தேவையான பொருட்கள் :
சிகப்பரிசி அல்லது பச்சரிசி புட்டு மாவு - ஒரு கப்
தேங்காய் துருவல் - அரை கப்
சர்க்கரை - அரை கப்
நெய் - இரண்டு தேக்கரண்டி
வாழைப்பழம் - 1
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் சிட்டிக்கை உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தெளித்து உதிரியாக மாவை விறவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு இட்லி பானையில் ஈர துணியை விரித்து மாவை கட்டியில்லாமல் உதிரியாக வைத்து 15 நிமிட அவித்து வேக வைத்து எடுக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் வெந்த புட்டு மாவை கொட்டி அதில் சர்க்கரை, தேங்காய்ப்பூ உருக்கிய நெய், வாழை பழம் சேர்த்து நன்றாக விரவி உருண்டைகளாக பிடித்து தேவைக்கு மேலே தேங்காய் பூ தூவவும்.

சூப்பரான புட்டு பால்ஸ்/லட்டு ரெடி.
குறிப்பு :
பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு, ஆபிஸ்க்கு டிபனுக்கு இப்படி செய்து எடுத்து செல்லலாம். ஆனால் இந்த புட்டு கை கொண்டு விரவி வைப்பதால் காலையில் சீக்கிரமாக சாப்பிட்டு விட வேண்டும்.
இதை அரிசி, ராகி (கேழ்வரகு), ரவை, சிறுதானியங்களிலும் தயாரிக்கலாம்.
கருத்துரையிடுக Facebook Disqus