0
 
பொதுவாக சிட்டியில் கார் ஓட்டுவது கூட கயிறு மேல் நடப்பது போன்ற அனுபவத்தை தருகிறது. ஆனால், அவை சக வாகன ஓட்டிகளால் நாம் அனுபவிக்கும் பிரச்னை.

ஆனால், சில சாலைகள் நில அமைப்பு காரணமாக, வாகன ஓட்டுனர்களுக்கு மிக மிக அபாயகரமானதாக அமைந்துவிடுகிறது. கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், அந்த சாலைகளை ஓட்டிக் கடக்கும் சவாலை தருகின்றன. அதுபோன்ற சாலைகளை இந்த செய்தியில் காணலாம்.

 01. சோஜி லா கணவாய்

01. சோஜி லா கணவாய்

சோஜி-லா கணவாய் கடல் மட்டத்திலிருந்து 3,538 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இந்த கணவாய்க்கு செல்லும் சாலைகள், மிக குறுகலான மலைச்சாலையாக இருக்கின்றன.


செங்குத்து மலைகளை ஒட்டி செல்லும் இந்த பாதையில் அடிக்கடி நிலச்சரிவு, பனிப்பொழிவால் சாலைகள் வழுக்குத் தரையாக மாறும் ஆபத்துக்கள் நிறைந்துள்ளது. ஸ்ரீநகர்- லடாக்கை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 1 வழியாக சென்று இந்த கணவாயை தொடலாம்.

02. நெரல்- மாதேரன் சாலை

மஹாராஷ்டிராவில் உள்ள நெரல் பகுதியிலிருந்து மாதேரன் மலைக்கு செல்லும் இந்த சாலையும் கொண்டை ஊசி வளைவுகளால் மிரட்டுகிறது.


இயற்கையை கண்டு ரசித்துக்கொண்டே இந்த அபாயகரமான சாலையில் பயணிக்க வாடகை கார்களே சிறந்தது என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.

03. தேசிய நெடுஞ்சாலை எண்- 22

நரகத்திற்கு செல்லும் நெடுஞ்சாலை என்று வாகன ஓட்டிகளால் அழைக்கப்படும் என்று இந்த சாலையும் இந்தியாவின் மிக அபாயகரமான சாலைகளில் ஒன்று. மலைகளின் ஊடாக பயணிக்கும் இந்த சாலையின் ஒருபுறம் கிடுகிடு பள்ளத்தாக்குகளை பார்த்தாலே பலருக்கு வாகனம் ஓட்டும் ஆசையே போய்விடும்.


ஹிஸ்டரி சேனலில் உலகின் ஆபத்தான சாலைகளில் ஒன்றாக இடம்பெற்றிருக்கிறது. மோசமான பராமரிப்பே இந்த சாலை அபாயகரமானதாக மாறியதற்கு மிக முக்கிய காரணம்.

04. சாங்-லா கணவாய்

ஆண்டுமுழுவதும் பனி மூடிகிடக்கும் இந்த கணவாய்க்கு செல்லும் வழிகள் அனைத்துமே அபாயகரமானதுதான். இந்த வழியில் செல்லும் ஓட்டுனர்களுக்கு மூச்சுத் திணறல், குமட்டல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு விபத்துக்கள் நடக்கும் வாய்ப்புகள் உண்டாகின்றன.


மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள், கதகதப்பு தரும் உடைகளுடன் இங்கு செல்ல வேண்டும். இங்கு நிலவும் மிக மோசமான வானிலையே இந்த அபாயகரமான சாலையில் செல்லும் வாகனங்களை விபத்தில் சிக்க வைத்துவிடும்.

05. லே- மணாலி

சுற்றுலா முக்கியத்துவம் இந்த சாலையில் விபத்து என்பது வாடிக்கையான விஷயம். போக்குவரத்து அதிகம் நிறைந்த இந்த மலைச்சாலையில் வாகனங்கள் நத்தை வேகத்திலேயே செல்ல முடியும்.


பனிப்பொழிவு மிகுந்துவிடும் சமயங்களில் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விபத்தில் சிக்கும் ஆபத்துகளும் உண்டு. எனவே, இந்தியாவிலேயே மிகவும் அபாயகரமான சாலைகளில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது.

06. மூணாறு சாலை

நெரல்- மாதேரன் சாலை போன்றே மூணாறு சாலையும், ஆபத்தான வளைவுகள், செங்குத்தாக ஏறும் சாலைகளை கொண்டுள்ளது.


இயற்கை எழில் கொஞ்சும் இந்த சாலையில் பயணிக்க பலரும் குவிந்து வந்தாலும், இந்த சாலையில் மிக கவனமாக ஓட்ட வேண்டும்.

07. ஸிக் - ஸாக் ரோடு

சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த சுருள் போல வளைந்து வளைந்து ஏறும் இந்த சாலை கடல் மட்டத்திலிருந்து 11,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இமயமலையின் உச்சியை கண்டு ரசிக்க ஏதுவாக இந்த இடம் குறிப்பிடப்படுகிறது.


இந்த சாலையில் செல்வதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டியது அவசியம். இதன் கொண்டை ஊசி வளைவுகள் நெஞ்சில் நடுக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருப்பதோடு, பனிப்பொழிவால் வழுக்குத்தரையாக சாலைகள் மாறிவிடும் ஆபத்தும் இருக்கிறது.

