0

 


ஆதார் மூலமாகப் பல பண மோசடிகள் நடைபெறுவதாகக் கடந்த சில மாதங்களாகப் பல செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை இந்திய தனி நபர் அடையாள ஆணையமானது மறுத்து வந்தாலும் தற்போது இரண்டு அடுக்கு அதார் பாதுகாப்பு சேவை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்திய தனி நபர் அடையாள ஆணையமானது புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் விரிச்சுவல் ஐடி மூலம் ஆதார் கார்டு பயன்படுத்துபவர்களை மேலும் பாதுகாப்பாகத் தங்களது விவரங்களைப் பாதுகாக்கும் சேவையினை வழங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த விரிச்சுவல் ஐடியினை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம் என்றும் ஆதார் இணையதளத்தில் இதற்கான சேவை வழங்கப்படும் என்றும் அதில் ஆதார் எண்ணிற்குப் பதிலாக விர்ச்சுவல் ஐடியினை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

எனவே விரிச்சுவல் ஐடி குறித்த முழு விவரங்களையும் விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

விர்ச்சுவல் ஐடி எப்படி இருக்கும்?
ஆதார் எண்ணைப் போன்றே விரிச்சுவல் ஐடியும் 16 இலக்கில் இருக்கும், இது ஆதார் பையோமெட்ரிக் விவரங்களுடன் இணைக்கப்பட்டுப் பயனரின் பெயர், முகவரி மற்றும் புகைப்படம் போன்ற சரிபார்ப்பிற்கு ஏற்ற விவரங்களை மட்டும் அளிக்கும்.
ஆதார் எண்
ஆதார் அங்கிகாரம் பெறும் போது விரிச்சுவல் ஐடியானது ஆதார் எண்ணை பகிரக்கூடாது என்பதற்கான என்பதற்கான தெரிவும் அளிக்கப்படும்.
எத்தனை விரிச்சுவல் ஐடி உருவாக்க முடியும்?
ஆதார் எண் வைத்துள்ள பயனர்கள் எவ்வளவு விரிச்சுவல் ஐடி வேண்டும் என்றாலும் உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால் புதிய ஐடி உருவாக்கப்பட்ட உடன் பழைய ஐடி நீக்கப்படும்.
வெர்ஹோப் அல்காரிதம்
16 இலக்க விரிச்சுவல் ஐடியானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்கும். கடைசி இலக்க விரிச்சுவல் எண்ணாது ஆதார் எண்ணை வெர்ஹோப் அல்காரிதம் உதவியுடன் பெற்றுக்கொள்ளும். ஒரு ஆதார் கார்டுக்கு ஒரு விரிச்சுவல் ஐடி மட்டுமே இருக்கும். வெர்ஹோப் அல்காரிதம் என்பது டச்சு கணிதவியலாளர் ஜேக்கப்ஸ் வெர்ஹோஃப் என்பவரால் 1969-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
காலாவதி காலம்
ஆதார் எண்ணிற்கு உறுவாக்காப்படும் விரிசூவல் ஐடியானது சில நாட்கள் மட்டுமே இயங்கும் பின்னர்ப் புதிய விரிச்சுவல் ஐடியினை உருவாக்க வேண்டும்.
வரம்பிற்குட்பட்ட KYC
விரிச்சுவல் ஐடி சேவை மூலமாக KYC சரிபார்க்க இனு வரம்பிற்குட்பட்ட விவரங்கள் மட்டுமே கிடைக்கும்.
எப்போது முதல் விரிச்சுவல் ஐடிக்கு அனுமதி?
விரிச்சுவல் ஐடியை 2018 மார்ச் மாதம் சேவைக்குக் கொண்டு வர உள்ளனர் என்று இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
எப்போது முதல் விரிச்சுவல் ஐடி கட்டாயம்?
ஆதார் சரிபார்ப்பு முறையினைப் பயன்படுத்தும் அணைத்து ஏஜன்சிகளும் 2018 ஜூன் 1 முதல் ஆதார் எண்ணிற்குப் பதிலாக விரிச்சுவல் ஐடியினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக Disqus

 
Top