0


அன்டார்டிகா உலகம் அறிந்த வரையில் மனிதர்கள் வாழக் கடினமான பகுதியாக விளங்குகின்றது. இந்த ஒரு காரணத்தினாலேயே அங்கு பல்வேறு மர்மங்கள் அரங்கேறி வருகின்றன. இதோடு அவை குறித்த உண்மை தகவல்களும் மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டு வருகின்றது.

பல்வேறு சதியாலோசனை கோட்பாட்டாளர்களும் அன்டார்டிகாவில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் அதாவது யுஎஃப்ஒ'கள் பறந்து சென்றதாக நம்புகின்றனர். இதோடு ஹிட்லர் உலகப் போர் நிறைவடையும் சமயத்தில் அன்டார்டிகாவிற்கு சென்றதாகவும் கூறப்படுகின்றது.


அன்டார்டிகா பனி பகுதியைச் சுற்றிப் பல்வேறு மர்மங்கள் இருப்பதோடு அவை நிரூபிக்கப்படாமல் இருப்பதால் அவை குறித்த உண்மைத் தன்மை தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகின்றது.

உண்மை

அன்டார்டிகாவின் பிரமிட் பகுதிகளைச் சுற்றி பல்வேறு யுஎஃப்ஒ'கள் பறந்து சென்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் ஏலியன் நடமாட்டம் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

ஏலியன்

இந்தக் காலத்தில் முழுவதும் பனியால் சூழப்பட்டிருக்கும் அன்டார்டிகாவில் பனி இல்லா அன்டார்டிகாவில் ஏலியன்கள் வாழ்ந்து வந்ததாக சதியாலோசனை கோட்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பனி

மேலும் அன்டார்டிகாவில் மர்ம நிகழ்வுகள் அடிக்கடி அரங்கேறி வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிகழ்வு

யூட்யூப் சேனலான UFOvni2012 அன்டார்டிகா பகுதியில் ஏலியன் வடிவமைத்த மர்ம பிரமிட் ஒன்று இருப்பதாகவும் அவற்றில் இருந்து காந்த அலைகள் வெளிப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்பு

மேலும் அப்பகுதியில் ஏற்படும் மர்மமான காந்த அலைகள் இது குறித்த சந்தேகங்களை அதிகரிப்பதோடு இந்த பிரமிட் ஏலியன்களால் கட்டமைக்கப்பட்டது பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் நாஸி படையினர் அறிந்ததாகவும் கூறப்படுகின்றது.

சிக்னல்

மர்மமான காந்த அலைகள் மட்டுமின்றி ஏலியன் இருப்பதை உணர்த்தும் பல்வேறு யுஎஃப்ஒ நிகழ்வுகள் அப்பகுதியைச் சுற்றி பதிவு செய்யப்பட்டு வருகின்றதாகக் கூறப்பட்டுள்ளது.

யுஎஃப்ஒ

சில ஆராய்ச்சியாளர்கள் ஏலியன்கள் தங்களது பண்டைய கால தளங்களைப் பார்வையிடுவதாக கருதுகின்றனர். இணையத்தில் வெளியான புகைப்படத்தில் ஏலியன் கிராஷ் சைட் பதிவாகியுள்ளது.

தளம்

இந்தப் புகைப்படம் சற்றே சந்தேகம் கிளப்பும் வகையில் இருந்த போதும் அங்கு ஏலியன் நடவடிக்கை இருப்பது உறுதியாகத் தெரிகின்றது எனக் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகம்

அன்டார்டிகா பகுதியில் 1983 முதல் 1997 ஆம் ஆண்டு பணியாற்றிய கடற்படை அதிகாரி ஒருவர், தான் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாகவும், அவ்வேலையில் சில யுஎஃப்ஒ'களை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சாட்சி

இது போன்று வெளியாகும் தகவல்கள் ஏதும் அரசாங்கத்தினால் உறுதி செய்யப்படாமல் இருப்பதே குழப்பங்களுக்கு வழி செய்வதாக அமைகின்றது.

உண்மை

அன்டார்டிகாவில் ஏலியன் பிரமிட் இருப்பதை அறிவித்த யூட்யூப் வீடியோ.

வீடியோ 

கருத்துரையிடுக Disqus

 
Top