0
27277.jpg
இணையத்தளங்களில் எந்தவொரு கணக்கினை ஆரம்பிப்பதற்கும் கடவுச் சொற்கள் (Password) அவசியப்படுகின்றன.

இக் கடவுச்சொற்களின் பாதுகாப்பு தன்மை குறைவாக காணப்படுவதனால் அண்மைக்காலங்களில் திருடப்பட்டு தனிநபர் கணக்குகள் ஹேக் செய்யப்படுகின்றன.

இவற்றினைக் கருத்தில் கொண்ட அமெரிக்காவின் நியூயோர்க்கில் வசிக்கும் 11 வயது மாணவியான Mira Modi என்பவர் உயர் பாதுகாப்புடைய கடவுச்சொற்களை உருவாக்கி அவற்றினை விற்பனை செய்து வருகின்றார்.

உயர் பாதுகாப்புடைய கடவுச் சொற்கள் தேவையானர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒவ்வொரு கடவுச்சொற்களும் தலா 2 டொலர்கள் பெறுமதியில் வழங்கி வருகின்றார்.

மேலும் கடவுச்சொற்களை தனது கையினால் எழுதி மின்னஞ்சல் முகவரியின் ஊடாக அனுப்பிவருகின்றார்.

pasword_selling_002.jpg

கருத்துரையிடுக Disqus

 
Top