0
  
 
ருபாய் 18,000.00 செலவில் பொருத்தப்பட்ட இந்த சிறிய கருவியின் மூலம் நண்பரின் இல்லத்தில் நேற்று பெய்த 1 மணி நேர மழையில் சேமிக்கப்பட்ட மழை நீரின் அளவு 15,000 லிட்டர், மேலும் தொடர்ந்து அவரின் ஆழ்குழாய் கிணற்றிற்கு இந்த சேகரிப்பு செல்கிறது, 
 
இதன் மூலம் நிலத்தடி நீர் உயரும், கர்நாடக மாநிலம் அனைத்து இல்லங்களில் இதை பொருத்த பெரும் முயற்சி எடுத்து வருகிறது. 
 
தமிழக அரசு பூகோள ரீதியாக இனி அணைகள் கட்ட இயலாது என்று தெரிவித்த உள்ள நிலையில், இது போன்ற நுட்பங்களை பொருத்த தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு அறிவுறுத்துவதோடு நில்லாமல் தானே முன்மாதிரியாக ,அரசு துறை சார்ந்த ஏரளமான அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் நிறுவி, பெய்கின்ற மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து நிலத்தடி நீர் உயரவும் , அடுத்து வரும் பல மாதங்களுக்கு சுத்தமான மழை நீரை அன்றாட பயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம்.

பதிவிட்டுள்ள படங்களை அழுத்தி பார்க்கவும் அனைத்து விபரங்களும் உள்ளது மேலும் விபரங்களுக்கு அதில் உள்ள எண்ணில் தொடர்பு கொண்டு பேசவும்

தெர்மோகோல் கொண்டு அணை நீரை காப்பதை விட இது ஒரு எளிய வழிமுறை என்பதை ஆற்றல்மிகுந்த ஆள்வோர் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டிய நேரமிது.

கருத்துரையிடுக Disqus

 
Top