0
வீட்டைச் சுத்தம் செய்யும்போழுதோ, வீடு மாறும் பொழுதோ அல்லது ஏதாவது தேடும்பொழுதோ நம் கைகளில் சிக்கும் டைரிகள் நம்மை இறந்த காலத்திர்ற்கு கொண்டு சென்றுவிடும். சிலசமயம் அப்போதைய கசப்பான சம்பவங்கள் இன்று வேடிக்கையாகவும் இருக்கும்.

எழுதி வைத்தவற்றைப் பின்னர் வாசிக்கையில் அந்த அருமையான கணங்களையும் அவை ஏற்படுத்திய உணர்ச்சிகளையும் மீண்டும் அனுபவித்துப் பார்க்க முடிகிறது. சிலருக்கு டைரி தன் மனசாட்சியாகவும் இருக்கிறது. டைரி எழுதுவது என்பது தன்னை வெளிப்படுத்த விரும்பும் அடிப்படை மனித ஆசையைத் தீர்த்து வைப்பதாகத் தோன்றுகிறது.

குழந்தை பேசிய முதல் வார்த்தைகளைக் கேட்டபோது அடையும் இன்பத்தைப் பற்றி எழுதுவதாய் இருக்கட்டும், ஓர் அருமையான உறவின் வளர்ச்சி பற்றி எழுதுவதாய் இருக்கட்டும், அழகான காதல் அனுபவமாகட்டும், மறக்க முடியாத துரோகமாகட்டும் எதுவாக இருந்தாலும் நம் வாழ்விற்கு உரு கொடுக்கும் நிகழ்ச்சிகளை அமைதியாய் அசைபோட டைரி உதவுகிறது.

டைரி எழுதுவதன் மிகச் சிறந்த பயன்களில் ஒன்று, நம்மை நாமே தெரிந்துகொள்ள முடிவது. தங்குதடையின்றி எண்ணங்களை வெளிப்படுத்த உதவும் நடைமுறையான ஒரு உளவியல் சாதனம்.


"என்னை காதலில் தோற்றவன் என்று,
அழைக்கும் பலருக்கு நான் கூற விரும்புவது....!!!

நான் காதலியால் தோற்றவனே தவிர,
காதலில் தோற்றவன் அல்ல..!!"

இந்த டிங்கு’வின் டைரி என் கற்பனையே, இந்த டைரியில் வரும் பெயர்களும், சம்பவங்களும் முழுக்க முழுக்க கற்பனையே சிலவரிகள் நீங்கள் முகபுத்தகத்தில் படித்திருக்கலாம், சில கீச்சுகளில் இருக்கலாம். குட்டிக் குட்டி பள்ளி காதலும், இனிய நண்பர்களும், சில பல காதல் தோல்விகளும், வாழ்வின் சுய முன்னேற்றமும், பணியிடத்து கலாட்டாக்களும்,  திருமண வாழ்க்கையும், குடும்பத்தில் குழப்பங்களும், சில திடீர் முடிவுகளும், சில மொக்கைகளும் கலந்த ஒரு கலவையாக இந்த டைரி இருக்கும்.    
-------------------------------------------------------------------------------------------------------------------------------------     


“பள்ளிப்பருவம் அழகானதுதான். ஆனால் திரும்ப அதை அனுபவிக்கனும்னு நினைக்கிறதெல்லாம் முட்டாள்தனம். அடுத்தடுத்த நினைவுகளைச் சேமிப்பதே முக்கியம்.”

சரி நமது டிங்குவோட டைரிய திறக்கலாம்....... வானில் இருந்த புகைமூட்டம் கலைந்து.... லொக்கேசன் கோயம்பத்தூரை ஸ்கேன் செய்தது. பச்சை கம்பளம் விரித்தது போல பசுமையான அழகிய செம்பியநல்லூர் கிராமம். கொஞ்சம் ஜூம் போனா, ஒரு நடுத்தர கிராமத்து தனியார் பள்ளி. இன்னும் கொஞ்சம் ஜூம் போலாம்... நாலாம் வகுப்பு.. முதல் இரண்டு பெஞ்சில் மாணவர்கள் வாய்ப்பாட்டை ஒருவருக்கொருவர் ஒப்பித்துக் கொண்டிருந்தனர், முன்றாவது நான்காவது வரிசையில் மாணவர்கள் அன்றைய ஹோம்வொர்க்களை அவசரமாக எழுதிக் கொண்டிருந்தனர்.



