விலை உயர்ந்த சூப்பர் கார் உரிமையாளர்கள் ஹை-ரைஸ் அப்பார்ட்மென்ட்களில் இருக்கும்போதும், தமது கார்களில் ஒரு கண் வைத்திருக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது, ஒரு சிங்கப்பூர் கட்டுமான நிறுவனம்.


அப்பார்ட்மென்டின் தரைப் பகுதியில் இதற்காக அமைக்கப்பட்ட ஸ்பெஷல் லிஃப்ட் ஒன்று, காரை மேலே உரிமையாளரின் அப்பார்ட்மென்ட் உள்ள ஃபுளோர் வரை உயர்த்தி, வீட்டின் லிவ்விங் ரூமுக்கு அருகே கொண்டுபோய் விட்டுவிடுகிறது.

அதன்பின் என்ன, காரின் உரிமையாளர் தமது வீட்டு சோபாவில் சாய்ந்தபடி, காரை பார்த்துக் கொள்ளலாம்.

சிங்கப்பூரில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஹமில்டன் பார்க் என்ற 30 மாடி சொகுசு அப்பார்ட்மென்ட்டில் இந்த வசதி அனைத்து வீடுகளுக்கும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. (அப்பார்ட்மென்டின் விலை, 9 முதல் 20 மில்லியன் டாலர்)

வீட்டு உரிமையாளரின் பெரு விரல் ரேகை ஒரு ட்ராக்-ரீடர் கருவியில் பதிவு செய்யப்பட்டு, அப்பார்ட்மென்ட் தரைப்பகுதி லாபிக்கு அருகே உள்ளது. அதில் போய் விரலை வைத்தால்தான், காரை மேலே கொண்டு செல்லும் லிஃப்ட் திறக்கும். காரை அதற்குள் விட்டுவிட்டு, மேலே சென்றால், வீட்டு லிவ்விங் ரூமுக்கு அருகே கார் அதுபாட்டுக்கு வந்துவிடும்.

அப்பார்ட்மென்ட் வாயிலில் இருந்து வீடுவரை கார் எப்படி செல்கிறது என்று பார்க்க வேண்டுமா? அடுத்த போட்டோக்களை கிளிக் செய்யவும்.
 
அப்பார்ட்மென்ட் வாசல்வரை காரை டிரைவ் பண்ணி வந்துவிட்டு, காரை லிஃப்ட்டுக்கு முன்னே நிறுத்திவிட்டு, ட்ராக்-ரீடர் கருவியை நோக்கி செல்கிறார் உரிமையாளர். இதில்தான் அவர் தனது கை பெருவிரலை வைக்க வேண்டும்… காருக்கு லி.ப்ட் கதவு திறப்பதற்கு!
 
இடதுபுறம், உரிமையாளர் தனது பெருவிரல் ரேகை மூலம் தமது அடையாளத்தை உறுதி செய்கிறார். வலப்புறத்தில், லிஃப்ட்டுக்கான கதவு திறக்கிறது. நோ வாட்ச்மேன்!






உரிமையாளரில் அடையாளம் சரிபார்க்கப்பட்டு விட்டது. அவர் இந்த பில்டிங்கில் எந்த மாடியில், எத்தனையாவது அப்பார்ட்மென்டில் வசிக்கிறார் என்பதை எந்திரம் புரிந்து கொண்டு விட்டது. லிஃப்ட், கிளம்பி விட்டது.



 
காரை தூக்கிச் செல்லும் லிஃப்டை, பில்டிங்குக்கு வெளியே இருந்து பார்த்தாலே தெரியும். இதுவே, இந்த பில்டருக்கு ஒரு அட்டகாசமான விளம்பரம். இதே ஸ்டைலில் மற்றொரு பில்டிங் கட்டும்போது, சடசடவென விற்றுத் தீர்ந்துவிடும்.



இதுதான் இறுதிக் கட்டம். வீட்டின் லிவ்விங் ரூமுக்கு அருகே காரை உயர்த்தி வந்த லிஃப்ட்டும் வந்து விட்டது. ஏற்கனவே மற்றொரு கார் பார்க் பண்ணப்பட்டு இருந்தால், ஆட்டோமேட்டிக்காக 2-வது ஸ்பாட்டில் இந்த கார் நிறுத்தப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும், இரு கார்கள் பார்க் பண்ண வசதி உள்ளது.
 
Top