0

 


நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாட்டின் மறைமுக வரியமைப்பு திருத்திற்கான ஜிஎஸ்டி மசோதா ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் வரும் 2017, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

ஜிஎஸ்டி ஒற்றை வரி அமைப்பிற்கு வழி வகுக்கும், வர்த்தக சந்தையில் ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் தாமதங்கள் சரிசெய்யப்பட்டு, வரி நிலையானதாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஜிஎஸ்டி சலுகைகளை நேரடியாக பெறுவது எப்படி என்பதேயே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்..?

யாரெல்லாம் பொருட்கள் விற்பனை செய்கிறீர்களோ, சேவை அளிக்கக்கூடிய வணிகம் செய்து வருகிறீர்களோ அவர்கள் எல்லாருக்கும் ஜிஎஸ்டி பதிவு எண் தேவைப்படும். முதலில் ஜிஎஸ்டி பதிவு எண்ணிற்குப் பதிவு செய்வது எப்படி?


ஏற்கனவே விற்பனையாளர்கள்/விநியோகஸ்தர்களாக உள்ளவர்கள் யாரெல்லாம் மதிப்புக்கூட்டு வரி, மத்திய கலால் மற்றும் பிற பல்வேறு மாநில வரிகளைச் செலுத்தி வருகிறீர்களோ அவர்கள் சரக்கு மற்றும் சேவை வரி அல்லது புதிய ஜிஎஸ்டி முறைக்குப் பதிவு செய்ய தேவை இல்லை.

புதிய விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் முதலில் ஜிஎஸ்டி வரிக்குப் பதிவு செய்வது அவசியம்.

இதற்கான விண்ணப்பம் இணையத்தில் விரைவில் கிடைக்கும்.
ஜிஎஸ்டி எண்ணிற்குப் பதிவு செய்யும் போது பான் எண் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தனியார் துறை அல்லது பொது துறை நிறுவனம் ஏதுவாக இருந்தலும் நீங்கள் விற்பனையாளர் அல்லது சேவை வழங்குநராக இருந்தால் ஜிஎஸ்டி பதிவென் கட்டாயம்.

ஜிஎஸ்டி விண்ணப்பத்தில் மாநில மற்றும் தேசிய ஜிஎஸ்டி இரண்டிற்கும் சேர்த்துக் கூட்டு விண்ணப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்த விநியோகஸ்தர்களுக்கு ஜிஎஸ்டிஎன் எனப்படும் தனிப்பட்ட எண் வழங்கப்படும். தற்போது நடைமுறையில் இருப்பது போன்ற பல எண்களை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை.

இதற்குப் பதிவு செய்யும் போது உள்ள முக்கிய சிறப்பு என்னவென்றால், பதிவு செய்த மூன்று நாட்களில் பதிவென் கிடைத்துவிடும்.

தவறு நடப்பதாகக் கருதும் போது மட்டும் பதிவு செய்ததை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும். இது மிகவும் அரிதாக இருக்க வாய்ப்பு உள்ளது.

பதிவு செய்யும் போது படிவத்தில் குறிப்பிட்டுள்ள பான் கார்டு நகல், வங்கி விவரங்கள், வணிக விவரங்கள் போன்ற எல்லா ஆவணங்களையும் சமர்ப்பித்தல் வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

தற்போது யாரெலாம் வாட், சிஎஸ்டி போன்றவற்றுக்குப் பதிவு செய்து பயன்படுத்தி வருகிறீர்களோ அவர்கள் புதிய முறைக்கு மாற்றிக்கொள்ளலாம். அதைப் பற்றி முறையான அறிவிப்பு வரும் வரை தற்போது ஏதும் கூற இயலாது.

ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும்போது நாட்டின் வணிக வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2017, ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர இருக்கும் என்பதால் உங்கள் வணிகத்தை நீங்கள் இதில் பதிவு செய்வது நல்லது.

இதை எவ்வளவு விரைவாகச் செய்கிறீர்களோ அவ்வளவு நல்லது.
துவக்கத்தில் பதிவு செய்வதில் சில வழிமுறைகள் குறைவாக இருக்கும் என்பதால் சோதனை முயற்சியின் போதே பதிவு செய்தல் நல்லது என்று கூறப்படுகிறது.

இன்னும் இதற்கான தொழில்நுட்பம் மற்றும் பிற பின்பல செயல்பாடுகள் நிறைய உள்ளது.

எனவே, எவ்வளவு விரைவில் பதிவு செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகப் பதிவுசெய்து விடுங்கள்.

 

ஜிஎஸ்டி மசோதா: இந்திய பொருளாதாரத்திற்குச் சாதகமா..? பாதகமா..?

ஜிஎஸ்டி என்னும் ஒன்றுபட்ட வரி அமைப்பின் மூலம் இந்தியாவில் தொழிற்துறை மற்றும் வர்த்தகச் சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். அதுமட்டும் அல்லாமல் இந்திய ஜிடிபி அளவு 2 இலக்க உயர்வை எட்டும் எனக் காட்ரிஜ் குழுமத்தின் தலைவர் ஆதி காட்ரிஜ் ஜிஎஸ்டி மசோதா பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் உற்பத்தி நிறுவனங்களில் நேரடி செலவுகள் அதிகளவில் குறையும், இதனால் ஒரு நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் லாப அளவுகள் 2-2.5 சதவீதம் வரை அதிகரிக்கும் என NCAER ஆய்வறிக்கை கூறுகிறது.


