லிச்சி பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் இதில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளதால், இது செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, உடலுக்கு எனர்ஜியை தரக்கூடியது. இந்த பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை சிறப்பான முறையில் மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம்

மேலும் இந்த லிச்சி மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இப்போது அந்த லிச்சி மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!



 
தேவையான பொருட்கள்:

லிச்சி - 250 கிராம்
பால் - 3 கப்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் லிச்சி பழத்தை கழுவி, தோலுரித்து விதைகளை நீக்க வேண்டும்.

பின்பு மிக்ஸி/பிளெண்டரில் லிச்சி, பால், ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

கலவையானது நன்கு மென்மையான பின்பு, அதனை டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டியை சேர்த்து பரிமாறினால், சூப்பரான லிச்சி மில்க் ஷேக் ரெடி!!!
 
Top