கடைசி பெஞ்சில் ஒரு மொறட்டு தடியன் எந்தக் கவலையும் இல்லாமல் டேபிளில் தாளம் போட்டுக் கொண்டிருந்தான்.. அது நான் இல்லை... ஆவன ஹீரோனு நெனச்சுகாதீங்க, வில்லனும் இல்ல அவன் ஒரு காமடி பீஸ்தான் சாமிநாதன். எங்கடா ஹீரோவ காணமென்று கேக்காதிங்க அது வேற லெவல் என்ட்ரி இருக்கு.  

சரி இப்போது ஹீரோயினி என்ட்ரிக்கு வருவோம்..... வகுப்பு கதவருகே சில்லறையைச் சிதறி விட்டது போல கொலுசு சத்தம், மல்லிகைப் பூ இட்லி கண்ணங்களுடன் தாமரை முகம் கொண்ட ஒரு புது முகம், மான்விழியின் மருட்சி அவ்விழிகள் துரு துரு கண்கள் அந்த வகுப்பறைக்குள் தான் அமர ஒரு இடம் தேடியது. அப்போது வகுப்பு ஆசிரியர் உள்ளே வரச் சரியாக இருந்தது, அனைத்து மாணவர்களும் எழுந்து ஆசிரியருக்கு வணக்கம் சொல்ல. 

கிளாஸ் டீச்சர்: “குட் மார்னிங் டு ஆல், டியர் ஸ்டுடன்ஸ், இவங்க பெயர் ஹேமா, இனி உங்களோடு தான் படிக்கப்போராங்க. ஹேமாக்கு எல்லோரும் களப் பண்ணி வெல்கம் பண்ணுங்கள்.. ஹேமா கோ அண்ட் டேக் யுவர் சீட்.”

கடைசி பெஞ்சில் ஒரு இடம் இருந்ததால் அங்குச் சென்று அமர்ந்தால்.

கிளாஸ் டீச்சர்: “எல்லோரும் உங்கள் ஹோம்வொர்க் புக்கை என் டேபிள் மேல் வையுங்கள்.”

புத்தகங்களை எண்ணிப்பார்த்து இரண்டு மட்டும் கம்மியா இருக்க, யார் இன்னிக்கு ஹோம்வொர்க் செய்யவில்லை என்று கேட்க, சாமிநாதன் சோக முகத்துடன் எழுந்தான்.


கிளாஸ் டீச்சர்: “தொரைக்கு என்ன ஆச்சு.” 

சாமிநாதன்: “காச்சல் மிஸ்.”

அப்போது கதவருகே, ஒரு கை மட்டும் தெரிய.. ஒரு கீச்சு குரலில்.. “மே ஐ கம் இன் மிஸ்.”

கிளாஸ் டீச்சர்: “எஸ், கம் இன்.” 

வகுப்பில் உள்ள முகங்கள் அனைத்தும் கதவை பார்க்க, புழுதி சூவுடன், மூச்சு வாங்கி, வியர்வைச் சிந்திய ஒரு முகம். அது வேற யாரும் இல்ல நான் தான் கதையுடைய நாயகன் என் பேரு பிரபுங்க. நம்ம பசங்கள் எல்லாம் என்ன செல்லமா டிங்கு’னு குப்பிடுவாங்க, நாயகன் என்ட்ரி கொஞ்சம் மொக்கை தான். என்ன பத்தி நானே சொல்லக்குடாது இருந்தாலும் கொஞ்சம் தெருஞ்சுக்குங்க. உண்டிவில்ல வச்சு தெரு லைட்டுகள தொம்சம் பண்ணுறது, கோலம் போட்ட வீடு வாசலில் தருமாற சைக்கிள் ஓட்டி அத அலங்கோலமாக்குகிறது, வீட்டில் டிவி பாக்க விடலனா டெரன்ஸ்பர்மர்ல கம்பி போட்டு ஊருக்கே கரண்ட இல்லாமல் பண்ணுகிறது. வெல்ல சட்டையை பார்த்தா அவங்கள் முதுகுல இங்கு அடிக்கிறது. பக்கத்து தோட்டத்தில் மாங்க, இளநி சுடுகிறது. தெரு நாய் வாழுல சரவெடி கட்டுகிறது, பிடிக்காத வாத்தியார் வீட்டு செவுத்துல வெங்காய வெடி வீசுறதுனு என் வீர தீர செயல் போய்க்கொண்டே இருக்கும். இப்போது கதைக்குள்ள வருவோம்.       
      
