குங்பூ எனப்படும் மார்ஷியல் ஆர்ட்ஸ் தற்காப்பு கலை, பிறந்த இடம், சீனாவின் ஷாவலின் கோவில்.

இக்கோவில், 1500 ஆண்டு பழமையானது. சீனாவின் குஷாங்கே சான் மலைத்தொடரில் ஏழு மலைகள் உள்ளன. இவை சீனர்களால் புனித மலைகளாக கருதப்படுகின்றன. இவற்றில் ஒன்று மவுன்ட் சவோசி. இதன் வட திசையில் தான் ஷாவலின் கோவில் கட்டப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவிலிருந்து போதிதர்மா என்ற துறவி, புத்தமதத்தை பரப்ப சீனாவிற்க்கு சென்றார். அப்போது மதத்தை பரப்ப ஏதுவாய், சில சண்டை கலைகளையும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அதில் ஒன்று தான் குங்பூ.
குங்பூ தற்காப்பு கலையில், 72 வகைகள் உள்ளன. அவற்றில், 15 வகைகள் தான், தற்போது இங்கு சொல்லித்தரப்படுகின்றன.

இப்பயிற்சி பெறுபவருக்கு இரும்பு போன்ற உடம்பும், திடமான மனதும் மிகவும் அவசியம்.

இந்த கலையை முறையாக கற்க, குறைந்த பட்சம் மூன்று முதல் பத்து ஆண்டுகள் ஆகும்.

கடந்த 1977ல் முதன் முதலில் "ஷாவாலின் டெம்பிள்' என்ற படம் வந்தது. பின் நேஷனல் ஜியாகிராபி, சானலில் இக்கோவில் பற்றி ஒரு தொடர் ஒளிபரப்பானது. அதன் பின், புரூஸ்லீ உட்பட பல நடிகர்கள் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் வந்ததால், இந்தக் கோவில் பிரபலமாகி விட்டது. ரஷ்ய அதிபர் புடின், இந்த கோவிலுக்கு வந்துள்ளார்.
 
Top