Fraunhofer Institute உருவாக்கியுள்ள இந்த பஸ் ஒன்றின் விலை, 10 மில்லியன் டாலர்.
இந்த பஸ் டெஸ்ட் செய்யப்படுவதன் காரணம், அதன் நீளம் அல்ல. அதாவது, இவ்வளவு நீளமான பஸ் வீதிகளில் செல்ல முடியுமா என்பதல்ல பிரச்சை. திரும்பும்போது பஸ் பேலன்ஸ் தவறி குடைசாய்த்துவிடும் அபாயம் உள்ளதா என்றே டெஸ்ட் செய்யவுள்ளார்கள்.
இதை இயக்கும் டிரைவர்கள், இதற்காக சிறப்பு லைசென்ஸ் எதையும் எடுக்க வேண்டியதில்லை. ஆனால், சிறப்பு பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும். காரணம், மற்றைய பஸ்களில் இல்லாத விதத்தில் ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டமே, பஸ்ஸின் பின பகுதியை, முன் பகுதிக்கு ஏற்ற விதத்தில் இயங்க வைக்கிறது. இந்த சிஸ்டத்தில் பஸ்ஸை இயக்க டிரைவருக்கு சிறப்பு பயிற்சி தேவை.
பல நகரங்களும் இந்த பஸ்ஸில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளன. காரணம், அலுவலக ரஷ் நேரங்களில் ஒரு ரெயிலை இயக்குவதைவிட இது மலிவானது.
இந்த பஸ்தான உலகிலேயே மிக நீளமானது என்ற போதிலும், உலகிலேயே அதிகளவு பயணிகளை கொண்டு செல்லும் பஸ் இதுவல்ல. சீனாவில் உள்ளது அந்த பஸ். அதில் 300 பயணிகள் சீட்கள் உள்ளன. அதாவது, அதைவிட அளவில் சிறிய பஸ்ஸில், இதைவிட அதிக பயணிகள்!
ஜெர்மனியர்களுடன் ஒப்பிடும்போது, சீனர்கள் உயரம் குறைந்தவர்கள் என்னதால் அப்படி உள்ளதோ!