0

“திட்டுவதற்குக் காரணத்தை தேடாதே, தேடிவந்த உன்னவனை கைவிடாதே,  நீ எனக்கானவள் திட்டினாலும் உன்னை விட்டு பிரியப் போவதில்லை”
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 4 சிவந்த கன்னங்கள்"
 
இன்னிக்கு என் பிறந்த நாள்.. என்னைக் கவர்ந்த புத்தாடையும் கை நிறைய மிட்டாய்களும், கன்னகுழி சிரிப்பும், ஒரே ஆனந்தமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஹேமா அறைந்த அந்த அறை இந்த வருட பிறந்தநாளே வேண்டாம் என்ற நிலைக்கு வந்தேன். அன்றைய தனம் விடுமுறை என்பதால் என் அம்மா என் பிறந்தானாளுக்காக வடை பாயாசம் என் ஒரு விருந்துக்குத் தயார் செய்தார். வீட்டில் இருந்தால் சந்தோசமாக இருப்பது போல நடிக்கவேண்டும் என்று யோசித்தேன். சரி இந்த நேரத்தில் சீக்கிரம் போய் ஹேமாவை பார்த்து நேரில் மன்னிப்பு கேட்கலாம் என என் சைக்கிளை எடுத்துக்கொண்டு வரைந்தேன். ஹேமா வீடு பூடியிருப்பதை பார்த்ததும் முகம் வாடி வீடு வந்தேன்.

அம்மா என்னைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றால் அவள் வீடு தாண்டும் வரை என் பார்வை முழுவதும் அவள் வீட்டுக் கதவிலேயே இருந்தது. அந்த நாள் மாலை வரை பல நூறு தடவை அவள் வீட்டுக் கதவை தான் பார்த்தேன். வாடிய முகத்தோடு ஜன்னலோரம் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கொலுசு சத்தம் கோட்டக ஹேமா அவள் அம்மாவின் கைகளை பிடித்துக்கொண்டு என் வீட்டுக் கதவையே பார்த்தவாறு சென்றால். ஜீரோ வாட்ஸ் பல்பிளிருந்து ஆயிரம் வாட்ஸ் நெலவு போல என் முகம் மாறியது. அவள் அம்மா வீட்டுக்குள் சென்றதும், ஹேமாவிடம் நான் செஞ்சது தப்பு தான். உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் உன்ன சந்தொசபடுத்தலம்னு நெனச்சு அது இப்படி சொதப்பிடுச்சு. நீ சொன்னதும் சரிதான் அடுத்தவங்க கிப்ட மத்தவங்களுக்கு கொடுக்ககூடாது. இன்னிக்கு ஒரு முக்கியமான அத உன்கிட்ட தான் முதல்ல சொல்லனும்னு காலைல இருந்து வெயிட் பண்ணுறேன். அரசமர விநாயகர் கோவிலுக்குவா நான் உனக்காக அங்க காத்திட்டு இருப்பேன்.

வீட்டில் இருந்த கேக்கை எடுத்துக்கொண்டு நான் கோவிலுக்கு சென்றேன். சிறிது நேரத்தில் அவளும் வந்தால்


ஹேமா : எதுக்கு இங்க வரச்சொன்ன. உன்மேல இன்னும் கோபம் இருக்கு. நீ மன்னிப்பு கேட்டதால வந்தேன்.  

நான் : நீ எங்க போன காலைல இருந்து உன்ன காணோம்.

ஹேமா : எங்க அம்மாவோடு என் சொந்தகாரங்க வீட்டுக்குப் போனோம் இப்பதான் வந்தோம்.

நான் : உன்ன காணம்னு ரொம்ப தேடினேன்.

ஹேமா : எதோ என்கிட்டே சொல்லனும்னு சொன்ன என்ன அது ?

நான் : இன்னிக்கு என் பர்த்டே, முதல் கேக் உனக்குத் தான் கொடுக்க நெனசேன். இப்போ அது கடைசி கேக்கா இருக்கு.  

ஹேமா : நீ நேத்தே சொல்லியிருந்தா முதல் கேக் நான் வாங்கியிருப்பேன். சரி விடு.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நான் : உன்கிட்ட வாச்ச கொடுத்து இத சொல்லத்தான் வந்தேன் ஆனா எல்லாம் தலைகீழ போய்டுச்சு..  தேங்க்ஸ்.. என்ன மன்னிச்சிட்டில..

 ஹேமா : ம்ம் உன் பர்த்டே வச்சுட்டு கேக்குற சரி. இனிமேல் ஏதாவது என்கிட்ட போய் சொன்ன!!! 

 நான் : கொஞ்சம் சிரித்தவாறே, எனக்கு கிபிட் எதுவும் இல்லையா?.

ஹேமா : கிப்டா... ம்ம்ம் .. சரி குடுத்துட்டா போச்சு.

நான் : உன் கிப்ட்டுக்காகதான் ரொம்ப எதிர்பார்த்தேன்.
   
ஹேமா : சரி உன் கண்களை மூடி கையை நீட்டு.



நான் கண்களை மூட அவளது கிப்டை எனக்குக் கொடுத்துவிட்டு ஒரே ஓட்டமாக ஓடினால்.

"என்ன கிபிட் அது" அடுத்த பகுதி .........

இந்த விஷயத்தை அனிதா சாமினாதனுக்கு தெரியாம மறைப்பானா?  என்ன கிப்ட் கொடுத்திருப்பா?

முந்தைய டைரிகள் [1] [2] [3]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


"உலகின் மிகப் அழகான காதல் கவிதை என்றாலும் காதலியின் மிக அழகான மென் பரிசு ரசித்துமிழும் அந்த 'ம்' எனும் சப்தம். "

கருத்துரையிடுக Disqus

 
Top