How File Complaint With The Income Tax Ombudsman
உங்களுக்கு வருமான வரித்துறையின் செயல்பாடுகளில் ஏதாவது குறைபாடு இருந்தால் நீங்கள் நேரடியாகவோ அல்லது உங்களின் சார்பாக யாராவதோ சம்பந்தப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிக்கு எதிராக எழுத்து வடிவில் குறைத்தீர்ப்பாணையத்தில் புகார் அளிக்கலாம்.
 
இந்த புகாரில் கண்டிப்பாக மனுதாரரின் கையொப்பம் இருந்தாக வேண்டும். ஒரு வேளை மனுதாரரின் சார்பாக இந்த புகாரை வேறு யாராவது தாக்கல் செய்தால், அந்த நபருடைய கையொப்பமும் இருந்தாக வேண்டும். இந்த புகாரில் மனுதாரரின் பெயர், முகவரி, புகார் கூறப்பட்டுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தின் பெயர், சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயர், புகாரின் முழு விபரம், அதற்கு தேவையான தஸ்தாவேஜுக்கள் (ஏதுனும் இருந்தால்) மற்றும் மனுதாரர் குறைத்தீர்ப்பாணையத்தில் இருந்து எதிர்பார்க்கும் தீர்வு ஆகியவைகளை விலாவரியாக குறிப்பிட வேண்டும்.

குறைத்தீர்ப்பாணையம் மின்னணு மூலமாகவும் புகார்களை பெற்றுக்கொள்ளும். இந்த வகை புகாரை பதிவு செய்வதற்காக
குறைத்தீர்ப்பாணையம் அதனை அச்சிட்டுக் கொள்ளும்.
மேற்கூறிய படி அச்சிடப்பட்ட புகாரில் மனுதாரர் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் கையொப்பம் இட வேண்டும். பொதுவாக குறைத்தீர்ப்பாணையம் தீர்வு எடுக்க செயலில் இறங்கும் முன் மனுதாரர் கையொப்பம் இட்டிருக்க வேண்டும்.

கையெழுத்துடன் இருக்கும் அச்சிடப்பட்ட புகார், முறையான புகாராக எடுத்துக் கொள்ளப்படும். இந்த புகார் நீங்கள் எந்த தேதியில் மின்னணு மூலம் அனுப்பி இருக்கிறீர்களளோ அந்த நாள் முதல் செல்லுபடியாகும்.
எந்த ஒரு புகாரையும் குறைத்தீர்ப்பாணையம் எடுத்துக் கொள்ள வேண்டுமானால்:

குறைத்தீர்ப்பாணையத்தில் புகார் அளிக்கும் முன் மனுதாரர் எந்த அதிகாரிக்கு எதிராக புகார் அளிக்கிறாரோ, அவருடைய மேலதிகாரியிடம் எழுத்து வடிவில் ஒரு புகார் கொடுத்திருக்க வேண்டும். அந்த புகாரை ஒன்று அவர்கள் நிராகரித்திருக்க வேண்டும் அல்லது புகார் அளித்த ஒரு மாத காலத்திற்குள் எந்த பதிலும் மனுதாரருக்கு அனுப்பியிருக்கக் கூடாது அல்லது அனுப்பிய பதில் மனுதாரருக்கு திருப்தி படுத்தும் வகையில் இருந்திருக்கக் கூடாது.

வருமான வரித்துறை உயர் அதிகாரியிடம் இருந்து பதில் வந்த பின் அந்த தேதியிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் குறைத்தீர்ப்பாணையத்தில் புகார் அளிக்க வேண்டும். அல்லது வருமான வரித்துறை உயர் அதிகாரியிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை என்றால், நீங்கள் புகார் அளித்த தேதியிலிருந்து ஒரு வருடம் ஒரு மாத காலத்திற்குள் குறைத்தீர்ப்பாணையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

குறைத்தீர்ப்பாணையத்திற்கு வரும் புகாரின் பொருளுக்கு ஏற்கனவே குறைத்தீர்ப்பாணையத்தில் தீர்ர்ப்பு வழங்கப்பட்டு இருக்கக் கூடாது. அது அதே மனுதாரரிடம் அல்லது வேறு மனுதாரரிடம் இருந்து வந்ததாக இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

கடைசியாக, கொடுக்கப்படும் புகார் விளையாட்டுத்தனமாகவும் அடாவடித்தனமாகவும் இருக்கக் கூடாது.
 
Top