மாலதீவு, மாலேவில் எடுக்கப்பட்ட போட்டோ இது. மாலதீவின் முன்னாள்
ஜனாதிபதி மொஹமெட் நசீத்தின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியபோது,
ஆர்ப்பாட்டகாரர்களை கலைக்க ராணுவம் தருவிக்கப்பட்டது. ராணுவமும்,
ஆர்ப்பாட்டம் செய்தவர்களும் தள்ளு-முள்ளுவில் ஈடுபட்ட காட்சி இது.
சௌதி அரேபியா, புரைடாவில் எடுக்கப்பட்ட போட்டோ இது. இங்கு நடைபெற்ற
பேரீச்சம்பழ திருவிழாவின்போது (Festival of Dates) வியாபாரிகள் வாகனங்களில்
பேரீச்சம்பழங்களை ஏற்றி வந்து விற்கும் காட்சி இது. பு
ரைடா நகரம், ரியாத்துக்கு வடக்கே உள்ளது.
பிலிப்பீன்ஸ், சாமர் தீவில்
எடுக்கப்பட்ட போட்டோ இது. இங்கு இரு தினங்களுக்கு முன் சுனாமி எச்சரிக்கை
விடுக்கப்பட்டிருந்தது. தீவில் இருந்த அனைவரும் அங்கிருந்து
வெளியேறியிருந்தனர். சுனாமி அபாயம் நீங்கியது என அறிவிக்கப்பட்ட பின்,
தற்போது தீவுக்கு திரும்ப துவங்கியுள்ளனர்.
சிரியா, எல்-ஈடா மாவட்டத்தில்
எடுக்கப்பட்ட போட்டோ. சிரியா விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று
குண்டு வீசுவதை, அப்படியே போராளிக்குழு உறுப்பினர் ஒருவர் எடுத்த போட்டோ
இது. குண்டு போடப்பட்ட அரை மணி நேரத்துக்குள் போட்டோ சிரியாவின் செய்தி
தணிக்கையை மீறி வெளியே வந்துவிட்டது.
தாய்லாந்தின் யாலா மாகாணத்தில் எடுக்கப்பட்ட போட்டோ இது. தாய்லாந்து முஸ்லீம் கிராமத்தவர் ஒருவர் அமர்ந்து என்ன கேட்கிறார்? பறவைகள் பாடுவதை கேட்கிறார்! சர்வதேச பறவைகள் பாடும் போட்டி (international bird-singing contest) இங்கு நடைபெறுகிறது. உலகில் பல நாடுகளில் இருந்தும் பாடக்கூடிய பறவைகள் போட்டிக்கு வந்திருந்தன.
ஸ்காட்லன்ட், பிரேமர் நகரில் எடுக்கப்பட்ட போட்டோ இது. பார்த்தவுடன், கயிறு இழுக்கும் போட்டி என்று புரிந்து கொண்டிருப்பீர்கள். செப்டெம்பர் மாதத்தின் முதலாவது வார இறுதி நாட்களில், இந்த சிறு கிராமத்துக்கு ஸ்காட்லாந்து முழுவதிலும் இருந்து ஆட்கள் வருவார்கள். ஒரே விளையாட்டும், டான்ஸூமாக இருக்கும். ஸ்காட்லாந்தின் பாரம்பரிய விளையாட்டுகளில், கயிறு இழுத்தலும் ஒன்று!
பெல்ஜியம், மெலோன் நகரில் எடுக்கப்பட்ட போட்டோ. குழந்தை கொலைகாரன் என்று பிரபலமாகிவிட்ட மார்க் டுட்ரோவின் முன்னாள் மனைவியை ஜெயிலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஜெயில் வாசலில் ஆர்ப்பாட்டம் செய்த ஒருவரை போலீஸ், ‘லேசாக தட்டி’ அங்கிருந்து அகற்றும் காட்சி. கொலைகாரரின் முன்னாள் மனைவி மிஷால் மார்டின் தற்போது கோர்ட்டால் விடுவிக்கப்பட்டு விட்டார்.
தாய்லாந்து, நரதிவாட் மாகாணத்தில் எடுக்கப்பட்ட போட்டோ இது. குண்டுவெடிப்பு ஒன்றில் முழுமையாக அழிந்துபோன சூப்பர் மார்க்கெட் ஒன்றில் போலீஸ் அதிகாரி ஒருவர் தடயங்களை தேடும் காட்சி இது. தென் தாய்லாந்தில் உள்ள தீவிரவாத அமைப்பு ஒன்றின் கைவரிசை இந்த குண்டுவெடிப்பு.
மெக்சிகோ, மெக்சிகோ சிட்டியில் எடுக்கப்பட்ட போட்டோ. கலகம் அடக்கும் போலீஸ் ரிலாக்ஸாக தமது பஸ்ஸூக்கு முன்னே ஓய்வு எடுக்கும் காட்சி இது. மெக்சிகோவில் நடைபெறும் ஆயுதக்குழு மோதல்களை தடுக்கவில்லை என அந்நாட்டு ஜனாதிபதி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மக்கள் போராட்டங்கள் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில்ஈ தலைநகரின் முக்கிய இடங்களில் கலவரம் அடக்கும் போலீஸை நிறுத்தி வைத்துள்ளனர். போராட்டம் ஏதும் இன்னமும் பெரிய அளவில் வெடிக்கவில்லை.
கடந்த போட்டோ மெக்சிகோவில் எடுக்கப்பட, இந்த போட்டோவில், உலகின் மற்றொரு பக்கத்தில் கலவரம் அடக்கும் போலீஸ்! இந்த போட்டோ எடுக்கப்பட்டது, எகிப்திய தலைநகர் கய்ரோவில். சரி இவர்கள் கவனமாக பார்த்துக்கொண்டிருப்பது எதை? கலகக்காரர்களின் வருகையையா?
இல்லை! அவர்கள் கால்பந்து போட்டி ஒன்றை பார்க்கிறார்கள். கய்ரோ ராணுவ ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆபிரிக்க சேம்பியன் லீக் (African Champions League – CAF) போட்டிகளின்போது, எகிப்தின் ஜமாலெக் அணிக்கும், கானா நாட்டின் பெரகும் அணிக்கும் இடையே நடந்த கால்பந்து போட்டியின்போது, இந்த போட்டோ எடுக்கப்பட்டது.
பெல்ஜியம் பார்முலா ஒன் போட்டியன்போது எடுக்கப்பட்ட போட்டோ இது. லோட்டஸ் அணி டிரைவர் Romain Grosjean (பிரான்ஸ்) செலுத்திய காரும், ஃபெராரி அணி டிரைவர் Fernando Alonso (ஸ்பெயின்) செலுத்திய காரும் மோதிக்கொண்ட போது எடுக்கப்பட்ட போட்டோ இது.
காத்மன்டு, நேபாளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ இது. இங்குள்ள திபெத்திய பள்ளி ஒன்றில் (ஆம். நேபாளத்தில் திபெத்திய குழந்தைகளுக்கு தனியாக பள்ளி உள்ளது) திபெத்திய ஜனநாயக தினத்தை கொண்டாடும் சிறுவர்களை போட்டோவில் காணலாம். போட்டோவில் புகை போல தெரிவது, மாவு! திபெத்தியர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்று பார்லி மாவு எறிவது!