பலரும் பாரத ஸ்டேட் வங்கியில் பி.பி.எப். கணக்கை தொடங்க வேண்டும் என்று நினைப்பர். ஆனால் எவ்வாறு தொடங்க வேண்டும் என்று தெரியாது இருப்பர். அதனால் இவ்விஷயத்தை தள்ளி போட்டுக் கொண்டே இருப்பர். மேலும் மக்கள் பொதுவாக இந்தியாவின் நம்பகமான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பி.பி.எப். கணக்கை தொடங்க வேண்டும் என்று நினைப்பதால், இத்தாமதம் ஏற்படுகிறது. இனி எளிய முறையில் பாரத ஸ்டேட் வங்கியில் பி.பி.எப். கணக்கை தொடங்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
1. பாரத ஸ்டேட் வங்கியில் பி.பி.எப். கணக்கை தொடங்குவது ஒரு எளிதான விஷயமாகும். 18 வயதிற்கு மேற்பட்ட ஒரு குடிமகன் தனக்காகவோ அல்லது தங்களின் பாதுகாப்பிற்கு கீழ் உள்ள சிறார்களின் சார்பாகவோ பி.பி.எப். கணக்கை தொடங்கலாம்.
2. பி.பி.எப். கணக்கை தொடங்க குறைந்தபட்ச தொகையாக வருடத்திற்கு ரூபாய் 500 /- ம், அதிகபட்ச தொகையாக வருடத்திற்கு ரூபாய் 70,000 /- ம் டெபாசிட் செய்யலாம்.
3. நீங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பி.பி.எப். கணக்கை தொடங்குவதற்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது உங்கள் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள வங்கியின் கிளையிலிருந்து நேரடியாக விண்ணப்பத்தை பெறலாம்.
4. பாரத ஸ்டேட் வங்கியில் பி.பி.எப். கணக்கை ஆன்லைன் மூலம் தொடங்க, பாரத ஸ்டேட் வங்கியின் வலைத்தளத்தின் மூலம் பயனர் ஐடி(user ID) மற்றும் கடவுச்சொல்லை(password) பெற்று பதிவு செய்து ஆன்லைன் கட்டணத்தை செலுத்தலாம்.
5. பி.பி.எப். கணக்கை தொடங்க அடையாள அட்டை, பாஸ்போர்ட் நகல் அல்லது குடும்ப அட்டை அல்லது பான்கார்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். கூடவே இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் சமர்பிக்க வேண்டும்.
6. கணக்கை தொடங்க இருக்கும் வங்கியின் கிளையில் நீங்கள் வங்கி கணக்கு சேமிப்பை வைத்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
7. யாரை நாமினியாக(nominee) போட விரும்புகிறீர்களோ அவர்களது பெயரை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, தெரிந்தவர்கள் யாரிடமாவது சாட்சி கையொப்பம் பெற வேண்டும்.
8. அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட அடையாள அட்டை அல்லது முகவரிச் சான்று கட்டாயம் தேவைப்படும்.
9. தேவைப்பட்டால் சரிபார்த்தலுக்காக கையில் மூலச்சான்றுகளை வைத்துக் கொள்வது நல்லது. பொதுவாக இருபது நிமிடங்களுக்குள் நீங்கள் கணக்கை தொடங்கலாம்.
10. பணத்தை செலுத்துவதற்கான ஒரு சீட்டை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் ஆரம்ப சந்தாவாக ஒரு குறிப்பிட்ட தொகையை உங்கள் கணக்கில் செலுத்த வேண்டும்.
11. ஒரு சேமிப்பு புத்தக பற்றுவரவு(saving book passbook) போன்று உங்கள் புகைப்படத்துடன் கூடிய ஒரு பற்றுவரவு(passbook) தரப்படும். அதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள நாமினியின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். புத்தகத்தின் பின்புறம் பி.பி.எப். விதிகள் பற்றி அச்சடிக்கப்பட்டிருக்கும்.
12. உங்கள் கணக்கோடு கூடுதலாக மைனர் பெயரில் ஒரு கணக்கை தொடங்க வேண்டும் என்றால் அதற்கான மொத்த சந்தா அளவு ரூ. 70,000 / - ஆகும்.
13. நீங்கள் கட்டும் தொகைக்கு வட்டி கணக்கீடு செய்து எடுத்துக் கொள்ள ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதிக்கு முன்னர் சந்தாக்களை கட்டிவிட வேண்டும்.
14. அஞ்சலகத்தில் பி.பி.எப். கணக்கை தொடங்க விரும்பினால் உள்ளூர் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று விசாரிக்கவும். நீங்கள் எந்த தலைமை அஞ்சல் அலுவலகத்திலும் கணக்கை தொடங்கலாம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தர துணை அஞ்சல் அலுவலகங்களிலும் கணக்கை தொடங்க முடியும்.
15. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் உங்கள் சேமிப்பு வைப்பு நிதியை தொடங்கலாம்.
16. நீங்கள் உங்கள் பெயரில் ஒரே ஒரு பி.பி.எப். கணக்கை மட்டுமே தொடங்க முடியும். எந்த இடத்திலாவது நீங்கள் இரண்டு கணக்குகள் வைத்திருப்பது தெரியவந்தால், நீங்கள் தொடங்கியுள்ள இரண்டாவது கணக்கு மூடப்பட்டு, அந்த இரண்டாவது கணக்கிலுள்ள அசல் தொகையானது மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். வட்டி கிடைக்காது.
17. நீங்கள் ஒரு தனிப்பட்ட நபரோடு கூட்டுக்கணக்கை(joint account) தொடங்க முடியாது. ஒரே ஒரு நபரின் பெயரில் தான் கணக்கு தொடங்கப்பட வேண்டும்.
18. ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளை உங்கள் கணக்கில் சேர்க்கலாம். கணக்கு வைத்திருப்பவர் இறந்து விட்டால், நாமினிகள் மேற்கொண்டு கணக்கை தொடர முடியாது. ஒருவேளை நாமினிகள் இல்லாவிட்டால், இறந்தவரின் வாரிசுகள் பணத்தை பெறலாம்.
19. பி.பி.எப். கணக்கில் பணம் போடுவதன் நன்மை என்னவென்றால், பணத்தை இழக்கும் ஆபத்து இல்லை, முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கு வரிவிலக்கு உண்டு, ஆண்டிற்கு எட்டு சதவிகிதம் அதிகமாக கிடைக்கும், கிடைக்கும் வட்டிக்கும் வரி கிடையாது, முதலீட்டில் நெகிழ்வுதன்மை, அனைத்து சொத்துவரியிலிருந்தும் விலக்கு, வட்டி விகிதத்தில் மாற்றம், குறைந்த இருப்பின் மீது வட்டி கணக்கிடப்படும் போன்ற நல விஷயங்களை இதில் காணலாம்.
20. இந்தியக் குடியுரிமை பெறாதவர்கள், இந்தியாவில் வேலை செய்து சம்பாதித்து கொண்டிருந்தால், அவர்களும் இதில் கணக்கை தொடங்கலாம். ஆனால் அதற்கு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
என்ன பி.பி.எப். கணக்கை தொடங்க ரெடியாயிட்டீங்களா?
கருத்துரையிடுக Facebook Disqus