0
 
வீட்டு கடன் வாங்கினால் எப்படி வரியை மிச்சப்படுத்தலாம் என்று பார்ப்போம்.
நீங்கள் ஏற்கனவே வருமான வரி கட்டுபவராக இருந்தால் வீடு வாங்கையில் வீட்டு கடன் வாங்கினால் வருமான வரியை மிச்சப்படுத்தலாம்.

வீட்டு கடன் வாங்கினால் எவ்வாறு வரியை மிச்சப்படுத்தலாம்?

நீங்கள் வீட்டு கடன் வாங்கியிருந்தால் அதற்கான வட்டி கட்டுவதால் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு பெறலாம். அதாவது உங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சமாக இருந்தால் வருமான வரி தாக்கல் செய்கையில் வீட்டு கடன் வட்டி ரூ.1.5 லட்சத்தை கழித்துவிட்டு வருமானத்தை ரூ.8.5 லட்சம் என்று குறிப்பிட வேண்டும்.

ஆனால் வரி விலக்கு பெற வீடு உங்கள் பெயரில் இருக்க வேண்டும்.
இது தவிர நீங்கள் மாதாமாதம் வட்டியுடன் சேர்த்து கட்டும் முதலுக்கும் வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம். அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரி விலக்கு பெறலாம். ஆனால் 80 சி பிரிவின் கீழ் முதல் தொகைக்கு வரி விலக்கு பெற்றால் எல்.ஐ.சி. உள்ளிட்ட பிறவற்றுக்கு வரி விலக்கு பெற முடியாது.

ஒரு வேளை வீடு கணவன், மனைவி பெயரில் கூட்டாக இருந்து இருவருமே வீட்டு கடன் வாங்கியிருந்தால் இருவருமே 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம். மேலும் வட்டிக்கான தொகைக்கும் இருவருமே வரி விலக்கு பெறலாம். ஒரு வேளை நீங்கள் இரண்டு வீட்டு கடன் வாங்கியிருந்தால் இரண்டுக்குமே வரி விலக்கு கோரலாம். ஆனால் இங்கும் வட்டி தொகைக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சமும், முதலுக்கு ரூ. 1 லட்சமும் தான் வரி விலக்கு பெற முடியும்.

கருத்துரையிடுக Disqus

 
Top