0

வணக்கம் வாசகர்களே, நீங்கள் ஒரு சின்னச் சம்பள உயர்வு / பதவி உயர்வு பெறுவதற்காகக் கடந்த ஆண்டில் செய்த கடின உழைப்பை விளக்கும் நேரம் வந்துவிட்டது. உங்கள் பெர்பார்மான்ஸ் ரிவ்யூ நன்றாகச் செயல் புரிய 9 குறிப்புகள் உள்ளன, அவை என்னவென்று இங்குப் பார்ப்போம்.
உங்கள் வேலை சுயவிவரப்பட்டியல்
உங்கள் மேலாளர் அல்லது மனிதவள மேம்பாட்டுத் துறையில் இருந்து ஒரு அதிகாரப்பூர்வ வேலை விளக்கம் அல்லது பணிக்கடமைகளை விளக்கப் பட்டியலிடுதல் தான் முதல் படி. உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்ற தெளிவுடன் தொடங்குவது நல்லது. உங்கள் செயல்கள் சரியான திசையில் பயணித்து உங்களுக்கு நல்ல வெளியீடு கிடைக்க அது உதவும்.
செயலில் ஈடுபடுங்கள்
தொடக்கத்தில் இருந்து உங்கள் இலக்குகளை நிறுவுவதில் பங்கு பெறுங்கள். முக்கியக் குறிக்கோள்களில் கவனம் செலுத்துங்கள் மற்றும் உங்களுக்கும் உங்கள் நிறுவனத்திற்கும் அர்த்தமுள்ள வகையில் ஒரு திட்டத்தை வரையறுங்கள். எப்போதும் ஈடுபாட்டுடன் இருங்கள் ஏனெனில் அது ஒரு சிறந்த மற்றும் உதவியான நடைமுறையாகும்.
நியாயமான இலக்குகளை அமைத்தல்
இலக்குகளை நிறுவும் போது, அவை அர்த்தமுள்ளவையா என உறுதி செய்யுங்கள். ஒரு குறிப்பிட்ட செயல்பாடு செய்வதில் மதிப்பு இருக்க வேண்டும். ஒவ்வொரு இலக்கும் ஒவ்வொரு நாளும் செய்யும் பணிக்குத் தொடர்புடையதாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் மற்றும் உங்கள் மேலாளர் இருவராலும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். மேலும், பெரிய குறிக்கோள் அந்நேரத்தில் மட்டுமே உங்கள் முதலாளியை ஈர்க்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே நியாயமான இலக்குகளை மற்றும் அடைய முடியும் என்று உணர்வு தரும் இலக்குகளை நோக்கியே பயணிக்கவும்
இலக்குகளை ஒரு செயல்திட்டமாகக் கருதுங்கள்
உங்கள் இலக்குகளை உங்கள் குறிக்கோளாகக் கருதுங்கள். இலக்குகள் புதிதாக இருக்கட்டும். உங்கள் பங்கு அல்லது பொறுப்புகளில் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இலக்குகளை மேம்படுத்துங்கள். இலக்குகள் குறிப்பிட்ட பணி சார்ந்த நோக்கங்களை அடைய அமைக்கப்படுகின்றன என்றாலும், அவை தொழில்முறை மேம்பாட்டு வளர்ச்சி மற்றும் அதிக வருவாய் மற்றும் தனிப்பட்ட வெகுமதிகளைப் பெரும் விதத்திலும் இருக்கலாம்.
உங்கள் தினசரி வேலையைக் குறிப்பு எடுக்கவும்
உங்கள் வேலையில் உங்களை விட வேறு எவரும் நெருக்கமாகக் கவனம் செலுத்துவதில்லை. வருடாந்திர செயல்திறன் மறுஆய்வு மற்றும் பதவி உயர்வு/ சம்பள அதிகரிப்பு, நீங்கள் தெளிவாக உங்கள் சாதனைகள் முன்னிலைப்படுத்தும் போது சாத்தியமாகும்.
எனவே, நீங்கள் பணிபுரியும்போது, உங்கள் சாதனைகள் ஆவணப்படுத்தி நீங்கள் ஏற்படுத்தித்கொண்ட மைல்கற்களை அடைந்ததை உங்கள் முதலாளியிடம் தெரியப்படுத்துங்கள். நீங்கள் வழியில் தடங்கலை சந்தித்தால் பிரச்சினையைத் தீர்க்க ஆலோசனை பெறுங்கள்.
கூடுதல் பயிற்சியில் ஆர்வம் காட்டுங்கள்
நீங்கள் குறிப்பிட்ட நோக்கத்தை அடையத் தேவையான பயிற்சியைப் பெற முடியவில்லை எனில் கேளுங்கள். உங்கள் முதலாளி நீங்கள் வேலைத் தரத்தை மேம்படுத்தவும் தொழில்முறை வளர்ச்சியில் ஆர்வமாக இருப்பதையும் புரிந்து கொள்வார். கூடுதல் பயிற்சி நிறுவனத்தில் உங்கள் மதிப்பை உயர்த்தி, உங்கள் வாழ்க்கையின் அடுத்தப் படிக்கு உங்களை எடுத்துச் செல்லும்.
செயல்திறன் பற்றி முதலாளியிடம் பேசுங்கள்
உங்கள் முன்னேற்றம் எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதை அறிய ஆண்டு முழுவதும் உங்கள் முதலாளியிடம் திறந்த உரையாடல் வேண்டும். வருடாந்திர ஆய்வு வரையில் காத்திருக்க வேண்டாம்.
செயல்திறன் ஆய்வு காலம் முழுவதும் சுருக்கமான, முறைசாரா விவாதங்கள் நடத்த முயற்சி செய்யுங்கள். நீங்கள் இதற்கென நேரம் ஒதுக்குவது பணியில் உங்கள் ஆர்வத்தையும் உங்கள் இலக்குகளை நோக்கி நீங்கள் பயணிப்பதையும் உங்கள் முதலாளிக்கு உணர்த்தும்
நேர்மறை கருத்தைப் பகிரவும்
நீங்கள் மறு ஆய்வைத் தயார் செய்யும்போது சக ஊழியர்களிடம் பெறப்படும் கருத்துக்கள் மதிப்புமிக்கவை. யாராவது உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக அல்லது எழுத்துவடிவில் நன்றி அனுப்பினால், அதைக் கோப்பில் வைத்துக்கொள்ளுங்கள். யாராவது புகழ்ந்து கூறினால் அது எழுத்து வடிவில் இருக்கட்டும்
செயல்திறன் ஆய்வு கருத்துக்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
செயல்திறன் ஆய்வின்போது ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பெறும்போது, கவனமாக மற்றும் தெளிவாகவும் கேட்கவும். கருத்துக்கள் கேட்பதற்குக் கடினமாக இருந்தால், தற்காப்புக்கு முயல வேண்டாம்.
மாறாக, கூறப்பட்டது என்ன எனக் கருத்தில் கொண்டு வேலையில் மேம்பாடுகள் செய்து எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்க்க முயற்சிக்கவும்.. நிறுவனங்கள் தொழில்முறை வழிகாட்டலை ஏற்கும் ஊழியர்களை மதிக்கின்றன.

கருத்துரையிடுக Disqus

 
Top