இந்திய மறைமுக வரிவிதிப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகும் ஜிஎஸ்டி மசோதா, நிறுவனங்கள் மத்தியிலான வர்த்தகத்தை 2.5 சதவீதம் வரை உயர்த்துவதோடு மட்டும் அல்லாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது ஜிடிபி அளவு 2 சதவீதம் வரை உயர்ந்த வழிவகைச் செய்யும் எனவும் NCAER ஆய்வறிக்கை கூறுகிறது.

National Council of Applied Economic Research அமைப்பின் சுருக்கமே இந்த NCAE. இந்த அமைப்பு டெல்லியில் உள்ளது.

ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் உடனடியாகப் பொருளாதாரத்தில் வளர்ச்சியை நாம் பார்க்க முடியாது, ஆனால் நீண்ட கால நோக்கில் கண்டிப்பாக மிகப்பெரிய வளர்ச்சியை நாம் பார்க்க முடியும்.

சொல்லப்போனால் அமலாக்கத்தின் துவக்கத்தில் நாட்டில் வளர்ச்சி மற்றும் உற்பத்தி அளவுகள் பாதிக்கப்படும் என்பதே இதன் உண்மை நிலை. இதற்கு என்ன காரணம்..?

இந்திய ஜிடிபி-யில் 60 சதவீதம் சேவை வரி மற்றும் வர்த்தகத்தைச் சார்ந்துள்ளது. ஜிடிபி அமலாக்கத்தின் மூலம் சேவை வரி அதிகரிக்கப்பட்டாலும் உற்பத்தி பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி (ஜிடிபி-யில் 17 சதவீதம்) குறைய உள்ளது. இதனால் நாட்டின் வளர்ச்சியில் தொய்வு அல்லது நிலைப்பாடு ஏற்படும்.

இத்தகைய சூழ்நிலையில், சேவை வரி மீது விருப்புரிமை குறையும். ஆனால் சரக்கு மற்றும் உற்பத்தி பொருட்கள் மீதான வரி விதிப்பு குறைந்து உற்பத்தி அளவுகளைப் பாதிக்கும் நிலை உருவாகும்.

சோனல் வர்மா மற்றும் நேஹா சராப் ஆகியோர் தலைமையில், 1961-2015ஆம் ஆண்டுக் காலத்தில் effective tax-இல் மாற்றங்களைச் செய்யப்பட்ட11 நாடுகளின் பொருளாதாரம் எதிர்கொண்ட சவால்களை ஆய்வு செய்தனர்.

இதில் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் முந்தைய வருடத்தில் அனைத்து நாடுகளின் ஜிடிபி அளவும் உயர்ந்துள்ளது, அதாவது வரி உயர்ந்தப்படுவதற்கு முந்தைய காலத்தில் அதிக அளவிலான வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதை இது காட்டுகிறது.

அமலாக்கத்திற்கு முந்தைய வருடத்தில் அதிகளவிலான வர்த்தகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அமலாக்கம் செய்யப்பட்ட வருடத்தில் குறைந்த அளவிலான வளர்ச்சியே ஜிடிபி சந்தித்துள்ளது. சில நாடுகளில் இதில் அதிகளவிலான சரிவையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமலாக்கத்திற்கு அடுத்தச் சில வருடங்களில் சிறப்பான வளர்ச்சி அளவை எட்டியுள்ளது.

ஜிஎஸ்டி திட்டத்தின் மூலம் முறைமுக வரி 2 வழியில் வசூல் செய்யப்படுகிறது.

ஒன்று.. ஒரு நிறுவனம் தான் பயன்படுத்தும் மூலதன பொருட்களின் அளவு அதன் கொள்முதல் நிறுவனத்தின் பெயரை மட்டும் குறிப்பாட்டால் போதும், மூலதன பொருட்களை அளிக்கும் நிறுவனம் அதற்கான வரியை செலுத்தி விடும்.

இதனால் வகைப்படுத்தப்படாத பிரிவில் இருக்கும் பல லட்ச நிறுவனங்களின் வர்த்தகம் கணக்கில் கொண்டு வரப்படும், இத்தகையைச் சூழ்நிலையில் வரி விதிப்பு வளையத்தில் பல லட்ச புதிய நிறுவனங்கள் குவியும்.
இதற்குத் தனி மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒரு முறை வேண்டும். இதற்காகவே மத்திய அரசு தற்போது ஐடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைப்பு பரிந்துரை செய்துள்ளபடி வருவாய் நடுநிலை விகிதம் (RNR) படி, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சரக்குக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சரக்குப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 1.5 கோடி ரூபாய் வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் மத்திய கலால் வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, மாநில அளவில் அதன் அளவு 5 லட்சம் 10 லட்சம் வரையில் பல்வேறு பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி மசோதாவில் இந்த அளவுகள் இந்தியா முழுவதும் நிலையான ஒன்றாக மாற்றப்பட்டுத் தற்போதைய அளவுகளை விடவும் குறைக்கப்படும். இதன் மூலமாகவும் வரி வளையத்திற்கு அதிகமானோர் சேர்க்கப்படுவார்கள்.
25-40 லட்சம் வருமான கொண்ட பலர் மிகவும் குறைவான வருமான வரியைச் செலுத்தி வருகினர் என்றும் அரவிந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி மசோதா மூலம் மறைமுகமாக வர்த்தகம் செய்து வரும் அனைவரும் வரி விதிப்புக்குள் கொண்ட வரப்பட உள்ளனர். இதனால் நாட்டின் வரி வருமானம் புதிய உச்சத்தை அடையும்.

மேலும் 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி சந்தையில் முழுமையான அமலாக்கம் செய்யப்படும் நிலையில் 2016ஆம் நிதியாண்டில் வர்த்தகத்தைப் புதிய உச்சத்தை அடையவும் வாய்ப்புகள் உண்டு.

கருத்துரையிடுக Disqus

 
Top