கிளாஸ் டீச்சர்: “நீயா.. ம்ம் அடுத்த தோரையும் வந்தாச்சு. என்ன ஆச்சுடா, ஏன் இப்பட்டி மூச்சு வாங்க ஓடி வந்திருக்கிற.” 

நான் : “லேட் ஆய்டுச்சு மிஸ்.”

கிளாஸ் டீச்சர்: “சரி, ஏன் லேட்டு.”

நான் : “லேட் ஆனதால் லேட் ஆய்டுச்சு மிஸ்.” 

வகுப்பில் அனைவரும் சிரிக்க, ஆசிரியர் கடுப்பாகி (விட்ட நம்மல மேண்டலாகிடுவான்) போய் உன் சீட்டில் உட்கார் என்றார்.  

என் சீட்டை பார்க்க.. "சாமிநாதன் பக்கத்தில் ஒரு அழகான புது பெண்ணா!!!." அவர்கள் இரண்டுபேரும் பேசிக்கொண்டிருந்ததை பார்த்தவாறே சாமிநாதனை நான் முறைத்தபடி அருகில் சென்று தள்ளி உக்காருட என் ஒரு அதட்ட இருவருக்கும் இடையே சென்று அமர்ந்தேன்.

கிளாஸ் டீச்சர்: “பிரபு உன் ஹோம்வொர்க் புக்கை கொண்டுவா.”

வந்ததுமே பஞ்சாயத்தா... நான் அவசரமாகப் புத்தக பையை உள்ளே பார்க்க அதில் ஒரே ஒரு நோட்டு மட்டும் இருந்தது(வீட்டில் ஹோம்வொர்க் செஞ்சாத்தானே இருக்கும்). ஹேமா இதைப் பார்த்துவிட்டு புன்முறுவல் செய்ததை ஓரக்கன்னல் நோட்டம் விட்டேன். ஆஹா புதுப்பெண் முன்னாடி இப்படி பல்பு ஆகுதே, எப்படிச் சமாளிக்கிறது என்று யோசித்தேன்.    

நான் : கொஞ்சம் சோகமாக “சாரி மிஸ், வீட்டுப்பாடம் வீட்டில் வச்சுட்டு வந்துட்டேன்”.

கிளாஸ் டீச்சர்: “நீயும் வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே.” 

நான் : “பிரமிசா மறந்துட்டேன் மிஸ்”

கிளாஸ் டீச்சர்: நேத்து ஹோம்வொர்க் கேட்டதுக்கு டைம் டேபிள் மாத்தி புக்ஸ் கொண்டு வந்துட்டேன்னு சொன்ன,

நான் : என் மனதுக்குள், "நேத்து அப்படியா சொன்னேன்."

கிளாஸ் டீச்சர்: அதுக்கு முன்னத்தினால் கல்யாணத்துக்கு போனேனு சொன்ன.

நான் : "!!!!!!!"

கிளாஸ் டீச்சர்: “டெய்லி புதுப் புது கதையா சொல்லு. நாளைக்கு உங்க அப்பா இல்லாமல் கிளாஸ்குள்ள வரக்குடாது, கெட் அவுட் பரம் மை கிளாஸ்.”

நான் : சாமிநாதனைப் பார்த்தவாறு “டேய் தடியா.. நீ எப்படி தப்பிச்ச.” 

சாமிநாதன் : “நீ நாளைக்கு சொல்லுலாம்னு இருந்த டயலாக் தான் சொன்னேன்.”

நான் : “அட பக்கி தடியா இதுக்கு தான் உன்கிட்ட எதுவும் சொல்லக்கூடாது... ம்ம்..  நாளைக்கு ரம்ஜான், நாளானைக்கு சண்டே, இரண்டு நாள் எஸ்கேப். மண்டே வேற பிளான் இருக்கு. நீ கிளாஸ் முடுஞ்சு வெளில வா உனக்கு செமையா இருக்கு”

சாமிநாதன் என்னை பார்த்து தன் பல்லை காட்ட நான் மெதுவாக வகுப்பை விட்டு வெளியே சென்றேன்.

