பல ஆண்டுகளுக்குப் பின், சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். கடைத் தெருவில் தற்செயலாக, என் நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். பள்ளியில் படிக்கும் போது, படிப்பே வராத மக்குப் பையன் அவன். எல்லா ஆசிரியர்களும், "இவன் உருப்படவே மாட்டான்...' என்றுதான் அர்ச்சிப்பர். ஆனால், அவன் வியாபாரத்தில் இறங்கி, இன்று, புகழ், செல்வாக்கு, வசதி வாய்ப்பு என, கொடி கட்டிப் பறக்கிறான்.
அவனது இன்றைய சூழல், எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்தது. ஆனாலும், பள்ளிக் கூடத்தில், "படிப்பில் கெட்டி' என்று எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்கினாலும், தனியார் நிறுவனத்தின் வேலையிலும், வாடகை வீட்டிலும் காலந்தள்ளும் என் சூழல் வருத்தப்பட வைத்தது.
இன்றைய மாணவர்களின் பெற்றோரே... பிள்ளைகளுக்கு படிப்பு வரவில்லையெனில், அவர்களை படிக்கக் கட்டாயப்படுத்தாமல், அவர்களுக்கு எந்தத் துறையில் ஆர்வமோ அதில் ஈடுபட வையுங்கள். அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
குறிப்பு: நண்பனை "உருப்படவே மாட்டான்...' என அதிகமாக திட்டித் தீர்த்த, வாத்தியாரின் மகள் திருமணச் செலவுக்கு, கணிசமாகப் பண உதவி செய்து, அவரை சந்தோஷப்படுத்தியிருக்கிறான் என் நண்பன்.
கருத்துரையிடுக Facebook Disqus