0

தேவையான பொருட்கள் :
தோசை மாவு – ஒரு கப்,
நறுக்கிய பாலக்கீரை – ஒரு கப்,
கேரட் துருவல் – ஒரு கப்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்),
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – சிறிதளவு.
செய்முறை:
பாலக்கீரையுடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு வேகவிடவும்.
ஆறியபின் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
தோசை மாவுடன் அரைத்த விழுது, கேரட் துருவல் சேர்த்துக் கலக்கவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சத்தான பாலக் – கேரட் தோசை ரெடி.

கருத்துரையிடுக Disqus

 
Top