திருடர்கள் திருடிய நகைகளை பொலீசார் அதிரடியாக மீட்டால் சரி, இல்லை என்றால் அவை ஆற்றில் போட்ட மாதிரித்தான்.
ஆனால் தமிழ்நாட்டில் பொலீசாரே அதிரும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வருபவர் அசார் ஹூசைன். ஓய்வு பெற்ற டாக்டர். இவரது வீட்டில் இருந்த 70 சவுரன் தங்க நகை, கடந்த 20ம் தேதி திருட்டு போனது. இது குறித்து ஹூசைன், போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில்…
அன்று இரவு 7.45 மணி அளவில் ஹூசைனின் வீட்டு காலிங் பெல் அடித்தது. இதையடுத்து வீட்டு கதவை திறந்தார் ஹூசைனின் மனைவி சானா. ஆனால் வீட்டு வாசலில் யாரும் இருக்கவில்லை.
இந்த நிலையில் வாசற்படியில் பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடந்தது. அதை எடுத்து பார்த்த சானாவிற்கு ஒரே அதிர்ச்சி. அதில் கடந்த 20ம் தேதி வீட்டில் இருந்து காணாமல் போன 70 பவுன் நகைகள் இருந்தது. மேலும் அந்த கவரின் உள்ளே ஒரு கடிதமும் ஒன்று இருந்தது.
அக் கடித்தத்தில்…
”நான் மிக பெரிய தவறை செய்துவிட்டேன். சானா அம்மாவுக்கு நான் இப்படி செய்திருக்க கூடாது. என்னை மன்னித்துவிடுங்கள்”
என்று எழுதப்பட்டிருந்தது.
இதை உடனடியாக போலீசாருக்கு அறிவித்த சானா, தனது திருட்டு போன நகைகள் கிடைத்துவிட்டதாக கூறினார்.
சானா கூறிய சம்பவத்தை கேட்டு போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இவரை திருடன் என்று அழைக்கக்கூடாது…. திருடர்… என்று மரியாதையாக அழைக்கனும்..!
கருத்துரையிடுக Facebook Disqus