0

'பாஸ்போர்ட் இருக்கா.?' என்று யாரவது கேட்டதும் தலையை சொறிந்துகொண்டே 'இல்லை. இனிமே தான அப்ளை பண்ணனும்' என்று பதில் கூறுபவரா நீங்கள்.? சரி வாங்க நேரத்தை வீணடிக்க வேண்டாம் 'இப்போ இப்போவே ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை பண்ணிடலாம் வாங்க.!
தேவையான இணைப்புகளோடு இங்கே வழங்கப்பட்டுள்ள எளிமையான 7 வழிமுறைகளை பின்பற்றினால் இன்றே உங்களுக்கான பாஸ்போர்ட் கிடைக்கும் முக்கால்வாசி வேலையை முடித்து விடலாம், வாங்க ஆரம்பிக்கலாம்.!
முதலில் இங்கே வழங்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் வழியாக ரிஜிஸ்டர் நிகழ்த்த வேண்டும். ரிஜிஸ்டர் நிகழ்த்த இங்கே கிளிக் செய்யவும்.
இப்போது ரிஜிஸ்டர் செய்யப்பட்ட லாக் இன் ஐடி கொண்டு பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் போர்டலுக்குள் உள்நுழையவும்.
உள்நுழைந்து 'புதிய பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் / பாஸ்போர்ட் மறுபதிப்பு' இணைப்பை அதாவது ஆங்கிலத்தில் Apply for Fresh Passport/Re-issue of Passport - என்பதை கிளிக் செய்யவும்.
அங்கு உங்களுக்கு கிடைக்கும் படிவத்தில் கேட்கப்படும் மற்றும் தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பிய பின்னர், அந்த படிவத்தை சமர்ப்பிக்கவும்.
பின்னர், திரையில் தோன்றும் 'வியூ சேவ்டு/ சப்மிடெட் அப்ளிகேஷன்ஸ்' என்பதை கிளிக் செய்து உங்களுக்கான ஒரு நியமனத்தை திட்டமிட 'பே அண்ட் ஷெட்யூல் அப்பாயின்ட்மென்ட்' என்ற தேர்வை நிகழ்த்திக் கொள்ளவும்
அனைத்து பாஸ்போர்ட் சேவா கேந்திரா / பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் சந்திப்புகளுக்கான முன்பதிவு கட்டணம் என்பது கட்டாயம் என்பதால் இங்கு நீங்கள் ஒரு ஆன்லைன் பேமெண்ட்தனை நிகழ்த்த வேண்டியதிருக்கும். ஆக பின்வரும் ஏதாவ்துவொரு ஆன்லைன் பேமெண்ட் முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி நீங்கள் பேமெண்ட் நிகழ்த்திக்கொள்ளலாம்.
- கிரெடிட் / டெபிட் கார்டட் (மாஸ்டர்கார்டு மற்றும் விசா)
- இண்டர்நெட் பேங்கிங் (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும்இணை வங்கிகள் மற்றும் பிற வங்கிகள்)
- எஸ்பிஐ வங்கி செல்லான்
இப்போது உங்களின் விண்ணப்ப குறிப்பு எண் (Application Reference Numbe-ARN)/அப்பாயின்மென்ட் நம்பர் ஆகிய விவரங்களை பெற 'ப்ரிண்ட் அப்பிளிக்கேஷன் ரெசிப்ட்' என்பதை கிளிக் செய்யவும்.
இறுதியாக நீங்கள் உங்களின் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் (RPO) அல்லது பாஸ்போர்ட் சேவா கேந்திராவிற்கு (பிஎஸ்கே) அசல் ஆவணங்களுடன் நியமிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு சென்று மேற்படியான விதிமுறைகளை செய்ய வேண்டியது மட்டுமே மிச்சம்.
அவசர / மருத்துவ வழக்குகள் மற்றும் முன்அனுமதிப்பெற்ற பிரிவுகள் மட்டுமே நியமனம் இல்லாமல் பாஸ்போர்ட் சேவா கேந்திராவிற்கு வரலாம். அவ்வகை சேவைகளானது பொறுப்பாளர் / பாஸ்போர்ட் அதிகாரி பாஸ்போர்ட் சேவா கேந்திரா தீர்மானத்தின்படி வழங்கப்படும்.

கருத்துரையிடுக Disqus

 
Top