08. கர்துங்-லா கணவாய்

ராணுவத்தின் தீவிர கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் உள்ள பகுதி. மனதைரியமில்லாத ஓட்டுனர்கள் இந்த கணவாய்க்கு வரும் சாலைகளில் கார் ஓட்டுவதை தவிர்ப்பது அவசியம்.


குறிப்பாக, இதன் நூப்ரா பள்ளத்தாக்கு பகுதியில் நிலவும் மோசமான சீதோஷ்ண நிலை பலருக்கு உடல் உபாதைகளை தந்துவிடும். மோசமான சீதோஷ்ண நிலையால், அக்டோபர் முதல் மே மாதம் வரை மூடப்பட்டிருக்கும்.

09. கிஸ்துவார்- கைலாஷ் சாலை

இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் மிக மோசமான சாலைகளில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. செங்குத்தாக ஏறும் சாலைகள், மிக குறுகலான அபாயகரமான சாலை அமைப்பு கார் ஓட்டுவதில் சூரப்புலிகளுக்கே வயிற்றில் புளியை கரைத்துவிடும்.


2013ம் ஆண்டில் இந்த சாலையில் எடுக்கப்பட்ட சாகசக் குழுவினரின் வீடியோ உலக அளவில் வைரலானது. இந்த மலைச்சாலையின் விளிம்புகள், உங்களை மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லும் உணர்வை தரும். அந்தளவுக்கு மிகவும் மோசமான சாலை.

10. கின்னாவூர் சாலை

அபாயகரமாக தொங்கிக் கொண்டிருக்கும் மலைகளின் ஊடாக செல்லும் ஒழுங்கற்ற குகைப்பாதைகள், கிடுகிடு பள்ளத்தாக்குகளுடன் மிரட்டுகிறது கின்னாவூர் சாலை.


ஒரு சின்ன தவறு செய்தாலோ அல்லது நிலச்சரிவு ஏற்பட்டாலோ அருகில் ஓடும் பஸ்பா ஆற்றுக்கு இரையாகிவிடுவோம். கடும் பனிப்பொழிவின்போது இதன் சாலைகள் பளிங்கு தரை போல் மாறிவிடும் என்பதால், மூடப்பட்டுவிடும்.

12. நது-லா கணவாய்

இதுதான் உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்திருக்கும் வாகன போக்குவரத்து கொண்ட கணவாய். இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான மூன்று வாணிப போக்குவரத்துக்கான எல்லைப்பகுதிகளில் ஒன்றாக இந்த கணவாய் விளங்குகிறது. சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 54 கிமீ தூரத்தில் இது அமைந்திருக்கிறது. நிலச்சரிவு, பனிப்பொழிவு காரணமாக அடிக்கடி மூடப்பட்டுவிடும்.


சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 54 கிமீ தூரத்தில் இது அமைந்திருக்கிறது. நிலச்சரிவு, பனிப்பொழிவு காரணமாக அடிக்கடி மூடப்பட்டுவிடும்.

13. வால்பாறை மலைச்சாலை

தமிழகத்தில் பல அபாயகரமான சாலைகள் உள்ளன. சாம்பிளுக்காக வால்பாறை சாலையை குறிப்பிடலாம். பொள்ளாச்சியிலிருந்து ஆழியாறு அணையை தாண்டி, குரங்கு அருவி வரை இயற்கை எழிலை கண்டு ரசித்துக் கொண்டே சென்றவர்களுக்கு, அதற்கு மேல் இருக்கும் கொண்டை ஊசி வளைவுகள் சவாலை தரும்.


போக்குவரத்து அதிகம் கொண்ட இருவழித் தடம் கொண்ட எந்த மலைச்சாலைகளுமே சவாலாகவே இருக்கும். எனவே, புதிதாக ஓட்டுபவர்கள் அனுபமிக்க ஓட்டுனர்களுடன் செல்வது சிறந்தது.

14. மும்பை - புனே எக்ஸ்பிரஸ் சாலை

பிற ஓட்டுனர்களின் அஜாக்கிரதை, அசுர வேகம் போன்றவை இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிக சவாலாக அமைந்துள்ளது. 2006ம் ஆண்டு ஜனவரியிலிருந்து 2014 ஆகஸ்ட் வரை 925 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.


சாலை அமைப்பு ஒருபுறம் இருந்தாலும் 60 சதவீத விபத்துக்களுக்கு காரணம் மனித தவறுகளே காரணமாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனவே, இதுபோன்ற விரைவு சாலையும் இப்போது எமனாக மாறியிருக்கிறது.

15. ராஜ்மசி ரோடு

பைக் சாகச பிரியர்கள், மலையேற்ற பிரியர்களுக்கு சவாலை தரும் மலைப்பாதைகளை கொண்டிருக்கிறது. இந்த ராஜ்மசி சாலையில் சென்று திரும்புவது வாகன ஓட்டிகளுக்கு மிக சவாலான அனுபவமாக அமையும்.


மலைநேரத்தில் சேறு சகதிகள் நிறைந்த இந்த மலைச்சாலையில் காரை ஓட்டுவது மிக சவாலானது. அதனை செய்யவே பலர் இங்கு செல்கின்றனர்.

கருத்துரையிடுக Disqus

 
Top