால் என்ன ?என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் தரும் பதில் கூகிள் 
இவ்வாறு தன்னை விருத்தி செய்து கொண்டுள்ளது கூகிள் ...இவ்வாறான அதிரடி அசுரவேக முன்னேற்றங்களினால் எதிர்காலத்தில் இணையம் என்றால் கூகுள்தான் என்ற தனது இலட்சியத்தை கூகிள் அடைந்துவிடும் போலத்தான் தெரிகிறது ஆனால் 
கூகிள் முகப்புத்தகம் போலவே அமெரிக்காவின் உளவாளியாக செயற்பட்டு வருகின்றது என்ற கருத்தையும் நாங்கள் சற்று செவி சாய்க்க வேண்டும்  


கருத்துரையிடுக Disqus

 
Top