காருக்கு அழகு சேர்ப்பதற்கு ஏராளமான அணிகலன்களை வாங்கி பொருத்துவது
கார் பிரியர்களின் வழக்கம். குறிப்பாக, எஸ்யூவி ரக கார் வைத்திருக்கும்
அனைவரும் விரும்பும் ஒரு விஷயம், தனது காருக்கு அகலமான டயர்களை போட்டு
பந்தாவாக செல்ல வேண்டும் என்பதாக இருக்கும்.
அகலமான டயர்களை பொருத்துவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்த விஷயங்களை இந்த செய்தியில் காணலாம். இதனை படித்த பிறகு, பெரிய டயரை போடுவதா, வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்துவிடலாம்.
நன்மை-1காருக்கு பன்மடங்கு கூடுதல் கம்பீரத்தை வழங்கும்.
எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும். மேலும், எஸ்யூவி வகை வாகனங்களின் முரட்டுத் தனத்தை மேலும் கூட்டுவதாக இருக்கும்.
நன்மை- 2அகலமான
டயர்கள் அதிக தரைப்பிடிப்பை வழங்கும். இதனால், கார் வழுக்குவதும்,
சறுக்குவதும் குறையும். மேலும், பிரேக் பிடிக்கும்போது அதிக
தரைப்பிடிப்புடன், சீக்கிரமாகவே கார் நிறுத்தப்படும்.
தீமை-1அகலமான
டயர்களின் விலை மிக அதிகம். மேலும், விலை உயர்ந்த கார்களில்
கொடுக்கப்படும் பெரிய ரிம் அளவுக்கு தக்கவாறு இவை வடிவமைக்கப்படுகின்றன.
எனவே, தொழில்நுட்ப ரீதியில் சாதாரண கார்களின் ரிம் இந்த டயர்களுடன் ஒத்துப்
போகாது.
தீமை-2பெரிய
டயர்களின் எடை மிக அதிகமாக இருக்கும். இதனால், காரை நகர்த்துவதற்கு
எஞ்சினுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. இதனால், காரின் மைலேஜ், செயல்திறன்,
பிக்கப் அனைத்தும் குறையும்.
தீமை-3காரின்
சஸ்பென்ஷனுக்கும், டயரின் அளவுக்கு சிறப்பாக ஒத்துப் போக வேண்டும். அகலமான
டயர்களை பொருத்தும்போது, பள்ளம், மேடுகளில் அதிகமாக குலுங்கும். சொகுசான
உணர்வு இருக்காது.
தீமை-4கையாளுமை
மேம்பட்டாலும், ஸ்டீயரிங் வீல் திருப்புவதற்கு சற்று சிரமமான உணர்வை
வழங்கும். வளைவுகளில் திரும்பும்போது ஸ்டீயரிங்கின் செயல்திறன் குறையும்.
அவசரத்தில் கட் அடிக்கும்போதும் பிரச்னை ஏற்படும்.
தீமை-5ஸ்டீயரிங்
சிஸ்டம், சஸ்பென்ஷன் அமைப்பு என அனைத்து பாகங்களுடன் அகலமான டயர்கள்
ஒத்துப் போகாது. எனவே, டயர்கள் சீக்கிரமாக தேய்ந்து போகும்.
தீமை-6காரின்
வேகத்தை காட்டும் ஸ்பீடோ மீட்டரிலும் குளறுபடி ஏற்படும். உதாரணத்திற்க 16
இன்ச் வீல் பொருத்தப்பட்ட காரில் 19 இன்ச் வீல் பொருத்தப்படும்போது
ஸ்பீடோமீட்டரில் துல்லியமான வேகத்தை காட்டாது. வீலின் விட்டம், வேகம்
உள்ளிட்டவற்றை கணக்கிட்டே ஸ்பீடோமீட்டர் வேகத்தை காட்டுகிறது. எனவே,
இங்கும் குளறுபடி ஏற்படும்.
தீமை-7அகலமான
டயர்கள் ரிம்முடன் சரியாக பொருந்த வேண்டும். ஆனால், அகலமான டயர்களை
பொருத்தும்போது, ரிம்களில் சீக்கிரமே சேதமடையும் அபாயம் உள்ளது.
தீமை-8அகலமான
டயர்கள் காரின் மின்னணு தொழில்நுட்பங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
இபிடி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல், ஸ்டெபிளிட்டி
கன்ட்ரோல் போன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்களிலும் குளறுபடிகளை
ஏற்படுத்தும்.
தீமை-9அகலமான
டயர்கள் பொருத்தக்கூடாது என்பதற்கு மிக முக்கிய காரணம் இது. அகலமான
டயர்களை பொருத்தும்போது காருக்குள் டயர் சப்தம் அலாதியாக இருக்கும். நீண்ட
தூர பயணங்களின்போது எரிச்சலையும், தலைவலியையும் தரும் என்பதில்
மாற்றுக்கருத்து இல்லை.
அவசரம் வேண்டாம்பொதுவாக
அகலமான டயர்களை பொருத்தும்போது நன்மைகளை விட தீமைகள் அதிகம் இருப்பதை
உணர்ந்திருப்பீர்கள். எனவே, அகலமான டயர்களை பொருத்தும்போது ஒன்றுக்கு
இரண்டு முறை யோசித்து முடிவு செய்வது அவசியம்.
அகலமான டயர்களை பொருத்துவதால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்த விஷயங்களை இந்த செய்தியில் காணலாம். இதனை படித்த பிறகு, பெரிய டயரை போடுவதா, வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்துவிடலாம்.
நன்மை-1காருக்கு பன்மடங்கு கூடுதல் கம்பீரத்தை வழங்கும்.
எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும். மேலும், எஸ்யூவி வகை வாகனங்களின் முரட்டுத் தனத்தை மேலும் கூட்டுவதாக இருக்கும்.
கருத்துரையிடுக Facebook Disqus