கிளாஸ் டீச்சர்:  சாமிநாதன் உனக்கென்ன நான் தனியா சொல்லனுமா. கெட் அவுட், என அதட்ட வேகமாக வெளியே வந்தான்.

 நான் : பாத்தியா டா நீயே நினச்சாலும் நம்மள பிரிக்க முடியாது.

இருவரும் கைகளை தட்டிக்கொண்டு நண்பன்டா என்றனர்.
 
அடுத்த வகுப்பு தொடங்கியதும் கணக்கு ஆசிரியர் ஹேமாவை வேற இருக்கைக்கு இடம் மாற்றி விட்டார்.

ஹேமா பக்கத்தில் இருந்த பொண்ணு க்லாஸ் நடக்கும் போது ஏதோ கமண்ட் அடுச்சா. என்னை யாரோ கமண்ட் பண்ணுற சத்தம் கேட்டு நான் ஹேமாவைப் பார்க்கும் போது அவள் என்னை பார்த்து சிரித்தால். அவள் பக்கத்தில் இருந்த பொண்னோ கண்டுக்காம போர்ட பார்த்துட்டு இருந்தால். ஹேமா தான் கமண்ட்டு அடிச்சிருப்பா என நினைச்சு நான் அவகிட்ட சண்டை போட போனேன். ஹேமா எவ்வளவோ சொன்னால், "நான் கமண்ட் அடிக்கலன்னு" நான் கேட்கவே இல்லை.

கோவத்துல ஹேமா என்னை கண்டபடி திட்டி புட்டால். ஹேமாவின் கோவம் குறைஞ்ச பிறகு தான் அவளுக்கு தோனுச்சு... நான் சார்கிட்ட சொல்லிடுவேன்னு. அவளுக்கு பயமா போச்சு. அவள் சார் கிட்ட போய் அவள் திட்டினதை நான் அவளை  திட்டினேன்னு சொல்லி முந்திக்கிட்டால். முனாடியே இந்த கணக்கு சார்ருக்கும் எனக்கும் ஏலாம் பொருத்தம்  கம்ப்ளைன்ட் பன்னுனதுவேற பொண்ணு, நான் தான் சேட்டை பண்ணிருப்பேன்னு என்னை கூப்பிட்டு சம டோஸ் விட்டார். நான்  அவளை அப்போ ஒரு பார்வை பார்த்தேன் பாருங்க ஹேமா ரொம்ப பயந்துட்டா.


வகுப்பு முடுஞ்சதும் தான் சாமினாதன் எண்ணிடம் சொன்னான், ஹமா பக்கத்திலிருந்த பொண்ணுதான் என்ன கமன்ட் பண்ணுனான்னு. ச்சே இந்த புள்ளைய தப்பா நெனச்சுடோம்னு எனக்கு கஷ்டமா இருந்தது. எப்படியாவது ஹேமா கிட்ட சாரி சொல்லனும்னு தோனுச்சு. அடுத்தநாள் ரம்ஜான் விடுமுறை அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அதனால் எப்படியாவது ஹேமாவுடன் இன்று பேச வேண்டும் என்று நான் வேகமாக செல்ல ஒரு கை என் தோள்பட்டையை பிடித்து நிறுத்தியது.


யாருன்னு திரும்பி பார்த்தால் என்ன கமன்ட் பண்ணுன அந்த பொண்ணு தான் அனித்தா !!!!!!!!!!!!

யார் இந்த அனித்தா ? ஹேமா டிங்கு நடப்பு இணையுமா? இல்ல அனிதா ஹேமாக்கு டிங்குவிக்கும் வில்லியா இருப்பாளா ?
 
அடுத்த பதிவு  டிங்கு டைரி - 2 "ஊர் முழுக்க தேடுன பழம்" இந்த லிங்கில் ......... 

------------------------------------------------------------------------------------------------------------------------------


“நீ பேசிக் கொண்டே நடந்து வரும் அழகில் இந்த சாலைகள் அனைத்தும் பூ சோலையாக மாறியது”

மொட்ட கடிதம் அனுப்ப : AnandBusubee.Sarahah.com  

 

கருத்துரையிடுக Disqus

 
Top