0

“என் வாழ்க்கை எனக்காகத்தான் வாழ வேண்டும் என நினைத்தாலும் வாழ முடிவதில்லை! 
யாரோ ஒருவரின் அன்பிற்கு அடிமையாகித்தான் வாழ்கிறோம்!” 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய  ""

நான் கண்களை மூட அவள் பக்கத்தில் இடுந்த ஒரு செடியில் பூவை பறித்து என் கையில் வைத்துவிட்டு ஒரே ஓட்டமாக ஓடினால்.

அவள் குடுத்த பூவை பார்த்தவாறே நிற்க அனித்தாவும் சாமிநாதனும் என்னைப் பார்க்க அதே இடத்திற்கு வந்தனர். ஆஹா இவவேற பூவா என் கைல குடுத்துட்டு போய்டா இதுகள எப்படி சமாளிக்கிறது என்று யோசித்துக்கொண்டிருக்க...

சாமினாதன் : என்னடா ஆச்சு உனக்கு, ஆடாம ஒரு இடத்தில நில்லுட.. 

நான் : ஏய் சவுண்ட் கம்மிய பேசு... 

சாமினாதன் : இங்க யார் இருகுராங்கனு சவுண்ட் கம்மிய பேசசொல்லுற.. 

அனித்தா : சரி என்னனு சொல்லு.

நான் : நம்ம கிளாஸ் ஹேமால.....

சாமினாதன் : அவளுக்கு இப்ப என்ன. 

நான் : ஒரு வெக்கத்துடன் ... அவளுக்கு ஒண்ணும் இல்ல...... 

அனித்தா : என்னனு சொல்லு.. இல்லனா ரகு கிட்ட சொல்லிடுவேன். 

நான் : வந்து... வந்து... ஹேமா என்ன லவ் பண்றா. 

சாமினாதன் : என்னடா சொல்லுற!!!!!. 

அணித்தா : என்ன ஹெமாவ!!!!!.. எப்படிட சொல்லுற, அன்ணைக்கு உன்கூடவே பேச மாட்டேனு தானே சொன்னா.  எங்கையோ தப்பு நடந்திருக்குது.

நான் : என் பர்த்டேக்கு இன்னிக்கு எல்லாருக்கும் மிட்டாய் கொடுத்தேன்ல.. 

சாமினாதன் : ஆமாண்டா நான் நாலு மிட்டாய் கம்மியா எடுத்துட்டேன். இப்ப இருந்த ஒரு நாலு குடுக்கிறியா .. 

நான் : என்ன பேச விடுறையா... 

அணித்தா : சரி சொல்லு ..

நான் : ஹேமாக்கு நான் கேக் கொடுத்தேனா ..

சாமினாதன் : டேய் துரோகி.. எனக்கு மிட்டாய் அவளுக்கு மட்டும் கேக்கா.. 

அணித்தா : நேத்து வந்தவ உனக்கு முக்கியமா போய்டாலா ... 

சாமினாதன் : எங்க அம்மாகூட சொல்லுச்சு. அவன்கூட சேராத ஒருநாள் உன்ன கழட்டி விட்டுடுவானு.. 

நான் : ஆமா நான்தான் உன்ன வாவானு கூப்டனா.. 

அனித்தா : இப்போ எதுக்கு வீணா சண்டை. 

நான் : என் பர்த்டேக்கு நீ என்ன கிபிட் கொடுத்த அனித்தா.. 

அனித்தா : நீ இன்னும் என் கிப்ட பாக்கலையா. 

நான் : பாக்கள என்னன்னு இப்போ சொல்லு. 

அனித்தா : கேளடாஸ்கோப்.. 

நான் : சாமி உன்னுடையது.. 

சாமினாதன் : பாத்தியா என்கிட்ட கிபிட் கேட்டு என்ன அசிங்கபடுத்துற.. நாமா அப்படியா பழகுறோம். 

நான் : ம்ம்.. ஹேமா குடுத்தா கிபிட் எல்லாம் நீங்க குடுத்த கிபிட் முன்னாடி தூசுதான். 

அனித்தா : அப்படி என்ன டா கிப்ட் கொடுத்தா!!!!
நான் : என் கண்ண மூடி நிக்க சொன்னா.. 

சாமினாதன் : என்ன அவ ஓடிப்போய் ஒழுஞ்சுடாலா.. 

நான் : டேய் குறுக்க பேசாத... எனக்கு ப்லோவா வராது. 

அனித்தா : சரி... நீ மேல சொல்லு.. 

சாமினாதன் : எங்க மரத்துக்கு மேலையா. 

நான் : இல்ல மரத்துக்கு கீழ.. 

அனித்தா : சுத்தி வளைக்காம என்னன்னு டக்குனு சொல்லு.

நான் : என் கால் கட்டை விரல் வைத்து தரையில் அரை வட்டம் போட்டவாறு “என் பக்கத்தில் வந்து.... என் கைய பிடிச்சா.. அப்பறம் ரொம்ப பக்கமா வந்து என்ன கிஸ் பண்ணிட்டா.”

சாமினாதன் : இது தான் உங்க ஊர்ல கிப்டா.. நானும் அதே கிப்ட உனக்கு இப்போ தரட்டுமா.. 

நான் : சீ போடா டேய் என நான் துரத்த அவன் ஓடினான். 
 
முலாண்டு பரிச்சையும் முடிந்து ஹேமா விடுமுறைக்கு அவள் ஊர் சென்றால். நானும் என் சொந்தகாரர் வீட்டுக்கு சென்றேன். விடுமுறை முடிந்து எனக்காக காத்திருந்தது ஒரு அதிர்சி.
   
"சாமியுடன் மோதல் " அடுத்த பகுதி தொடரும்.........    

சாமினாதனுக்கு நான் சொன்ன பொய் தெரிஞ்சிருக்குமா?

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"காதல் முத்தம் கன்னத்தில் பதித்து என் இதயம் நுழைந்து மூச்சுக் காற்றை பரித்துச் சென்றாய், உன் மூச்சுக்காக இப்போது மூர்ச்சையாகி நான்..."

கருத்துரையிடுக Disqus

 
Top